India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் காய்கறி கடையில் அடிக்கடி கடன் கேட்டும் பணம் கேட்டும் தர மறுத்ததால் கடையில் இருந்த இளைஞர் இளவரசனை (22) அறிவாளால் வெட்டிய வழக்கில் கடை உரிமையாளர் அளித்த புகாரின் பேரில் வெட்டு காலனி பகுதியைச் சேர்ந்த எழில், ராஜசேகர், விஜய், அஜித் குமார் உள்ளிட்ட 4 பேரை கைது செய்து கும்மிடிப்பூண்டி போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி இன்று சிறையில் அடைத்தனர்.
ரூ.60 லட்சம் மோசடி செய்த வழக்கில் இளைஞரை ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீஸர் நேற்று கைது செய்தனர். அம்பத்தூரைச் சேர்ந்த கிளாட்வின் (37) என்பவர் தனியார் வங்கி மூலம் ரூ.16 லட்சம், உறவினர்களிடம் கடன் என சுமார் ரூ.60 லட்சம் தனது நண்பரான உமேஷ்குமாரிடம் கொடுத்துள்ளார். அந்தப் பணத்தை பங்குச் சந்தையில் முதலீடு செய்தால், 2 மடங்காக திருப்பித் தருவதாக கூறி ஏமாற்றியுள்ளார்.
சென்ட்ரலில் இருந்து இன்று மதிய வேளையில் புறப்பட்டு அரக்கோணம் செல்லும் மின்சார ரயில்கள், திருவள்ளூர் – அரக்கோணம் இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது. அதேபோல மறுமார்க்கமாக அரக்கோணத்தில் இருந்து சென்ட்ரல் வரும் ரயிலும் அரக்கோணம் – திருவள்ளூர் இடையே பகுதி ரயிலும், திருவள்ளூர் – திருத்தணி இடையே ரயிலும் பகுதி நேரமாக ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊத்துக்கோட்டை தட்டார் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ சந்தான வேணுகோபாலசாமி திருக்கோவிலில் வரும் 30/08/2024 வெள்ளிக்கிழமை மதியம் 3 மணி அளவில் உறியடி திருவிழாவும் அதனைத் தொடர்ந்து அன்று மாலை ஸ்ரீ கிருஷ்ண பகவானுக்கு திருக்கல்யாண நிகழ்ச்சியும் அதனை தொடர்ந்து 31/08/2024 காலை 10 மணி அளவில் ஸ்வாமி திரு வீதி உலாவும் நடைபெற உள்ளதால் பக்த கோடி பொதுமக்கள் அனைவரையும் கோவில் நிர்வாகம் சார்பாக வரவேற்கின்றனர்.
திருவாலங்காடு ஒன்றியத்துக்கு உட்பட்ட பல்வேறு ஊராட்சிகளில் இருந்து தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு இன்று கலைஞர் கனவு இல்ல திட்டத்தின் கீழ் ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் வீடுகள் அமைத்திட உத்தரவு நகலை திருவள்ளூர் எம்.எல்.ஏ விஜி ராஜேந்திரன் வழங்கினார். உடன் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் பயனாளிகள் பங்கேற்று உத்தரவு நகல்களை பெற்றுக் கொண்டனர்.
சோழவரம் அடுத்த ஜனப்பன்சத்திரத்தில் கடந்த 20ஆம் தேதி பாமக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஏற்பட்ட கருத்து மோதலைத் தொடர்ந்து பிறகு பாமக பிரமுகர் முனுசாமியை அவரது கட்சியினரே தாக்கியதாக அவர் சோழவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் பாமக மாவட்ட செயலாளர் பிரகாஷ், பாமக நிர்வாகிகள் டில்லி, சுதாகர், பிரசாத் ஆகியோர் மீது சோழவரம் போலீஸ் இன்று 2 பிரிவுகளில் வழக்கு பதிந்தனர்.
மீஞ்சூர் அடுத்த அத்திபட்டு வடசென்னை அனல் மின் நிலையத்தில் இரு நிலைகளில் நேற்று 2வது நிலை 2வது அலகில் கொதிகலன் கசிவால் 600 மெ.வாட், 1வது நிலையில் 1வது அலகில் கொதிகலன் கசிவால் 210 மெ.வாட்,1வது நிலையில் 2வது அலகில் ஜெனரேட்டர் பழுதால் 210 மெ.வாட் என 1020 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு ஏற்பட்ட நிலையில்,இன்று 1வது நிலை 1வது அலகில் கொதிகலன் பழுது சரிசெய்யப்பட்டு 210 மெ.வாட் மின்உற்பத்தி தொடங்கியது.
தமிழ்நாட்டில் ஐந்து மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது . அதன்படி திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று பிற்பகல் 1 மணி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. உங்கள் பகுதியில் மழை பெய்ய வாய்ப்புள்ளதா என்பதை கமென்டில் குறிப்பிடவும்
திருவள்ளூர் மாவட்டத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு (காலை 10 மணி வரை) லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசையின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்றிரவு மழை பெய்து வருகிறது. இதனால், திருவள்ளூரைச் சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பணிக்கு செல்வோர் வெளியே செல்லும்போது குடை, ரெயின் கோர்ட்டுடன் செல்லுங்கள். உங்க ஏரியாவில் மழையா?
திருவள்ளூர், மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு வடசென்னை அனல் மின் நிலையத்தில் இரு நிலைகளில் மொத்தம் 1830 மெ.வாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.அனல் மின் நிலைய 2வது நிலையில் 2வது அலகில் கொதிகலன் கசிவால் 600 மெ.வாட், 1வது நிலையில் 1வது அலகில் கொதிகலன் கசிவால் 210 மெ.வாட், 1வது நிலையில் 2வது அலகில் ஜெனரேட்டரில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால் 210 மெ.வாட் என 1020 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு.
Sorry, no posts matched your criteria.