India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பொன்னேரியில் பிரபல தனியார் பிரியாணி கடையில் கடந்த 16ம் தேதி பிரியாணி மற்றும் சிக்கன் லாலிபாப் வாங்கி சாப்பிட்ட சிலருக்கு, வாந்தி மற்றும் வயிற்றுபோக்கு ஏற்பட்டுள்ளது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர், நேற்று பொன்னேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த பிரியாணி கடைக்கு 30க்கும் மேற்பட்ட கிளைகள் இருக்கிறது.
பள்ளிப்பட்டு அடுத்த கொளத்தூர், அத்திமாஞ்சேரி பேட்டை, மேலப்பூடி, விளக்கணாம் பூடிபுதூர், பாலபுரம் ஆகிய துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் காரணமாக அதனை சுற்றி உள்ள பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரையும் மின் வினியோகம் தடை செய்யப்படும். காக்களூர் மின் நிலையத்தில் மற்றும் கடம்பத்தூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையும் மின் வினியோகம் தடை செய்யப்படும்.
திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
கும்மிடிப்பூண்டியில் இருந்து பள்ளிப்பட்டு அரசுக்கு சொந்தமான நுகர்பொருள் வாணிப கிடங்கிற்கு கவரப்பேட்டையில் இருந்து லாரி மூலம் ரேஷன் அரிசி கொண்டுவரப்பட்டது. இந்த லாரியை ஓட்டுநர் ஜோசப் ராஜ் (43) ஓட்டி வந்தார். சோளிங்கர் ரோடு செல்லாத்தூர் அருகே லாரி திரும்பும்போது கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லாரி ஓட்டுனர் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். ஆர்.கே. பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.
ஆவடி வட்டம், தண்டுரை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் இன்று மாவட்ட ஆட்சியர் டாக்டர். த. பிரபுசங்கர், இ.ஆ.ப. அவர்கள் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் முதலமைச்சரின் காலை உணவு திட்டப்பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதில் துறை சார்ந்த அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.
திருவள்ளூர் அடுத்த சிறுவானூர் சேர்ந்தவர் ரமேஷ் குமார் (52) இவர் திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாஜக மாவட்ட செயலாளராக உள்ளார் மனைவி ஊராட்சி தலைவியாக இருந்து வருகிறார், நேற்று சாலை ஆக்கிரமிப்பு அகற்றிய தகராறில் வழிமறித்து அறிவாளால் குமாரை தலையில் வெட்டியதில் படுகாயம் அடைந்தார் சென்னை மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டுள்ளார் இது குறித்து திருவள்ளூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆவடி கொளத்தூரைச் சேர்ந்த பவித்ரன் வியாசர்பாடியில் உள்ள அம்பேத்கர் கல்லூரியில் படித்து வருகிறார். இவர் பகுதி நேர வேலையாக ஃபுட் டெலிவரி செய்யும் வேலையை பார்த்து வருகிறார். டெலிவரிக்கு சென்ற இடத்தில் அங்கிருந்த பெண் காலதாமதமாக வந்ததால் கடுமையான வார்த்தைகளில் திட்டியுள்ளார். மேலும் பணிபுரியும் இடத்தில் புகார் செய்துள்ளார். இதனால் விரக்தி அடைந்த பவித்ரன் கடிதம் எழுதி வைத்து தற்கொலை செய்து கொண்டார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
பொன்னேரி அடுத்த மீஞ்சூரில் வசித்து வந்த திமுக முன்னாள் அமைச்சர் க. சுந்தரம் இன்று உடல்நல குறைவால் காலமானார். கலைஞர் அமைச்சரவையில் ஆதிதிராவிடர் நலத்துறை மற்றும் பால்வளத்துறை அமைச்சராக இருந்தவர் கா.சுந்தரம். கடந்த ஆண்டு வேலூரில் நடைபெற்ற திமுக முப்பெரும் விழாவில், சுந்தரத்திற்கு ‘அண்ணா’ விருது வழங்கப்பட்டது. திமுக துணை பொதுச்செயலாளர், உயர்மட்ட குழு உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்துள்ளார்.
திருவள்ளூரை அடுத்த பட்டரைபெரும்புதூர் சுங்கச்சாவடி அருகே நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்த போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர் அதில் குட்கா பாக்கெட்டுகள் 200 கிலோ கடத்தி கொண்டு வந்தது தெரியவந்தததை அடுத்து போலீசார் அந்த காரை பறிமுதல் செய்து குட்கா பொருட்களை கடத்தி வந்த ராமச்சந்திரன் இன்பராஜ் திரவியக்குமார் ஆகியோரை கைது செய்து அவர்களிடம் விசாரித்து வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.