India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் காவேரிபடுகை கொடைக்கானல், குன்னூர் ஆகிய இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் அடுத்த மூன்று நாட்களுக்கு கொடைக்கானல், குன்னூர் செல்வதை தவிர்க்க வேண்டும் என தமிழ்நாடு வெதர்மேன் என்று அழைக்கப்படும் சுயாதீன வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் இன்று (டிச.11) தெரிவித்துள்ளார்.
பந்தலூர் தட்டாம்பாறை பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணசாமி (72) என்பவர் நேற்று மாலை 7 மணிக்கு பஜாரில் இருந்து வீட்டிற்கு திரும்பி சென்று கொண்டு இருந்தார். அப்போது யானைகள் வழி மறிக்கவே வனத்துறையினர் வந்து விரட்டினர். இரவு 11 மணியளவில் ஒரு யானை வீட்டு கதவை உடைத்து உள்ளே நுழைந்தது. சுதாரித்துக் கொண்ட கிருஷ்ணசாமி கூரை வழியாக ஏறி உயிர் தப்பினார்.
ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 10 ஆம் தேதி மனித உரிமைகள் தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில், பிங்கர் போஸ்டில் அமைந்துள்ள நீலகிரி மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு அவர்கள் தலைமையில் இன்று மனித உரிமைகள் உறுதிமொழியினை, அனைத்து அரசுத்துறை அலுவலர்கள், பணியாளர்கள் ஏற்றுக்கொண்டனர்.
நீலகிரி மாவட்டத்தில் இன்று (10.12.2024) இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. உதகை நகரம் ஊரக உட்கோட்டம், குன்னூர் உட்கோட்டம், கூடலூர் மற்றும் தேவாலா உட்கோட்டம் ஆகிய காவல் நிலைய அதிகாரிகளின் தொடர்பு எண்கள், நீலகிரி மாவட்ட காவல்துறையால் வெளியிடப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால், தமிழகத்தில் இன்று முதல் பல மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதில் நீலகிரி மாவட்டத்தில் வரும் 12 மற்றும் 13ஆம் தேதி அன்று ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நீலகிரி மாவட்டத்துக்கு வரும் அரசு பேருந்துகளில் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்கள் எடுத்து வர தடை விதிக்கப்பட்டுள்ளது. பயணிகள் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்கள், குளிர்பான பாட்டில்கள், கேரி பேக்குகள் எடுத்து வர தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதை நடத்துனரும், ஓட்டுனரும் கண்காணிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தவறும் பட்சத்தில் அபராதம் விதிக்கப்படும் என உதகை போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.
குன்னூர், மவுண்ட் பிளசன்டில் கூட்டுறவு நியாய விலை கடை உள்ளது. அங்கு இன்று அதிகாலை ஒரு கரடி கடையின் ஷட்டர் கதவை உடைத்து அரிசி, பருப்பு போன்ற பொருட்களை தின்று சென்றுள்ளது. அதனை தொடர்ந்து வார்டு கவுன்சிலர் ராமசாமி, நியாயவிலை கடையை இன்று பார்வையிட்டார். கரடி உடைத்த ஷட்டரை மாற்ற கேட்டுக்கொண்டார். அவருடன் திமுக கிளை செயலாளர் அல்போன்ஸ் மணி, துணை செயலாளர் சிவராமன் ஆகியோர் உடன் இருந்தனர்.
நீலகிரிக்கு வரும் அரசு பஸ்களில் பிளாஸ்டிக் பாட்டில் இருந்தால் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கிளை மேலாளர்கள் உத்தரவிட்டுள்ள நிலையில், அண்டை மாநிலங்கள் கேரளா மற்றும் கர்நாடகாவில் இருந்து வரக்கூடிய அரசு பேருந்துகளில் பிளாஸ்டிக் பாட்டில்கள் வருகின்றன. இதைத் தடுக்க உரிய நடவடிக்கைகள் போக்குவரத்து கழகம் எடுக்க வேண்டும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
அண்மையில் பெய்த மழையினால் ஊட்டி மரவியல் பூங்கா பசுமையாக காட்சியளிக்கிறது. ஊட்டி பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள இப்பூங்கா குறித்து சுற்றுலா பயணிகளுக்கு தெரியவில்லை. இதனால் பூங்காவை குறைந்த அளவில் சுற்றுலா பயணிகள் பார்த்து செல்கின்றனர். கடந்த இரு மாதங்களாக பெய்த மழையினால் இப்போது பூங்கா பசுமைக்கு திரும்பியுள்ளது. மாவட்ட நிர்வாகம் இந்த பூங்காவை பிரபலப்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
கூடலூர் அருகே முதுமலையில் சாலையோரம் புலி ஒன்று உலா வருகிறது. வனத்துறையினர் கூறுகையில், ‘சமீப நாட்களாக, முதுமலை சாலையோரம் ஓய்வெடுக்கும் புலி மனிதர்களை தாக்கும் ஆபத்து உள்ளது. இவ்வழியாக பயணிக்கும் சுற்றுலா பயணிகள், ஓட்டுநர்கள் விலங்குகள் அருகே, வாகனங்களை நிறுத்தாமல் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும். அதனை மீறி வாகனங்களை நிறுத்தி இடையூறு ஏற்படுத்தினால், வனச்சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.
Sorry, no posts matched your criteria.