Thenilgiris

News December 26, 2024

நீலகிரி: இன்றைய தலைப்புச் செய்திகள்!

image

➤ புதிய மருத்துவ கல்லுாரி மருத்துவமனை புத்தாண்டில் திறப்பு ➤ யானையை விரட்ட கோரி சேரன்கோட்டில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் ➤ ஜெகதளா அருகே ரைபிள் ரேஞ்ச் பகுதியில் காட்டுத் தீ ➤ புல்லட் யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க உத்தரவு ➤ உதகையில் நாளை அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம் ➤ நீலகிரியில் லாட்டரி சீட்டுகள் விற்பனை அதிகரிப்பு ➤ குன்னூர் சுற்று வட்டார பகுதியில் மழை ➤ கோத்தகிரி நூலகத்தில் பேச்சு போட்டி

News December 26, 2024

நீலகிரியில் மீண்டும் அட்டாக்: அச்சுறுத்தும் புல்லட்!

image

சேரங்கோடு ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் வீடுகளை சேதப்படுத்திய புல்லட் யானையை பிடிக்க பொதுமக்கள் நடத்திய போராட்டத்தின் அடிப்படையில் இந்த யானையை பிடிப்பதற்காக கும்கி யானைகள், வனத்துறையினர் 24 மணி நேரமும் கண்காணிப்பில் இருப்பார்கள், இனி எந்த பாதிப்பும் ஏற்படாது என்று வனத்துறை அறிவித்த நிலையில் நேற்று இரவு காவயல் என்ற பகுதியில் 2 வீடுகளை ‌ புல்லட் யானை சேதப்படுத்தியால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

News December 26, 2024

புதிய மருத்துவ கல்லுாரி மருத்துவமனை புத்தாண்டில் திறப்பு 

image

ஊட்டியில், புதிய மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கான கட்டுமானம் உள்ளிட்ட அனைத்து பணிகளும் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், புத்தாண்டில் திறப்பு விழா நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்போடு, ரூ.447 கோடி மதிப்பீட்டில் பணிகள் துவக்கப்பட்டன. பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ரமேஷ் கூறுகையில், ”பொது பணித்துறை சார்பில், 95% பணிகள் முடிக்கப்பட்டுள்ளன” என்றார் மகிழ்ச்சியுடன்.

News December 25, 2024

மாவட்டம் முழவதும் உறைபனி தாக்கம் அதிகரிப்பு

image

நீலகிரி மாவட்டம் முழுவதும் இரவில் உறைபனி தாக்கம் நிலவுகிறது. மேலும், உதகையில் சில பகுதிகளில் ஜீரோ டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. இதனால் கடுங்குளிர் நிலவியது. உதகை மற்றும் குன்னூர் பகுதியில் வழக்கத்துக்கு மாறாக உறைபனி நிலவியது. மேலும், வாகனங்கள் மீது உப்பு தூவியதுபோல் உறைபனி கிடந்தன. இந்நிலையில், நீலகிரியில் உறைபனி தாக்கம் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News December 25, 2024

ஊட்டியில் 3 நாள் குறும்பட விழா

image

நீலகிரி மாவட்ட வியாபாரிகள் சங்க பேரமைப்பு தலைவர், குறும்பட விழா ஒருங்கிணைப்பாளர் முகமது பாரூக் கூறுகையில், ‘ஊட்டியில் வரும் 27ஆம் தேதி துவங்கி 3 நாள் நடைபெறும் குறும்பட விழாவில் சிறந்த 23 நடுவர்கள் கலந்து கொள்கின்றனர். 50 நாடுகளை சேர்ந்த 550 குறும்படங்கள் இடம் பெறுகிறது. இதில் தேர்வு செய்யப்படும் சிறந்த குறும்படம் ஜெர்மனி நாட்டில் நடக்கும் குறும்பட விழாவில் திரையிடப்படும்’ எனத் தெரிவித்தார்.

News December 25, 2024

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்த நாள் விழா

image

முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் பிறந்த நாள் விழா கோத்தகிரி பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இதில் பாஜக மாவட்ட செயலர் கே.ஜே.குமார், கோத்தகிரி மண்டல் தலைவர் ஆல்தொரை, கோத்தகிரி பொது செயலர் சந்திர மோகன், செயற்குழு உறுப்பினர் அன்பரசன், சி.பி.ராமசந்திர ரெட்டி பலர் பங்கேற்றனர்.

News December 25, 2024

வாஜ்பாயின் 100வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

image

உதகை நகர பாஜக சார்பில்,முன்னாள் பாரதப் பிரதமரும், பொக்ரான் அணுகுண்டு ஏவுகணை நாயகனுமான, அடல் பிகாரி வாஜ்பாய் 100வது பிறந்த தினத்தை முன்னிட்டு உதகை ஏ.டி.சி பாஜக அலுவலகம் முன்பாக இன்று மாவட்ட தலைவர் மோகன்ராஜ் தலைமையில் காலை 11:30 மணிக்கு அட்டல் பிகாரி வாஜ்பாயின் படத்திற்கு மாலை அணிவித்து 100வதுபிறந்த தினத்தை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

News December 25, 2024

எஸ்பி அலுவலக ஃபேஸ்புக்கில் கிறிஸ்துமஸ் வாழ்த்து

image

நீலகிரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலக முகநூல் பக்கத்தில் நீலகிரியில் நடைபெறும் காவல்துறை சம்பந்தப்பட்ட நிகழ்வுகள் இடம்பெறும். தற்போது நீலகிரி மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடும் மக்களுக்கு கிறிஸ்மஸ் வாழ்த்துகளை முகநூல் பக்கத்தில் நீலகிரி மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிடப்பட்டுள்ளது.

News December 25, 2024

விவசாயிகளுக்கு மானிய விலையில் கருவிகள்

image

2024-25ஆம் ஆண்டுக்கான அரசு வேளாண் நிதியில் இருந்து கரூர் மாவட்ட விவசாயிகளுக்கு மானிய விலையில் டில்லர் மற்றும் களை எடுக்கும் கருவிகள் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் ஆதி திராவிடர் பிரிவி சார்ந்த விவசாயிகளுக்கு அவர்களின் பங்களிப்புத் உதவிடும் வகையில் மானியத்துடன் 20 சதவீத கூடுதல் மானியம் தமிழ்நாடு அரசால் வழங்கப்படுகிறது.

News December 25, 2024

கோத்தகிரி ஜமாத் சார்பாக ஆட்சியரிடம் நன்கொடை வழங்கல்

image

மாவட்ட ஆட்சியர் தலைமையில் செயல்படும் முஸ்லிம் மகளிர் உதவும் சங்கத்திற்கு கோத்தகிரி ஜமாத் சார்பாக பாவா சிக்கந்தர் ரூபாய் ஒரு லட்சத்திற்கான காசோலையை நீலகிரி ஆட்சித் தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீருவிடம் நேரில் வழங்கினார். இந்நிகழ்வில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நல அலுவலர் சுரேஷ் கண்ணன் உடன் இருந்தார்.

error: Content is protected !!