India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நீலகிரி மாவட்டம் குன்னூர் நகருக்கு வராமல் பல கோடி ரூபாயில் மாற்றுப்பாதை தயாராகி செயல்பட்டும் வருகிறது. இந்நிலையில் உதகை நகருக்குள் வராமல் கூடலூர் செல்லும் வாகனங்கள் நகரின் நுழைவு பகுதியான லவ்டேல் – மஞ்சனக்கொரை -மு பாலாடா- பெர்ன்ஹில் -பிங்கர் போஸ்ட் வழியாக கூடலூர் சாலையை வந்தடையும் திட்டம் ரூ 81 கோடி செலவில் வரும் புத்தாண்டு முதல் பணிகள் துவங்கப்பட உள்ளது. இதனால் நகரில் வாகன நெரிசல் குறையும்.
ஊட்டி அரசு கலை கல்லூரி மைதானத்தில், மேற்கு மண்டல ஐஜி செந்தில்குமார் ஆய்வு மேற்கொண்டார். பெண் மற்றும் ஆண் காவலர்கள் நடத்திய அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். மாவட்ட ஆயுதப்படையில் பணிபுரியும் அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு வழங்கப்பட்டுள்ள அரசு வாகனங்கள், உடை மற்றும் பிற பொருட்களை ஆய்வு செய்தார். இதர பணிகள் குறித்து அறிவுரைகள் வழங்கினார். காவலர்களின் குறைகளையும் கேட்டறிந்தார்.
கிறிஸ்துமஸ், புத்தாண்டையொட்டி, மேட்டுப்பாளையம்-ஊட்டி மற்றும் ஊட்டி-மேட்டுப்பாளையம் இடையே சிறப்பு மலை ரயில் இயக்கப்படுவதாக சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் அறிவித்தது. அதன்படி, மேட்டுப்பாளையத்திலிருந்து இன்றுமுதல் 4 நாட்கள் சிறப்பு மலை ரயில் இயக்கப்படுகிறது. ரயில் காலை 9.10 மணிக்கு மேட்டுப்பாளையத்திலிருந்து புறப்பட்டு மதியம் 2.25 மணிக்கு ஊட்டியை சென்றடைகிறது. இதனால் பயணிகள் மகிழ்ச்சி.
1.நீலகிரி மாவட்டத்தில் எம்.ஜி.ஆர் மற்றும் பெரியார் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.
2.50 சவரன் தங்க நகை திருடிய நால்வர் கைது
3.கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடிய அரசு கொறடா
4.திருவள்ளுவர் சிலை வெள்ளிவிழா வினாடி – வினா நிகழ்ச்சி
5.நீலகிரி யானை வழித்தடம்: சுப்ரீம் கோர்ட் அதிரடி
நீலகிரி யானைகள் வழித்தடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்து நீலகிரி ரிசார்ட் உரிமையாளர்கள் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீது உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடந்தது. இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சீவா கன்னா அமர்வு, 2020 இல் இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு இறுதியானது என உத்தரவிட்டது.
நெல்லை நீதிமன்ற வளாகத்தில் வாலிபர் படுகொலை செய்யப்பட்டது பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து டிஜிபி உத்தரவின் பெயரில் ஊட்டி ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் எஸ்ஐ தலைமையில் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதேபோல் மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்றம், குன்னூர், கோத்தகிரி, கூடலூர், பந்தலூர் போன்ற பகுதிகளில் உள்ள நீதிமன்றங்களிலும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
நீலகிரி வனத்துறையில் பணியாற்றும் வனச்சரகர் ஒருவர் தனக்கு கீழ் பணியாற்றும் பெண் ஊழியர் ஒருவரிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியதாக குற்றச்சாட்டு எழுந்தது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு விவகாரம் வெளியான நிலையில் இத்தொடர்பாக வனத்துறை அதிகாரிகள் மற்றும் அரசு சாரா அமைப்பின் உறுப்பினர்கள் அடங்கிய தனிக்குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணை முடிந்த பின்பு நடவடிக்கை எடுக்கப்படும் என தகவல்.
தமிழக முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 37ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு மாவட்ட கழக சார்பாக கோத்தகிரி டானிங்டன் பகுதியில் இன்று காலை 10.30 மணியளவில் எம்ஜிஆரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தப்படுகிறது. இந்த தகவலை நீலகிரி மாவட்ட அதிமுக செயலாளர் கப்பச்சி வினோத் தெரிவித்துள்ளார்.
நீலகிரி மாவட்டம் தேவர் சோலை சுல்தான் பத்தேரி தேசிய நெடுஞ்சாலையில் இன்றைய தினம் காலை எட்டாவது மைல் பகுதியில் அரசு பேருந்தும் எதிரே வந்த லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த வித பாதிப்பும் இல்லை. இந்த விபத்து குறித்து தேவர் சோலை காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நீலகிரி மாவட்டத்தில் இன்று (23.12.2024) இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் உதகை நகரம் ஊரக உட்கோட்டம், குன்னூர் உட்கோட்டம், கூடலூர் மற்றும் தேவாலா உட்கோட்டம் ஆகிய காவல் நிலைய அதிகாரிகளின் தொடர்பு எண்கள் நீலகிரி மாவட்ட காவல்துறையால் வெளியிடப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.