India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
1.தேவாலா தனியார் தேயிலை தோட்டத்தில் மலைப்பாம்பு
2.நீலகிரியில் மாவோயிஸ்ட்: எஸ்பி தேடுதல் வேட்டை
3.நீலகிரியில் பிடிபட்ட புல்லட் யானை ஆனைமலை பயணம்
4.உதகையில் விஜயகாந்த் நினைவு நாள் அனுசரிப்பு
5.பாலகொலா ஊராட்சி துணைத் தலைவர் நேரில் ஆய்வு
கூடலூர் தேவாலா அருகே தனியார் தேயிலை தோட்டத்தில் மலைப்பாம்பு ஒன்று படுத்து கிடப்பதாக கிடைத்த தகவலின் பேரில் தேவாலா வனச்சரகர் சஞ்சீவி, வனவர்கள் சுரேஷ்குமார் மற்றும் பாலகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய குழுவினர் மலைப்பாம்பை பத்திரமாக பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விடுவித்தனர். மலைப்பாம்பு படுத்திருந்த நிகழ்வு தேயிலை தோட்ட தொழிலாளர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியிருந்தது.
உதகையில் நேற்று முதல் மூன்று நாட்கள் நடைபெறும் குறும்பட திருவிழாவில் 50க்கும் மேற்பட்ட நாடுகளின் 550 குறும்படங்கள் திரையிடப்பட உள்ளன. இதில் நீலகிரி மாவட்டத்தில் மண்ணின் மைந்தர்கள் என்று அழைக்கப்படும் தோடர் மக்களின் வாழ்க்கையை குறித்த குறும்படமும் முதல்முறையாக திரையிடப்பட உள்ளது. 7 சிறந்த குறும்படங்களுக்கு தங்க யானை உட்பட பல்வேறு விருதுகள் வழங்கப்படுகிறது. படங்களைக் காண மக்களுக்கு அனுமதி இலவசம்.
நீலகிரியில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு. பள்ளி அரையாண்டு போன்ற விடுமுறைகள் தொடர்ச்சியாக வருவதால் சுற்றுலா பயணிகளின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. விடுமுறையை ஒட்டி ஊட்டி தாவரவியல் பூங்கா, படகு இல்லம், ரோஜா பூங்கா, தொட்டபெட்டா சிகரம், தேயிலை பூங்கா போன்றவற்றில் கூட்டம் அலைமோதி வருகிறது.
நீலகிரி சேரங்கோடு பகுதியில் கடந்த ஒரு வாரமாக புல்லட் யானை மக்கள் குடியிருக்கும் பகுதிகளுக்கு சென்று சுமார் 35 வீடுகளை இடித்து, புகுந்து அரிசி உப்பு போன்றவற்றை தின்று அச்சுறுத்தி வந்ததால் அப்பகுதி மக்கள் தூக்கம் இன்றி தவித்து வந்தனர். நேற்றைய தினம் புல்லட் மயக்க ஊசியால் பிடிபட்டதை அடுத்து மக்கள் மகிழ்ச்சியுடன் நிம்மதியாக தூங்கினர்.
மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட புல்லட் யானையை பொக்லைன் மற்றும் கும்கிகள் விஜய் மற்றும் சீனிவாசன் யானைகள் உதவியுடன், மயக்க நிலையில் இருந்த யானை, 7:45 மணிக்கு லாரியில் ஏற்றப்பட்டது. வன வெங்டேஷ் பிரபு கூறுகையில், ”இந்த யானைக்கு மயக்கம் தெளிந்த பிறகு, வனத்துறை உயரதிகாரிகள் ஆலோசனையின் பேரில் எந்த வனப்பகுதியில் விடுவது என்பது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும்,” என்றார்.
பந்தலூர் அருகே உள்ள அய்யங்கொல்லி பகுதியில் நேற்று ‘புல்லட்’ யானைக்கு மயக்க ஊசியை வனத்துறையினர் செலுத்தினர். யானை மயக்க நிலையை அடைந்த பிறகு, அதன் 4 கால்களையும் கயிறு மூலம் கட்டி வைத்துள்ளனர். தற்போது இந்த யானையை கும்கி உதவியுடன் லாரியில் ஏற்றி வேறு இடத்திற்கு கொண்டு செல்லப்படுவதாக கூடலூர் வனத்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் இன்று (27.12.2024) இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் உதகை நகரம் உட்கோட்டம், குன்னூர் உட்கோட்டம், கூடலூர் மற்றும் தேவாலா உட்கோட்டம் ஆகிய காவல் நிலைய அதிகாரிகளின் தொடர்பு எண்கள் நீலகிரி மாவட்ட காவல்துறையால் வெளியிடப்பட்டுள்ளது.
1.புல்லட் யானையை பிடிக்க வந்த பொம்மன் கும்கிக்கு மதம்
2. புல்லட்யானையை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.
3.தவெக சார்பில் மன்மோகன்சிங் படத்துக்கு மலர் அஞ்சலி
4.நீலகிரியில் கடும் மேகமூட்டம் வாகன ஓட்டிகள் அவதி
5.ஆடர்லி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்
சேரங்கோடு ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில், கடந்த ஒரு மாத காலமாக 35க்கும் மேற்பட்ட வீடுகளை சேதப்படுத்திய புல்லட் என்ற காட்டு யானையை பிடிக்க வலியுறுத்தி, பொதுமக்கள் சார்பாக போராட்டம் நடைபெற்ற நிலையில், இன்றைய தினம் கொளப்பள்ளி அய்யன்கொல்லி சாலையில் உள்ள வனப்பகுதியில் பதுங்கி இருந்த புல்லட் யானையை, வனத்துறை மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். இதனால் இப்பகுதி மக்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.