India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பூந்தமல்லி கிராமத்தில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் இன்று சோதனை மேற்கொண்டனர். அப்போது, மும்பையை சேர்ந்த வேணுகோபால் என்பவர் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ₹13, 84, 684 பணத்தை பறிமுதல் செய்து உரிய ஆவணங்களை சமர்ப்பித்து பணத்தை பெற்றுக் கொள்ளும்படி தெரிவித்தனர். பின்னர் பூந்தமல்லி அரசு கருவூலத்தில் இந்த பணம் ஒப்படைக்கப்பட்டது.
தேமுதிக சார்பில் திருவள்ளூர் (தனி) மக்களவைத் தொகுதியில் நல்லதம்பி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். மக்களவைத் தேர்தல் 2024ஐ ஒட்டி தமிழகத்தில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ள தேமுதிகவுக்கு 5 தொகுதிகள் பங்கீடு செய்யப்பட்டுள்ளன. அதனடிப்படையில், வேட்பாளர்களை தேமுதிக தற்போது அறிவித்துள்ளது. விஜயகாந்த் இல்லாமல் தேமுதிக சந்திக்கும் முதல் தேர்தல் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
திருவள்ளூர் மக்களவைத் தொகுதியின் தே.ஜ. கூட்டணியில் பாஜக வேட்பாளராக பொன்.பாலகணபதி அறிவிக்கப்பட்டுள்ளார். மக்களவைத் தேர்தல் 2024 வரும் ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்காக தமிழகத்தில் பாஜக நேற்று 9 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது 15 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளது.
திருவள்ளூர் (தனி) எம்பி தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளராக சசிகாந்த் செந்தில் அறிவிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. எம்பி தேர்தல் 2024 வரும் ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்காக திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த 10 தொகுதிகளுக்கும் காங்கிரஸ் சார்பில் இன்று மாலை வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படலாம் எனத் தெரிகிறது.
சென்னையிலிருந்து கும்மிடிப்பூண்டி சூளூர்பேட்டைக்கு பொன்னேரி, மீஞ்சூர், நந்தியம்பாக்கம், எண்ணூர் வழியாக தினமும் 40-க்கும் மேற்பட்ட ரயில்கள் வந்து செல்கின்றன. இந்நிலையில் பராமரிப்பு பணி காரணமாக கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் நாளையும், நாளை மறுநாளும் (மார்ச் 23, 24) ஆறு ரயில்கள் பகுதி ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ரெட்டம்பேடு கூட்டு சாலைகள் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் கும்மிடிப்பூண்டி காவல் துணை கண்காணிப்பாளர் கிரியா சக்தி தலைமையில் நேற்று இரவு அனைத்து கட்சி நிர்வாகிகளுடன் தேர்தல் விதிமுறைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு கட்சிகளைச் சார்ந்த சுமார் 30-க்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
பூந்தமல்லியை சேர்ந்தவர் சிவகுமார். இவர் பூந்தமல்லி அரசு பள்ளி அருகே கற்றாழை ஜூஸ் வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் இவர் குடிப்பதை நிறுத்தி வெற்றிகரமாக 100 நாட்கள் ஆனதாகவும் தனக்கு இருந்த ரூ. 80 ஆயிரம் கடனை அடைத்து விட்டதாகவும் தற்போது நல்ல உடல் நிலையில் இருப்பதாகவும் பேனர் வைத்துள்ளார். இது அப்பகுதி மக்களை வியப்படைய செய்துள்ளது.
திருவள்ளூர், பூவிருந்தவல்லி அருகே உள்ள ஆண்டர்சன் பேட்டை பூவையார் திடலில் புரட்சி பாரதம் கட்சியின் அவசர ஆலோசனை கூட்டம், நாளை (மார்ச்22) காலை 10 மணி அளவில் நடைபெறும் என அக்கட்சியின் தலைவர் ஜெகன் மூர்த்தி தெரிவித்துள்ளார். இதில் மாவட்ட மாநில நிர்வாகிகள் பங்கேற்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அதிமுக கூட்டணியில் இக்கட்சிக்கு சீட் ஒதுக்கப்படாத நிலையில் இந்த அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகம், புதுவையில் எம்பி தேர்தல் ஏப்.19இல் நடைபெறவுள்ள நிலையில், அனைத்துக் கட்சிகளும் கூட்டணி அமைத்து வேட்பாளர்களை அறிவிப்பதில் தீவிரம் காட்டிவருகின்றன. அந்த வகையில், கூட்டணியே அமைக்காமல் தனித்து களம் காணும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் பட்டியலை மார்ச் 23ஆம் தேதி சீமான் வெளியிடுவார். அதன்படி திருவள்ளூர் தொகுதி வேட்பாளராக மு.ஜெகதீஷ் சந்தர் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
லோக்சபா தேர்தல் ஏப்.19ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதையடுத்து தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்ய நேற்று முதல் மார்ச் 27ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி நேற்று திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகத்தில் அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஆனால் முதல் நாளான நேற்று யாரும் வேட்பு மனு தாக்கல் செய்ய வரவில்லை.
Sorry, no posts matched your criteria.