Thenilgiris

News March 1, 2026

நீலகிரி: உங்க குழந்தைகளுக்கு மாதம் ரூ.4,000 வேண்டுமா?

image

மத்திய அரசின் ‘மிஷன் வாத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1 குடும்பத்திற்கு அதிகபட்சமாக 2 குழந்தைகளுக்கு மாதம் தலா ரூ.4,000 வீதம் 3 வருடத்திற்கு நிதி வழங்கப்படுகிறது. இதற்கு வருமான சான்றிதழ் போதும். பொது சேவை மையம் (CSC) அல்லது குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம். இந்த பயனுள்ளத் தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News March 1, 2026

நீலகிரி: உங்க PHONE-ல் இந்த எண்கள் இருக்கிறதா?

image

நீலகிரி மக்களே உங்கள் பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் பொருட்கள் கிடைப்பதில் குறைபாடு, ஊழியர்கள் செயல்பாடு அல்லது கடை திறப்பு தாமதம் போன்ற புகார்களை தெரிவிக்க
1. நீலகிரி – 0423-2441216
2. உதகமண்டலம் – 0423-2442433
3. குன்னூர் – 0423-2206102
4. கோத்தகிரி – 04266-271718
5. கூடலூர் – 04262-261252
6. குந்தா – 0423-2508123
7. பந்தலூர் – 04262-220734
இந்த எண்களை SAVE பண்ணிக்கோங்க. இந்த தகவலை SHARE IT.

News March 1, 2026

நாளை பிளஸ் டூ தேர்வு: புகார் அளிக்க எண்கள் அறிவிப்பு

image

நீலகிரி மாவட்ட ஆட்சியர் வெளியீட்டுள்ள செய்தி குறிப்பில்; நாளை பிளஸ் 2 தேர்வு தொடங்க உள்ள நிலையில், தேர்வுகள் தொடர்பான ஏதேனும் புகார்கள் இருப்பின் முதன்மை கல்வி அலுவலர் 9788859030, அரசு தேர்வுகள் உதவி இயக்குனர் 9789773507, நேர்முக உதவியாளர் (மேல்நிலை) 6380075043, நேர்முக உதவியாளர் (இடைநிலை) 8778641230, கண்காணிப்பாளர் 6380734580, பிரிவு எழுத்தர் 9787554038 என்ற எண்களில் அழைக்கலாம்.

News March 1, 2026

நீலகிரி: GH-ல் பிரச்சனையா? இனி இதை பண்ணுங்க!

image

நீலகிரி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் சுகாதார நிலையங்களில் பெட் இல்லை, சிகிச்சைகள் சரியா தரத்தில் இல்லை என புகார் எழுதா?? இனிமே நீங்க செல்லும் போது இது நடந்தா?? தயங்கமா நெல்லை மாவட்ட சுகாதார அதிகாரிக்கு 0423-2449250 அழைத்து தெரியப்படுத்துங்க.. உங்க புகார்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்கபடும்.இதை மற்றவர்களுக்கு தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க, மறக்காம நீங்க SAVE பண்ணுங்க.

News March 1, 2026

நீலகிரி: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

image

நீலகிரி மக்களே, இனி வரும் வெயில் காலங்களில் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டாம். இனிமேல் பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், லைன் மேன் வந்து விடுவார். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News March 1, 2026

கூடலூர் தொகுதி திமுக வேட்பாளர் இவரா ?

image

சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்று வரும் விருப்பமனுத் தாக்கல் நிகழ்வில், வரும் 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் கூடலூர் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து, நீலகிரி மாவட்ட திமுக மகளிர் அணி அமைப்பாளர் கோமதி சிவானந்த ராஜா தனது விருப்பமனுவை வழங்கினார். இந்நிகழ்வின் போது கூடலூர் ஒன்றிய செயலாளர் சிவானந்த ராஜா மற்றும் நிர்வாகிகள் உடனிருந்து அவருக்குத் தங்களது ஆதரவைத் தெரிவித்தனர்.

News March 1, 2026

நீலகிரியில் அதிரடி தடை!

image

முதுமலை புலிகள் காப்பகத்தில் போக்குவரத்து இடையூறைக் குறைக்க, தெப்பக்காடு மாயாற்றின் கரை மற்றும் வளர்ப்பு யானைகள் முகாம் உள்ளிட்ட சாலையோரப் பகுதிகளில் வாகனங்களை நிறுத்த வனத்துறை தடை விதித்துள்ளது. இதற்காகத் தடுப்புக் கற்கள் வைக்கப்பட்டுள்ளன. சுற்றுலாப் பயணிகள் தங்கள் வாகனங்களை ஒதுக்கப்பட்ட உணவகப் பகுதியில் மட்டுமே நிறுத்த வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

News March 1, 2026

நீலகிரி வனக்கோட்டம்: புதிய மாவட்ட வன அலுவலர் பதவி ஏற்பு!

image

நீலகிரி வனக்கோட்ட மாவட்ட வன அலுவலராக பணியாற்றி வந்த கௌதம்பணிமாறுதல் பெற்றதை அடுத்து, இன்று காஷ்யப் ஷசாங் ரவி புதிய மாவட்ட வன அலுவலராக அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்டார். புதிய பொறுப்பை ஏற்றதை தொடர்ந்து, வன பாதுகாப்பு, வன உயிரின பாதுகாப்பு மற்றும் பொதுமக்கள் – வனத்துறை இடையேயான ஒருங்கிணைப்பு பணிகள் இனி வரும் காலங்களில் மேலும் வலுப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது.

News February 28, 2026

நீலகிரி மாவட்டத்தில் கர்ப்பிணிகளுக்கு ரூ.18,000!

image

நீலகிரி மாவட்ட மக்களே, முதல் 2 குழந்தைகள் பெற்றெடுக்கும் கர்ப்பிணிகளுக்கு டாக்டர் முத்துலெட்சுமி மகப்பேறு திட்டத்தின் மூலமாக 3 தவணைகளாக ரூ.18,000/- வழங்கபடுகிறது. ரூ.18,000 வாங்க எங்கேயும் அலைய தேவையில்லை. <> இங்கு க்ளிக்<<>> செய்து அப்ளை செய்தால் போதும். மேலும் தகவல்கள் மற்றும் புகார்களுக்கு 044-22280920 அழையுங்கள். தெரியாதவர்களுக்கு SHARE பண்ணுங்க மக்களே!

News February 28, 2026

நீலகிரி: டிகிரி இருந்தால் ரூ.55,000 சம்பளத்தில் வேலை!

image

நீலகிரி மக்களே, பெடரல் வங்கியில் (Federal Bank) காலியாக உள்ள பல்வேறு அசோசியேட் ஆபீசர் (Associate Officer – Sales) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏதேனும் ஒரு துறையில் பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.38,666 முதல் ரூ.55,833 வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <> இங்கு கிளிக் <<>> பண்ணுங்க. கடைசி தேதி 04.03.2026 ஆகும். SHARE பண்ணுங்க!

error: Content is protected !!