India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வங்கக்கடலில் உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள காட்டுப்பள்ளி துறைமுகத்தில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்ற வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. மேலும், சென்னை, கடலூர், நாகை உள்ளிட்ட 7 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்ற வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
திருவள்ளூர் காவல்துறை தனது சமூக வலைத்தளத்தில் கூறியுள்ளதாவது: போலியான இணையதளங்கள் மூலம் கிரிப்டோ முதலீடுகளைச் செய்ய மக்களை கவர்ந்திழுக்கும் விளம்பங்கள் மற்றும் குறுஞ்செய்திகளை நம்ப வேண்டாம். ஆரம்பத்தில் முதலீடுகள் சிறிய தொகையுடன் மெதுவாக தொடங்கலாம், ஆனால் பல லட்ச கணக்கில் மோசடி செய்து ஏமாற்றப்படுகிறது என எச்சரித்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் மாவட்ட அளவிலான விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் 27.12.2024 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் அறிவித்துள்ளார். மேலும், அனைத்து விவசாயப் பெருமக்களும் விவசாயம் தொடர்பாக தங்களுக்கும், தங்கள் பகுதிகளில் ஏற்படும் குறைகளுக்கும் தீர்வுகான இக்கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பூந்தமல்லி நகராட்சியில் 21 வார்டுகளில் ஒரு லட்சத்து 30 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். 6.07 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட இந்த நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் இல்லை. இதனால் மக்கள் அவதிக்குள்ளாகி வந்தனர். இந்நிலையில் 263.14 கோடி ரூபாய் மதிப்பில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்த மதிப்பீடு திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு அரசு ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அடுத்த புதுப்பேடு கிராமத்தைச் சார்ந்தவர் ஜெகன் (19). கல்லூரி மாணவர். நேற்று நண்பர்களுடன் அப்பகுதியில் உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளார்.அப்போது அங்கு சேற்றில் சிக்கி நீரில் மூழ்கினார்.அவருடைய பெற்றோர், பொன்னேரி காவல்நிலையம் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.அவரை தேடும் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு துறையினர் 4 மணி நேரத்திற்கு அவரை சடலமாக மீட்டனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
ஆந்திராவில் இருந்து, திருத்தணி வழியாக கஞ்சா கடத்துவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது, நேற்று, திருத்தணி போலீசார் பொன்பாடி சோதனைச்சாவடியில் வாகன சோதனை நடத்தினர். அப்போது, திருப்பதியில் இருந்து திருத்தணி வழியாக கோயம்பேடு செல்லும் அரசு பேருந்தில் சோதனை செய்தனர். அப்போது மோகன்ராஜ் என்ற பயணியிடம், 8 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து போலீசார் மோகன்ராஜ்யை கைது செய்தனர்.
பொன்னேரி ரயில் நிலையத்திலிருந்து ஆந்திராவிற்கு மூட்டை மூட்டையாக கடத்தப்படுவதாக வந்த தகவலின் பேரில் பொன்னேரி வட்ட வழங்கல் அலுவலர் ஜெய்கர் தலைமையில் பொன்னேரி ரயில் நிலையத்தில்ஆய்வு செய்தபோது ரேஷன் அரிசி 50 கிலோ எடைகொண்ட 36 கோணி பையில் 1790கிலோ எடைகொண்ட ரேஷன் அரிசி கைப்பற்றப்பட்டு, பொன்னேரி அடுத்த பஞ்செட்டி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
திருவள்ளூர் மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு மழை பெய்தது. கடந்த 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக பொன்னேரியில் 30மி.மீ, கும்மிடிப்பூண்டி 24 மி.மீ, சோழவரத்தில் 10மி.மீ, செங்குன்றத்தில் 23 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. மேலும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்தது.
Sorry, no posts matched your criteria.