Thenilgiris

News March 5, 2026

நீலகிரி: 50% தள்ளுபடியில் ரூ.3 லட்சம் கடன்

image

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற <>இங்கே கிளிக்<<>> செய்யவும் அல்லது அருகிலுள்ள பொதுத்துறை அல்லது வணிக வங்கிகளை அணுகலாம். SHARE பண்ணுங்க

News March 5, 2026

நீலகிரி: பட்டா வைத்திருப்போருக்கு GOOD NEWS.!

image

நீலகிரி மக்களே, நில ஆவணங்கள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டு, பொதுமக்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் <>eservices.tn.gov.in<<>> இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த இணையத்தில் உங்கள் நிலம் தொடர்பான விவரங்களை அறியலாம். மேலும் பட்டாவில் திருத்தம், பெயர் மாற்றம், நீக்கம் போன்ற சேவைகளுக்கு இதன் மூலமாக விண்ணப்பிக்கலாம். சந்தேகங்களுக்கு உங்கள் மாவட்ட அதிகாரியை 0423-2443938 அணுகலாம். SHARE பண்ணுங்க.

News March 5, 2026

நீலகிரி: ரூ.58,514 சம்பளத்தில் வங்கி வேலை ரெடி! உடனே APPLY

image

நீலகிரி மக்களே, RBI வங்கியில் காலியாக உள்ள 650 Assistant பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 20 – 28 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் மார்ச் 8ம் தேதிக்குள் <>இங்கு க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு சம்பளம் ரூ.58,514 வழங்கப்படும். எழுத்து தேர்வு அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். இந்த பயனுள்ள தகவலை அனைவரும் தெர்ஞ்சுக்க SHARE செய்து உதவுங்க.

News March 5, 2026

நீலகிரி: திமுகவில் இணைந்த மாற்றுக்கட்சி நிர்வாகிகள்

image

பந்தலூரில் பாஜக நிர்வாகிகள் ஏராளமானோர், திமுக நெல்லியாளம் நகர செயலாளர் சேகர் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். இந்நிகழ்வில் மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் ஆலன், மாவட்ட தொண்டர் அணி தலைவர் ஞானசேகர், மாவட்ட துணை அமைப்பாளர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலரும் உடனிருந்து புதிய உறுப்பினர்களை வரவேற்றனர்.

News March 5, 2026

நீலகிரி: டேட்டிங் ஆப்-ல் இளம்பெண் மோசடி

image

நீலகிரியை சேர்ந்த அரசு அதிகாரி ஒருவர் டேட்டிங் செயலியில் அறிமுகமான பெங்களூருவை சேர்ந்த ஜெயஸ்ரீ ஸ்வேதா என்ற இளம் பெண்ணின் பேச்சில் நம்பிக்கை வைத்து ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தார். முதலில் ரூ.43 ஆயிரம் முதலீட்டில் லாபம் கிடைத்ததால், ரூ.20 லட்சம் வரை செலுத்தினார். பின்னர் பணம் திரும்ப கிடைக்காமல், தொடர்பும் துண்டிக்கப்பட்டதால், ஊட்டி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார்.

News March 5, 2026

நீலகிரி: பேருந்து நிலையத்தில் குடியேறிய போராட்டக்காரர்கள்

image

நீலகிரி: நெல்லியாளம் நகராட்சி செட்டிவயல் பகுதிக்கு சாலை வசதி கோரி 2வது நாளாக இன்றும் போராட்டம் தொடர்ந்தது. காலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்திருந்தனர். இன்று மாலை விடுதலை செய்யப்பட்ட போராட்ட குழுவினர், போராட்டத்தை கைவிடாமல் பந்தலூர் பேருந்து நிலையத்தில் குடியேறி மீண்டும் சாலை வசதி கேட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

News March 4, 2026

நீலகிரி: அரசின் குறைந்த விலையில் சொந்த வீடு! APPLY

image

நீலகிரி மக்களே, TNHB திட்டம் மூலம் மக்களுக்கு மானிய விலையில் சொந்த வீடு வாங்கும் கனவை அரசு நிறைவேற்றி வருகிறது. உங்க மாவட்டத்திலே சொந்த வீடு வேணுமா? 21 வயது நிரம்பி, எந்த சொத்தும் இல்லாதவர்களாக இருக்க வேண்டும். சம்பளம்: 25,000 – 70,000 வரை பெறுபவர்கள் <> இங்கு க்ளிக் <<>> செய்து பெயர், மொபைல் எண், சான்றிதழ்கள், ஆண்டு வருமானம் பதிவு செய்து விண்ணப்பியுங்க.. இதை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க.

News March 4, 2026

நீலகிரி: ரூ.755 செலுத்தினால் ரூ.15 லட்சம் காப்பீடு

image

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும், ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’, பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு வெறும் ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18 வயது முதல் 65 வயது உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். உடனே உங்கள் அருகிலுள்ள தபால் நிலையத்தை அனுகவும். பகிரவும்

News March 4, 2026

நீலகிரி: GAS BILL-ஐ விட அதிக பணம் கேட்டால்., இதை செய்யுங்க

image

நீலகிரி மக்களே, உங்க வீட்டுக்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை விட அதிக பணம் கேட்குறாங்களா? இனி கவலை வேண்டாம். கேஸ் ரசீதில் உள்ள விலையைவிட அதிகமாக பணம் கேட்டால் 18002333555 எண்ணுக்கு அல்லது https://pgportal.gov.in/ இந்த இணையதளத்தில் புகாரளியுங்க. இண்டேன், பாரத்கேஸ் மற்றும் ஹெச்பி-க்கும் இந்த எண்ணில் புகாரளிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களுக்கும் தெரியபடுத்த SHARE பண்ணுங்க.

News March 4, 2026

நீலகிரி: பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000

image

பெண் குழந்தைகளுக்கு ”முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்” மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000, அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு <>கிளிக்<<>> (அ ) மாவட்ட சமூக நல அலுவலத்தை அணுகவும். நல்ல தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!