India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழக முதலமைச்சர் அவர்கள் அறிவித்த மருந்தகம் அமைக்க விருப்பமுள்ள பி.பார்ம், டி.பார்ம் சான்று பெற்றவர்கள் அல்லது அவர்கள் ஒப்புதலுடன் முதல்வர் மருந்தகம் அமைக்க www.mudhalvarmarundhagam.tn.gov.in என்ற இணையதளம் மூலம் டிசம்பர் 10 தேதி வரை விண்ணப்பிக்க தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது . இந்த தகவலை நீலகிரி மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் இரா. தயாளன் தெரிவித்துள்ளார்.
குன்னூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட எடப்பள்ளி கிராமத்தில் புதிதாக அமைக்கபட இருக்கும் ‘மினி டைடல் பூங்கா’ மற்றும் உலக தரத்தில் அமையவிருக்கும் புதிய ஹாக்கி மைதானம் அமைக்கும் பகுதிகளை தமிழ்நாடு தலைமை கொறடா ராமசந்திரன் நேரில் ஆய்வு மேற் கொண்டார். அவருடன் அரசு பொறியாளர்கள், அலுவலர்கள், கழக நிர்வாகிகள் சென்றனர்.
தேவர்சோலை பேரூராட்சி செம்பங்கொல்லி பழங்குடி கிராமத்தை சேர்ந்தவர் கேத்தி (55). இவர் மண் வயல் கடை வீதியில் பொருட்களை வாங்கி கொண்டு வீட்டுக்கு நேற்று திரும்பி சென்று கொண்டு இருந்தார். போஸ்பறா சங்கிலி கேட் பகுதி சென்ற போது, புதரிலிருந்து வெளிவந்த யானை தாக்கி காயம் அடைந்தார். உடனே இவர் உதகை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
நீலகிரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற மற்றும் புகழ்மிக்க கோவில்களில் ஒன்றான, மசினகுடி அருகே உள்ள சோலூர் பொக்கபுரம் மாரியம்மன் கோயிலில் இன்று நடைபெற்ற திருக்குட நன்னீராட்டுப் பெருவிழாவில், மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு கலந்துக்கொண்டார். சோலூர் கிராம மக்களின் பாரம்பரியக் கோவிலான, இந்த கோவில் தற்பொழுது இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது.
நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்எஸ் நிஷா இன்று நக்சல் தடுப்பு பிரிவுடன், மஞ்சூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில், மாவோயிஸ்டு தேடுதல் வேட்டை மேற்கொண்டார். இந்த தேடுதலின் போது காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் சிறப்பு உடை அணிந்து துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதம் ஏந்தி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
நீலகிரி மாவட்டத்தில் இன்று (05.12.2024) இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. இதில் உதகை நகரம் ஊரக உட்கோட்டம், குன்னூர் உட்கோட்டம், கூடலூர் மற்றும் தேவாலா உட்கோட்டம் ஆகிய காவல் நிலைய அதிகாரிகளின் தொடர்பு எண்கள், நீலகிரி மாவட்ட காவல்துறையால் வெளியிடப்பட்டுள்ளது
நீலகிரி: கோத்தகிரி ஒரசோலை பகுதியை சேர்ந்த ஈஸ்வரி (65) என்பவர் இன்று குன்னூரில் இருந்து, கோத்தகிரி நோக்கி வந்த பேருந்தில் ஏறும் போது, நிலைதடுமாறி விழுந்து அரசு பேருந்தின் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தார். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு, மக்கள் மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
கூடலூர், நாடுகானி குடோன் பகுதியில், தனியார் நிறுவனத்தின் டெலிபோன் டவர் உள்ளது. அங்கு கடந்த டிசம்பர் 1 தேதியன்று, இருவர் டீசல் திருடியது CCTV Camera வில் பதிவாகியது. அந்த டீசல் திருட்டில் ஜீப் டிரைவர் சத்யராஜ் மற்றும் ராஜூ ஆகியோர் ஈடுபட்டது தெரியவந்தது. இது குறித்து தேவாலா போலீசார் இருவரையும் தேடிவருகின்றனர். ஜீப் , டீசல் கேன்கள், மற்றும் சில பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
நீலகிரி மாவட்டத்தில் வரும் 20-ம் தேதி காலை 11 மணிக்கு விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடக்க உள்ளது. பிங்கர் போஸ்ட் பகுதியில், மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலக அரங்க கூட்டத்தில் நடைபெற உள்ளது. விவசாயிகள் கோரிக்கைகள் ஏதேனும் இருப்பின், 6-ம் தேதிக்குள் தோட்டக்கலை இணை இயக்குனர், தபால் பெட்டி எண் 72, ஊட்டி 643001, என்ற முகவரியில், நேரிலோ அல்லது தபாலிலோ அனுப்பலாம், மின்னஞ்லுக்கு jdooty@gmail.com.
நீலகிரி கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு விடுத்துள்ள செய்தி குறிப்பில், மாவட்டத்தில் தமிழ் ஆட்சி மொழி சட்ட வாரம், வரும் 18ம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை, அனைத்து அரசு வணிக நிறுவனங்கள், கடைகள், உணவகங்கள், அலுவலகங்கள் முதலியவற்றில் கொண்டாடப்படும். மேலும், ஆட்சி மொழி சட்டம், அதன் வரலாறு குறித்து, பிழையின்றி எழுத பயிற்சி அளிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.