Thiruvallur

News March 7, 2026

திருவள்ளூரில் சம்பளப் பிரச்னையா?

image

திருவள்ளூர் மக்களே, உங்க கம்பெனியில் உங்களை வேலையை விட்டு நீக்கினாலோ, சம்பளம் தர லேட் ஆனாலோ, குறைவான சம்பளம் தந்தாலோ (அ) தவணைகளாக சம்பளம் தந்தாலோ, இனி கவலைப்பட வேண்டாம். நீங்கள் தொழிலாளர் நல ஆணையத்தில் புகார் செய்யலாம். இந்த<> லிங்கிலோ<<>> (அ) கூடுதல் தொழிலாளர் ஆணையர் – 044-24339934, தொழிலாளர் இணை ஆணையர் – 044-24335107 எண்களிலோ புகார் செய்யலாம். ஷேர் செய்து குழப்பத்தில் உள்ளவர்களுக்கு உதவுங்கள்.

News March 7, 2026

திருவள்ளூரில் இந்த புகார்களுக்கு Police Station செல்ல வேண்டாம்!

image

தமிழக காவல் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், பாஸ்போர்ட், ஆர்.சி புத்தகம் , ஓட்டுனர் உரிமம், அடையாள அட்டை, school & college certificate இவற்றில் ஏதேனும் ஆவணங்கள் தொலைந்து போனால் காவல் நிலையத்தை அணுக வேண்டிய அவசியமில்லை <>eservices.tnpolice.gov.in<<>> என்ற இணையதளத்தில் புகார் பதிவு செய்து பதிவிறக்கம் செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க

News March 7, 2026

திருவள்ளூர்: கேன் வாட்டர் குடிப்போர் கவனத்திற்கு!

image

திருவள்ளூர் மாவட்டத்தில் கேன் தண்ணீர் தொடர்பாக பல்வேறு புகார்கள் எழுந்து வருகின்றன. கேன் தண்ணீர் வாங்கும்போது குடிநீர் கேன்களில், பிளாஸ்டிக் தரம், கேன்களின் சுத்தம், உற்பத்தி மற்றும் காலாவதி தேதி, BIS மற்றும் FSSAI முத்திரைகள் ஆகியவற்றை சரிபார்க்க வேண்டும். மிக முக்கியமாக ஒரு கேனை 30 முறை மட்டுமே பயன்படுத்த வேண்டும். கேன்களின் நிறம் மாறினால் கட்டாயமாக பயன்படுத்த கூடாது. (SHARE பண்ணுங்க)

News March 7, 2026

திருவள்ளூர் கலெக்டர் மீனவர்களுக்கு நல உதவி!

image

திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் பொன்னேரி வட்டம் மெதுர் கிராமத்தை சேர்ந்த 25 இருளர் பழங்குடியினர் இன மக்களுக்கு ரூ.1.84 லட்சம் மதிப்பீட்டில் இலவச மீன்பிடி வலை (கன்னி வலை மற்றும் மீன்பிடி தள்ளு வலை) ஆகியவற்றை மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் வழங்கினர்.

News March 7, 2026

திருவள்ளூர்: உயர்ந்த கேஸ் விலை! ; மானியம் வரலையா?

image

திருவள்ளூர் மக்களே.., நள்ளிரவில் கேஸ் விலை உயர்ந்துள்ளது. இந்நிலையில், கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? அதற்கு <>இங்கு <<>>க்ளிக் செய்து எந்த நிறுவனம்(Bharatgas, indane, HP) என்பதை தேர்ந்தெடுங்க. பின்னர் நுகர்வோர் எண், வங்கி எண், IFSC கோட், ஆதார் ஆகிய விவரங்களை உள்ளிட்டு, OTP மூலம் இணைப்பை உறுதி செய்தால், மாதந்தோறும் உங்க வங்கி கணக்குக்கு கேஸ் மானியம் வரும். ஷேர் பண்ணுங்க.

News March 7, 2026

பள்ளிப்பட்டு: மது போதையில் நண்பனை கொன்றவர் கைது

image

திருவள்ளூர்: பள்ளிப்பட்டை சேர்ந்த மகேஷ்பாபு மற்றும் பிரகாஷ், நண்பர்கள். பிரகாஷுக்கு, கடந்தாண்டு ரூ.10,000 மகேஷ்பாபு கடனாக கொடுத்திருந்தார். நேற்று(மார்ச் 6) காலை இருவரும், பாழடைந்த தனியார் பள்ளி வளாகத்தில் மது அருந்தி கொண்டிருந்தனர். அப்போது மகேஷ்பாபு, மீண்டும் பிரகாஷிடம் பணம் கேட்டுள்ளார். மதுபாட்டிலை உடைத்து, மகேஷ்பாபுவின் கழுத்தில் குத்தியுள்ளார். தகவலறிந்த போலீசார் பிரகாஷை கைது செய்தனர்.

News March 7, 2026

திருவள்ளூர்: போக்சோ வழக்கில் அதிரடி தீர்ப்பு

image

எண்ணுாரைச் சேர்ந்த ராஜா(52). இவர், 2019ஆம் ஆண்டு, அதே பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றார். அப்போது, உறவினர் வீட்டின் மாடியில் துணி எடுக்க வந்த 16 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். தகவலறிந்த எண்ணுார் மகளிர் போலீசார், வழக்கு பதிவு செய்து ராஜாவை கைது செய்தனர். மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் நடந்த வழக்கில் ராஜாவுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.8,000 அபராதமும் விதிக்கப்பட்டது.

News March 7, 2026

திருவள்ளூரில் ரேஷன் பிரச்னையா..? உடனே CALL!

image

திருவள்ளூர் மாவட்ட மக்களே.., உங்களது ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்குதல், மாற்றம், முகவரி மாற்றம் மற்றும் ரேஷன் கடை மீது எந்த வித புகார்கள் இருந்தாலும் 1967 (அ) 1800-425-5901 எனும் கட்டணமில்லா எண்ணை அழைத்து உங்களது புகாரை தெரிவிக்கலாம். ஏதேனும் முறைகேடு நடந்தாலும் சரியான ஆவணங்களுடன் உங்களது புகார்களை தெரிவிக்கலாம். உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News March 7, 2026

திருத்தணியில் மீண்டும் போட்டியிட விருப்ப மனு!

image

திமுக சார்பில் வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட விருப்ப மனு பெறபட்டு வருகிறது. இந்நிலையில், திருத்தணி தொகுதியில் வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட அண்ணா அறிவாலயத்தில் நேற்று(மார்ச் 6) திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் சந்திரன் நேரில் சென்று விருப்ப மனு அளித்தார். உடன் திருவள்ளூர் எம்எல்ஏ ராஜேந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

News March 7, 2026

பூந்தமல்லி அருகே துடிதுடித்து பலி!

image

திருவள்ளூர்: பூந்தமல்லி அடுத்த செம்பரம்பாக்கம் பகுதியில் ஒருவர் நெடுஞ்சாலையைக் கடக்க முயன்றார். அந்த வழியாக வேலூர் நோக்கி சென்ற அரசு பஸ் அவர் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த ஆவடி போக்குவரத்து புலனாய்வுத் துறை போலீசார், உடனடியாக உயிரிழந்த நபரை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். விசாரணையில் அவர் வேலூரைச் சேர்ந்த நித்யானந்தம் என்பது தெரியவந்தது.

error: Content is protected !!