India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
1.தெங்குமரஹாடா யானை தாக்கி பெண் பலி
2.உபதலை ஊராட்சி மன்றத்தில் உள்ளிருப்பு போராட்டம்
3.விவசாய தோட்டத்துக்குள் புகுந்த காட்டு யானை
4.கூடலூர்: சேவல் சண்டையில் ஈடுபட்ட 8 பேர் கைது
5.திருவள்ளுவர் புகைப்பட கண்காட்சி ஆட்சியர் பங்கேற்பு
கன்னியாகுமரி அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையின் வெள்ளி விழா ஆண்டு முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இன்று நீலகிரி மாவட்ட மைய நூலகத்தில் நடைபெற்ற புகைப்பட கண்காட்சியினை நீலகிரி மாவட்ட ஆட்சியர் திறந்து வைத்து குத்து விளக்கு ஏற்றி , வைக்கப்பட்டிருந்த கண்காட்சி பார்வையிட்டார். மாவட்ட நூலக அலுவலர் வசந்த மல்லிகா, நூலகர் ரவி , வாசகர் வட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இலங்கை முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கே நான்கு நாட்கள் சுற்றுப்பயணமாக நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு வருகை தந்துள்ளார். இலங்கையில் இருந்து விமான மூலம் கோவை வந்து அங்கிருந்து கார் மூலம் சாலை மறியமாக கோத்தகிரி வழியாக நேற்று மாலை5:30 மணியளவில் ஊட்டி பிங்கர் போஸ்ட் பகுதியில் உள்ள தனியார் பங்களாவிற்கு வந்தார். இலங்கையின் முன்னாள் அதிபர் என்பதால் சுற்றுவட்டார பகுதிகள் காவல்துறை பாதுகாப்பில் வந்துள்ளது.
நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு விடுத்துள்ளசெய்திக்குறிப்பில், உயர் கல்வியில் சேரும் மாணவர்களுக்கு தமிழ் புதல்வன் திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் 15 கல்லூரிகளைச் சேர்ந்த 1,556 மாணவர்களுக்கு மாதம் ரூ.1,000 வீதம் ரூ.15.56 லட்சம் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்துள்ளார்.
சுற்றுலா பயணிகள் ஊட்டி வருவதற்கு ஏதுவாக கெத்தை-மஞ்சூர் வழியாக 3ஆவது மாற்று பாதை உருவாக்கப்பட்டது. எனினும் காப்பு காடு வழியாக இரவில் செல்ல அனுமதி இல்லை. இதனால் காட்டேரி வந்தபின் கேத்தி, பாலாடா, காந்தி நகர், லவ்டேல் வழியாக ஊட்டி செல்ல 4ஆவது மாற்று பாதை அமைக்கப்பட்டது. இது ரூ.81 கோடி செலவில் போடப்பட்டு வருகிறது.
நீலகிரி மாவட்டம், கூடலூர் ஓவேலி பெரிய சூண்டி பகுதியில், சண்டை சேவல்களைப் பயன்படுத்தி சூதாட்டத்தில் ஈடுபடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. கூடலூர் இன்ஸ்பெக்டர் சாகுல்ஹமீது தலைமையில், நியூஹோப் எஸ்.ஐ., குமரன், கணேசன் போலீசார் நேற்று, அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர். சோதனையில், சூதாட பயன்படுத்திய நான்கு சேவல்களையும், 5900 ரூபாய் பணத்தையும் பறிமுதல் செய்தனர். 8 பேரை கைது செய்தனர்.
கூடலூர் காந்தி திடலில் நகர அதிமுக சார்பில் பொதுகூட்டம் இன்று நடைபெற்றது . இதில் நகர செயலாளர் சையத் அனுப்கான் தலைமை தாங்கினார். மாவட்ட அதிமுக செயலாளர் கப்பச்சி வினோத் அவர்கள் முன்னிலையில் மாற்று கட்சிகளை சேர்ந்த 200 பேர் உறுப்பினர் படிவத்தில் கையெழுத்திட்டு அதிமுகவில் இணைந்தனர். இதில் மாநில வர்த்தக அணி தலைவர் சஜீவன், கூடலூர் சட்டமன்ற உறுப்பினர் பொன் ஜெயசீலன் ஆகியோர் பேசினார்கள்.
நீலகிரி மாவட்ட விவசாயிகளுக்கு வேளாண்மை பொறியியல் துறை மூலம் பவர் டில்லர் மற்றும் விசைகளை எடுக்கும் கருவி (பவர் வீடர்) ஆகியவை மானிய விலையில் வழங்கப்படுகின்றன. இது குறித்த மேலும் விவரங்களுக்கு வேளாண்மை பொறியியல் துறையில் செயற்பொறியாளர் உதகமண்டலம், 0423 2960300, குன்னூர் 0423 2960257, கூடலூர் 04262 2965599 ஆகிய எண்களின் தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு தோட்டக்கலை துறைக்கு சொந்தமான பூங்காக்களில் ஒன்றான குன்னூர் சிம்ஸ்பார்க் நர்சரி மேலாளர் கூறுகையில், ஆரஞ்சு பழ நாற்றுகள், பட்டர் ப்ரூட் நாற்றுகளும் விற்பனைக்கு தயாராக உள்ளது. மேலும் மரநாற்றுகள், செடிகள் இல்லாமல் தோட்டக்கலை பயிர் சாகுபடி ஊக்குவிக்க பல மற்றும் காய்கறி பயிர்களின் நடவு பொருட்கள் குறைந்த விலையில் அதிக மகசூல் தரும் ரகங்களை உரிய பணம் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.
நீலகிரி மாவட்டம், உதகை, பிங்கர் போஸ்டில் உள்ள, கூடுதல் ஆட்சியர் அலுவலக கட்டிடத்தில், நேற்று விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு, கலந்துகொண்டார். பின்னர் கூட்டத்தில் பேசிய அவர், “நீலகிரி மாவட்டத்தில் வனவிலங்குகளால் ஏற்படும் பயிர் சேதத்திற்கு இழப்பீடு பெற, விவசாயிகள் நேரடியாக வனத்துறையை அணுகி, விண்ணப்பித்து பயன்பெறலாம்” என தெரிவித்தார்.
Sorry, no posts matched your criteria.