Thiruvallur

News March 3, 2026

திருவள்ளூர் கலெக்டரிடம் 633 மனுக்கள்!

image

திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று (மார்ச் 2) நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் நிலம் சம்பந்தமாக 181, கலைஞர் மகளிர் உரிமைத்தொகை சம்பந்தமாக 76, சமூக பாதுகாப்பு திட்டம் தொடர்பாக 109, வேலைவாய்ப்பு வேண்டி 32, பசுமைவீடு, அடிப்படை வசதிகள் வேண்டி 25, இதர துறைகள் சார்பாக 210 என மொத்தம் 633 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

News March 3, 2026

JUST IN: திருவள்ளூர் திமுக கவுன்சிலர் அதிரடி கைது

image

திருவள்ளூர் 6ஆவது வார்டு திமுக கவுன்சிலர் பிரபாகர், டெல்லி செல்லும் இண்டிகோ விமானத்தில் பயணித்துள்ளார். அப்போது, விமானத்தில் இருந்த பணிப்பெண்ணிடம் மது போதையில் அத்துமீறியதாகக் கூறப்படுகிறது. அந்தப் பெண்ணை அருகில் அமரச் சொல்லி, மேலே கை வைத்ததாகவும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, திமுக கவுன்சிலர் பிரபாகர், அவரது நண்பர் தியாகு ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

News March 3, 2026

திருவள்ளூரில் சர்க்கரை நோயா..? இலவச சிகிச்சை!

image

திருவள்ளூர் மாவட்ட மக்களே.., உங்களுக்கோ, உங்களது உறவினர்கள், நண்பர்களுக்கோ சர்க்கரை நோய் பாதிப்புள்ளதா..? அந்த பாதிப்பால் பாதங்களில் புண்கள் ஏற்பட்டுள்ளதா..? இனி கவலை வேண்டாம். தமிழக அரசின் ‘பாதம் பாதுகாக்கும் திட்டம்’ மூலமாக இலவசமாக சிகிச்சை அளிக்கப்படும். உடனே அரசு மருத்துவக் கல்லூரிகள், மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களை அணுகலாம். உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News March 3, 2026

திருவள்ளூர் கலெக்டர் உத்தரவிட்டார்!

image

திருவள்ளூர்: காக்களூர் ஏரி பகுதியில் நேற்று(மார்ச்.2) ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் ’நமக்கு நாமே’ திட்டத்தின் கீழ் ரூ.2.51 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டு வரும் பணிகளை மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும், பணிகளை துரிதமாக மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் உத்தரவிட்டார்.

News March 3, 2026

திருவள்ளூர் எம்.எல்.ஏ மீண்டும் விருப்ப மனு!

image

திமுக சார்பில் வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட விருப்ப மனு பெறபட்டு வருகிறது. இந்நிலையில், திருவள்ளூர் தொகுதியில் வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட அண்ணா அறிவாலயத்தில் நேற்று(மார்ச் 2) திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் நேரில் சென்று விருப்ப மனு அளித்தார். உடன் திருவள்ளூர் மாவட்ட திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

News March 3, 2026

திருவள்ளூர்: பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை!

image

பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம்(57). இவர், பொன்னேரியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் வேன் டிரைவராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், 7 வயது பள்ளி மாணவிக்கு டிரைவர் பன்னீர் செல்வம் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவியின் தாயார் செங்குன்றம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில், பன்னீர்செல்வத்தை போலீசார் கைது செய்தனர்.

News March 3, 2026

திருவள்ளூர் இரவு ரோந்து காவல் விவரம்

image

திருவள்ளூர் மாவட்ட காவல் துறை சார்பில் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரம், காவல் நிலையம் வாரியாக மக்களின் எளிதான தொடர்பு வசதிக்காக  வெளியிடப்பட்டுள்ளது.பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் சட்ட ஒழுங்கை உறுதி செய்யும் நோக்கில் மேற்கொள்ளப்படும்.மக்கள் தங்களது பகுதிக்கான பொறுப்பு அதிகாரிகளை நேரடியாக தொடர்பு கொள்ளும் வசதியையும் வழங்குகிறது.

News March 3, 2026

மக்கள் குறைதீர் கூட்டத்தில் மனுக்கள் பெற்ற ஆட்சியர்

image

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் பிரதாப் பொதுமக்களிடமிருந்து பல்வேறு துறை சார்ந்த கோரிக்கை இன்று (மார்ச்.2) மனுக்களை பெற்றுக்கொண்டார். பொதுமக்களிடமிருந்து பெற்ற மனுக்களை உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.

News March 2, 2026

தேர்வு மையத்தை ஆய்வு செய்த ஆட்சியர்

image

திருவள்ளூர் மாவட்டம் மற்றும் வட்டம், பன்டூர் அடுத்த மணவாளநகர் கே.இ.என்.சி நடேசன் செட்டியார் பள்ளியில் இன்று (மார்ச்.02) பொது தேர்வு நடைபெற்றது. இந்த மையத்தினை ஆட்சியர் பிரதாப் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கற்பகம், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உள்ளவர்.

News March 2, 2026

நேரில் சென்று ஆய்வு செய்த ஆட்சியர்

image

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள காக்களூர் ஊராட்சி காக்களூர் ஏரி பகுதியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் தலக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.2.51 கோடி மதிப்பிட்டில் புனரமைக்கப்பட்டு வரும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதாப் இன்று (மார்ச்.2) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது பணிகளை விரைந்து மேற்கொள்ள சம்பத்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

error: Content is protected !!