India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவள்ளூரில் பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு ஆன்லைன் பஸ் பாஸ் வழங்கிட சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன. மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், பூந்தமல்லி பார்வையற்றோருக்கான அரசு மேல்நிலைப் பள்ளி ஆகிய இடங்களில் வரும் இன்று, நாளை மற்றும் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் இந்த முகாம்கள் நடைபெற உள்ளன. இதில் பார்வை மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டையுடன் பங்கேறு பயன்பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் புழல் ஏரியில் 2,479 மில்லியன் கன அடி தண்ணீரும், சோழவரம் ஏரியில் 84 மில்லியன் கன அடி தண்ணீரும் செம்பரம்பாக்கம் ஏரியில் 1,390 மில்லியன் கன அடி தண்ணீரும், பூண்டி ஏரியில் 107 மில்லியன் கன அடி தண்ணீரும், கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரியில் 305 மில்லியன் கன அடி தண்ணீரும் இருப்பில் உள்ளது என இன்று (ஆக.20) காலை பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மின் இணைப்புக்கு லஞ்சம் வாங்கிய மின் பொறியாளருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து, திருவள்ளூர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அயப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார் 2014 ஆம் ஆண்டு புதிய வீட்டிற்கான மின் இணைப்புக்காக, அயப்பாக்கம் மின்வாரிய அலுவலகத்தில் விண்ணிப்பித்தார். அங்கு உதவி பொறியாளராக பணியாற்றி வந்த சுகுமார் ரூ.2,000 லஞ்சம் கேட்டுள்ளார். இந்த வழக்கில் நேற்று நீதிபதி மோகன் தீர்ப்பளித்தார்.
அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள திருவள்ளூர் கிளையில் குறு, சிறு, நடுத்தர தொழில்களுக்கான சிறப்பு கடன் விழா நேற்று தொடங்கியது. இந்த வாய்ப்பினை புதிய தொழில் முனைவோர், தொழிலதிபர்கள் பயன்படுத்தி, தொழில் கடன், மத்திய, மாநில அரசுகளின் மானிய சேவைகளை பயன்படுத்தி கொள்ளவும். மேலும் தகவல்களுக்கு 9962948002, 9444396845, 9445023485, 9551670581 என்ற எண்களுக்கு தொடர்பு கொள்ளுமாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபுசங்கர் தலைமையில் கள்ளச்சாராயம் கண்காணித்தல் மற்றும் ஒழித்தல், கள்ளத்தனமாக மது விற்பனையை ஒழித்தல் தொடர்பாக அலுவலர்கள் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து வாராந்திர ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் ஆட்சியர் அலுவலக ஊழியர்கள் கலந்துகொண்டனர்.
திருவள்ளூர் சாரகத்தில் அதிகாரி நாகபுஷணம், ஊத்துக்கோட்டை சாரகத்தில் அதிகாரி முரளிதாஸ், திருத்தணி சாரகத்தில் அதிகாரி ரவிச்சந்திரன், கும்மிடிப்பூண்டி சாரகத்தில் அதிகாரி வெங்கடேசன் ஆகியோர் இன்று(19/08/2024) இரவு ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். இந்த அதிகாரிகளின் தொலைபேசி எண்களும் வெளியிடப்பட்டுள்ளன. எனவே பொதுமக்கள் அவசர உதவிக்கு மேற்கண்ட அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஆற்காடு சுரேஷின் மனைவி பொற்கொடியை கைது செய்த செம்பியம் போலீசார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். ஆந்திராவில் பதுங்கியிருந்த பொற்கொடியை கைது செய்ததையடுத்து சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் அவரை காவல்துறையினர் ஆஜர்படுத்தினர். இதனையடுத்து பொற்கொடியை செப்டம்பர் 2-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்க எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
3 விஷயங்களில் மன உளைச்சலுக்கு ஆளானதால் தான் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு சம்மதம் தெரிவித்தாக அஸ்வத்தாமன் வாக்குமூலம் அளித்துள்ளார். “ஒரக்காடு நிலப்பிரச்சனையில் என்னை உள்ளே நுழைய விடாமல் செய்தது, மீஞ்சூரில் காங்கிரஸ் பிரமுகர் ஜெயப்பிரகாஷை துப்பாக்கியைக் காட்டி மிரட்டிய வழக்கில் என் மீது புகார் அளித்தது, BSP மாவட்டச் செயலாளர் தென்னரசு கொலை வழக்கில் என் தந்தை நாகேந்திரனை குற்றவாளியாக சேர்த்தது” என்றார்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், ரவுடி ஆற்காடு சுரேஷின் மனைவியை தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர். ஆற்காடு சுரேஷின் நினைவுநாளான நேற்று, ஆந்திராவில் பதுங்கி இருந்த அவரை தமிழக சிறப்புப்படை போலீசார் கைது செய்தனர். இந்த கொலை வழக்கில் இவருக்கு ஏதேனும் தொடர்பு உள்ளதா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், ரவுடி நாகேந்திரன் மற்றும் அஸ்வத்தாமனிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருத்தணியில் பிரசித்த பெற்ற முருகன் கோயில் அமைந்துள்ளது. இங்கு ஆவணி அவிட்டம், பவித்ர உற்சவ விழா இன்று நடைபெற உள்ளது. இதையொட்டி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்ய உள்ளதால், பிற்பகல் 12 மணி முதல் மாலை 4 மணி வரை, கோயில் நடை அடைக்கப்பட்டு பக்தர்களுக்கு தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மாலை 4 மணிக்கு மேல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.