India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆணைக்கினங்க, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளுக்கு பொது பார்வையாளராக அபுஇம்ரான் நியமிக்கப்பட்டுள்ளார். இவர், ஆட்சியர் அலுவலக சுற்றுலா மாளிகையில் அறை எண் 7-இல் தங்கி உள்ளார். பொதுமக்கள் இவரை 90037 60953 எண்ணிலோ நேரிலோ தங்கள் புகார்களை தெரிவிக்கலாம் என ஆட்சியர் பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.
பொன்னேரி: கனகவல்லிபுரம் கிராமத்தை சேர்ந்தவர்கள் குமார், சரஸ்வதி தம்பதியர். குமார் இன்று காலை வெளியே சென்றிருந்த நிலையில் சரஸ்வதி தனியாக இருந்துள்ளார். அப்போது வீட்டிற்குள் புகுந்த மர்மநபர்கள் சரஸ்வதியை கழுத்தை அறுத்து கொலை செய்து அவர் அணிந்திருந்த செயினை பறித்து சென்றனர். குமார் திரும்பி வந்து பார்த்தபோது சரஸ்வதி இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
மாதவரம் மண்டலம், 27வது வார்டு, பெருமாள் கோவில் தெருவில் நேற்று காலை தூய்மை பணியாளர்கள் குமார், ரோஜா ஆகிய இருவர் குப்பைச் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியை சேர்ந்த வேலுச்சாமியின் வீட்டிலிருந்து வாங்கிய குப்பையை தரம் பிரித்தபோது 3 சவரன் செயின் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து மண்டல அதிகாரிகள் முன்னிலையில் தூய்மைப் பணியாளர்கள் குமார் மற்றும் ரோஜா நகையை உரியவரிடம் ஒப்படைத்தனர்.
திருவள்ளூர் (தனி) தொகுதியில் இண்டி கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் இன்று (மார்ச் 27) தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அப்போது அவருடன் திமுகவின் முக்கியத் தலைவர்களான முன்னாள் அமைச்சர் நாசர், மாதாவரம் சுதர்சனம் உள்ளிட்டோர் உடனிருந்தனர். மார்ச் 20ஆம் தேதி தொடங்கிய வேட்புமனு தாக்கல் இன்றுடன் (மார்ச் 27) நிறைவடைகிறது
சென்னை அம்பத்தூரை சேர்ந்தவர் தங்கம், இவர் இன்று பொன்னேரி அடுத்த சிறுவாபுரிமுருகன் கோயிலுக்கு செல்வதற்காக செங்குன்றம் அடுத்த பாடி பேருந்து நிலையத்திலிருந்து பாடியை சேர்ந்த கமலக்கண்ணன் என்பவரிடம் லிப்ட் கேட்டு சென்றார். அப்போது சோழவரம் அடுத்த ஜனப்பசத்திரம் கூட்டு சாலை அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி தங்கம் உயிரிழந்தார். கமலக்கண்ணன் மருத்துவமனையில் அனுமதிப்பட்டுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று முதல் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தொடங்கியுள்ளது. இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில், 16,348 மாணவர்களும், 16,583 மாணவியரும் என மொத்தம், 32,931 மாணவ, மாணவியர் தேர்வு எழுத உள்ளனர். இவர்கள் 138 தேர்வு மையங்களில் தேர்வு எழுதுவதால் தேர்வு மையங்களில், மாணவர்களுக்கு தேர்வு எழுவதற்கு மேஜைகளில் பதிவெண்கள் எழுதும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
திருத்தணியில் நேற்று இரவு அரக்கோணம் நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் ஏ.எல்.விஜயன் அறிமுகம் மற்றும் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டு தேர்தல் குறித்த வியூகங்கள் மற்றும் ஆலோசனைகளை வழங்கினார் திருத்தணியின் முன்னாள் எம்பி ஹரி. மேலும் இந்தக் கூட்டத்தில் திருவள்ளூர் மாவட்டச் செயலாளர் ரமணா, தேமுதிக மாவட்டச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
தமிழ்நாட்டில் வாழும் கொண்டா ரெட்டி இன மக்களின் கோரிக்கையை ஏற்காவிட்டால், எந்த கட்சிக்கும் ஓட்டு போட மாட்டோம் என திருவள்ளூர் மாவட்ட கொண்டா ரெட்டி மலை ஜாதி முன்னேற்ற சங்கம் அறிவித்துள்ளது. எஸ் டி பிரிவினருக்கு ஜாதி சான்றிதழ் வழங்க வேண்டும், மலைவாழ் மக்களுக்கு வங்கிகளில் மானிய உதவியுடன் கடன் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பொன்னேரி சட்டமன்ற தொகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, காரில் வந்த மீஞ்சூர் திமுக ஒன்றிய குழு தலைவர் ரவி மற்றும் பூமிநாதன் ஆகியோரிடமிருந்து ₹500 நோட்டுகள் இருந்த திமுக தலைவரின் படம் பிரிண்ட் செய்யப்பட்ட கிஃப்ட் கவர்கள் மற்றும் ₹50000 பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர், இவை உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் வாகே சங்கத் பல்வந்த் வசம் ஒப்படைக்கப்பட்டது.
செங்குன்றம் விஜயநல்லூரை சேர்ந்தவர் நந்தகுமார். இவரது மனைவி மேனகா கணவரை பிரிந்து கும்மிடிப்பூண்டி அருகேயுள்ள துராபள்ளம் கிராமத்தில் தாய் வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று மனைவியை பார்க்க துராபள்ளம் வந்த நந்தகுமார் மதுபோதையில் மேனகாவை வெட்ட முயன்றார். இதில் ஆத்திரமடைந்த மேனகாவின் அக்கா ஷோபனா கத்தியை பிடுங்கி நந்தகுமாரை சரமாரியாக வெட்டினார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
Sorry, no posts matched your criteria.