India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஆவடி சுற்றுவட்டார பகுதிகளில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (ஆக.22) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படவுள்ளது. அதன்படி, வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, காமராஜர் நகர், ஆவடி மார்க்கெட், அண்ணாமலை நகர், கௌரிபேட்டை, ஜெ.பி எஸ்டேட், வசந்தம் நகர் கோவர்த்தனகிரி, பருத்திப்பட்டு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை ஏற்படும் என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.
கும்மிடிப்பூண்டி ஒன்றியம் தேர்வாய் கண்டிகை கிராமத்தில் உள்ள ஆதிதிராவிடர் மேல்நிலைப் பள்ளியில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவிகளுக்கு திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் கலந்து கொண்டு பரிசு வழங்கி பாராட்டி கௌரவித்தார். நிகழ்ச்சியில் அதிகாரிகள், தலைமை ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் கடம்பத்தூர் உள்ளிட்ட நான்கு வட்டாரங்களில் 198 ஊராட்சிகளில் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் புதிய தொழில் முனைவோர்களுக்கு தொழில் திட்டம் தயாரித்தல், மதிப்பீடு செய்தல், தொழில் நுட்பங்கள் அளித்தல், திறன் வளர்ப்பு குறித்த விவரங்கள் அளித்தல் செய்து வருகிறது. தேவைப்படுவோர் மதி சிறகுகள் தொழில் மையத்தை செல்போன் எண் 97 87 89 9 283 தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காக்களூர் பால் பண்னையில் பெண் உயிரிழந்ததற்கு கண்டனம் தெரிவித்து எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ஆவின் நிறுவனத்தின் முறையான பாதுகாப்பு நடவடிக்கைகள் இல்லாத காரணத்தாலே, சேலத்தை சேர்ந்த பெண் கன்வேயர் பெல்ட்டில் சிக்கி உயிரிழந்துள்ளார். அவரது குடும்பத்தாருக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும், பட்டாசு ஆலை முதல் பால் பண்ணை வரை பாதுகாப்பற்ற நிலை உள்ளதாக தெரிவித்துள்ளார்.
திருத்தணி கோட்டத்திற்கான போலீஸ் சூப்பிரண்டாக இருந்த விக்னேஷ் தமிழ்மாறன், கடந்த வாரம் சென்னையில் உள்ள தமிழ்நாடு போலீஸ் உயர் பயிற்சியகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக, திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நில அபகரிப்பு பிரிவில் பணியாற்றி வந்த கந்தன், திருத்தணி டி.எஸ்.பி.யாக பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டை முதல்வர் ஸ்டாலின் சென்னையில் இன்று திறந்து வைத்தார். அதில், ஹாரிசன் டெவலப்பர்ஸ் நிறுவனம் (Horizon Developers) திருவள்ளூர் மாவட்டத்தில் ரூ.200 கோடி முதலீடு செய்துள்ளது. இதன் மூலம் மாவட்டத்தில் 1,500 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், ரூ.125 கோடி முதலீட்டில் ஆம்ரோன் (Omron) ஹெல்த் கேர் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் காக்கலூர் பகுதியில் உள்ள ஆவின் பால்பண்ணையில், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த உமா மகேஸ்வரி வேலை செய்து வந்தார். நேற்றிரவு, பணியின்போது அவரது துப்பட்டா மற்றும் தலைமுடி இயந்திரத்தில் சிக்கியது. இதில், அவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். சம்பவ இடத்திற்கு விரைந்த திருவள்ளூர் டி.எஸ்.பி. கந்தன் தலைமையிலான போலீசார், உடலை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.
திருவள்ளூர், வி.எம்.நகரை சேர்ந்த தலைமையாசிரியர் கிருஷ்ணமாராஜ் (65) கடந்த 17ஆம் தேதி வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் திருப்பதி சென்றார். பின்னர் நேற்று (ஆக.19) கிருஷ்ணமாராஜ் வீடு திரும்பிய போது வீட்டின் கதவு போட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 40 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த திருவள்ளூர் போலீசார், கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
திருவள்ளூர் நகராட்சி வேடங்கிநல்லூரில் ரூ. 33 கோடியில் அமைய உள்ள ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தின் கட்டுமான பணிகள் குறித்து துறை அலுவலர்களுடன் திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி. ராஜேந்திரன் கலந்தாய்வு மேற்கொண்டார். சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் இன்று (20/08/24) நடைபெற்ற இந்த கலந்தாய்வில், துறை சார்ந்த அதிகாரிகள் பணிகள் குறித்த முழு விவரங்களை தெளிவாக விளக்கினர்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், திரைப்பட இயக்குநர் நெல்சனின் மனைவி மோனிஷாவிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்போ செந்திலின் கூட்டாளியான ரவுடி மொட்டை கிருஷ்ணனிடம் மோனிஷா பேசியுள்ளதால், மொட்டை கணேசனுக்கு மோனிஷா அடைக்கலம் கொடுத்தாரா? என்ற சந்தேகத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். அடுத்தகட்டமாக, இயக்குநர் நெல்சனிடமும் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
Sorry, no posts matched your criteria.