India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவள்ளூர் மாவட்டத்தில் வழக்குகளில் சம்பந்தப்பட்டு பறிமுதல் செய்யப்பட்ட இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் மாவட்ட எஸ்.பி உத்தரவின் பேரில் டிச.6 ஆம்தேதி ஏலம் விடப்பட்டது. தொடர்ந்து வரும் டிச.19 ஆம் தேதியில் காலை 10 மணிக்கு எஸ்.பி அலுவலகத்தில் உள்ள ஆயுத படை மைதானத்தில் மீண்டும் ஏலம் விடப்படுகிறது. பங்கேற்பவர்கள் ஆதார் கார்டு முன்பணம் கொண்டு வர வேண்டுமென்று காவல்துறை தெரிவித்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் வழக்குகளில் சம்பந்தப்பட்டு பறிமுதல் செய்யப்பட்ட இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின் பேரில் 6.12.24 ஏலம் விடப்பட்டது. இதனைத் தொடர்ந்து அடுத்த கட்டமாக வரும் 19டிசம்பர் தேதியில் மீண்டும் ஏலம் விடப்படுகிறது. பங்கேற்பவர்கள் ஆதார் கார்டு முன்பணம் கொண்டு வர வேண்டுமென்று காவல்துறை தெரிவித்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கிராமங்களில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் துறை சந்திரசேகர் மழையால் பாதித்த இடங்களுக்கு சென்று பாதிப்புகள் பற்றி கேட்டறிந்து ஆய்வு செய்தார். மேலும், 100 நாள் வேலை ஆட்களை சந்தித்து அவர்களிடம் குறைகளை கேட்டறிந்து உணவு பொருட்கள் வழங்கினார்.
திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்ட அரங்கில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்தில் தலைமையில் நடைபெற்றது. இதில் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உமா மகேஸ்வரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
திருவள்ளூர் தனியார் திருமண மண்டபத்தில் நேற்று ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர்களை சேர்ந்த 143 பயனாளிகளுக்கு ரூ.1.88 கோடி மதிப்பீட்டில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி தூய்மை பணியாளர்களுக்கு அமைச்சர் நாசர் உணவுகள் பரிமாறினார். பின்னர் அவர்களுடன் அமர்ந்து உணவருந்தினார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று ( டிச.07) பல்வேறு பகுதிகளில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக, பள்ளிப்பட்டு, காக்களூர், பொதட்டூர்பேட்டை, கடம்பத்தூர், ராமஞ்சேரி, செஞ்சி, மணவூர், விடையூர், மணவாளநகர், ஆர்.கே.பேட்டை, ஏகாட்டூர், வெங்கத்தூர், கனகம்மாசத்திரம், பாண்டூர் மற்றும் இராமஞ்சேரி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும். ஷேர் செய்யுங்க
திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
ஆவடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, திருவேற்காடு நகராட்சியில் காடுவெட்டி பகுதியில் 11 ஆம் ஆண்டு திருவண்ணாமலை திருக்குடை உபய யாத்திரையை இன்று சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் நாசர் துவக்கி வைத்தார். உடன் மூர்த்தி, மேயர் உதயகுமார், சண் பிரகாஷ், கமலேஷ் மற்றும் திமுக கட்சி நிர்வாகிகள் இருந்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதி மீஞ்சூர் கல்யாணசுந்தரம் தெருவில் பொதுமக்கள் பல ஆண்டுகளாக அத்தியாவசிய பொருட்கள் வாங்க வெகு தூரம் செல்ல வேண்டிய நிலை இருந்து வந்தது. இந்நிலையில் மக்களின் கோரிக்கையை ஏற்று ரூ.9 லட்சம் மதிப்பிலான புதிய கட்டிடம் கட்டப்பட்டது. அதனை பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் திறந்து வைத்தார். இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
Sorry, no posts matched your criteria.