India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நீலகிரி மக்களே, The Indian Port Rail & Ropeway Corporation Limited (IPRCL) காலியாக உள்ள 18 Project Site Engineer பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு B.E./B.Tech படித்திருந்தால் போதுமானது. சம்பளமாக ரூ.54,000 வரை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <

1.நன்னிலம் மகளிர் நில உடைமை திட்டத்தில் நிலம் வாங்க ரூ.5 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது
2.குடும்ப ஆண்டு வருமானம் 3 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்
3.2.5 ஏக்கர் நஞ்சை நிலம் அல்லது 5 ஏக்கர் புஞ்சை நிலம் வாங்கலாம்
4.100 சதவித முத்திரைத்தாள்,பதிவுக்கட்டணம் இலவசம்
5.newscheme.tahdco.com என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கவும்
6.மேலும் விவரங்களுக்கு உங்கள் மாவட்ட தாட்கோ மேலாளரை அணுகலாம்.SHARE பண்ணுங்க!

கோவையை சேர்ந்த +2 மாணவி மாலை நேரத்தில் ஒரு ஆசிரியையிடம் டியூஷன் சென்று வந்தார். அப்போது ஆசிரியையின் கணவரான அக்சித்(27) என்பவர், மாணவியிடம் ஆசைவார்த்தை கூறி பலாத்காரம் செய்துள்ளார். மேலும் மாணவியை கடத்தி சென்றுள்ளார். இந்நிலையில் கோத்தகிரி போலீசார் மாணவியை மீட்டு அவரை கைது செய்தனர். இந்த வழக்கில் ஊட்டி மகிளா கோர்ட் அவருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.11 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கியது.

ஊட்டி: கேரளா மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த திலீப்,40 சந்தன மரம் கடத்தல் வழக்கில் நீதிமன்றம் கடந்த, 2023ம் ஆண்டு ஜூன் 9ம் தேதி திலீப்பிற்கு, 2 ஆண்டு சிறை தண்டனை, 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தது. குற்றவாளி மேல் முறையீடு செய்ய அவகாசம் வழங்கப்பட்டது. மேல்முறையீடு செய்யாமல் தலைமறைவானர். கேரளவில் அவரது வீட்டில் இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் குந்தா வனத் துறையினர் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

நீலகிரி மாவட்டத்தில் (02.10.2025) இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.. அதன்படி உதகை நகரம் ஊரக உட்கோட்டம், குன்னூர் உட்கோட்டம், கூடலூர் மற்றும் தேவாலா உட்கோட்டம் ஆகிய காவல் நிலைய அதிகாரிகளின் தொடர்பு எண்கள் நீலகிரி மாவட்ட காவல்துறையால் வெளியிடப்பட்டுள்ளது.

உதகை சேரிங்கிராஸ் பகுதியில், இன்று உத்தமர் காந்தியடிகளின் பிறந்த நாளை முன்னிட்டு, மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு, மகாத்மா காந்தி திருவுருவ சிலைக்கு, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். உடன் உதகை வருவாய் கோட்டாட்சியர் டினு அரவிந்த், உதகை நகராட்சி ஆணையாளர் கணேசன், உதகை வட்டாட்சியர் சங்கர் கணேஷ், உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

நீலகிரி மாவட்டத்தில் செயல்பட்டு வரும், தனியார் நிறுவனத்தில் உள்ள BRANCH INTERN ASSOCIATE பணியிடங்களை நிரப்ப, தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. மாத ஊதியமாக ரூ.15,000 முதல் ரூ.25,000 வரை வழங்கப்படும். இந்த பணிக்கு முன் அனுபவம் தேவையில்லை. இதற்கு டிகிரி முடித்தவர்கள் இங்கே <

நீலகிரி மக்களே.., வைரஸ் காய்ச்சல் பரவி வரும் நிலையில் காய்ச்சல் குறித்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் சந்தேகங்களை வீட்டில் இருந்தே தெரிந்துகொண்டு, பின்பு சிகிச்சை பெறலாம். காய்ச்சலுக்கான அறிகுறிகள் இருந்தால் உடல்நலம் குறித்த கேள்விகளுக்கு ‘104’ என்ற எண்ணைத் தொடர்புகொண்டு ஆலோசனை பெறலாம். இதை உடனே SHARE பண்ணுங்க!

நீலகிரி மக்களே.., உங்கள் வடிரைவிங் லைசன்ஸ், ஆர்.சி புக் தொலைந்துவிட்டதா..? கவலை வேண்டாம்! உடனே இங்கே கிளிக் செய்து <

நீலகிரி மக்களே.., பிஸ்னஸ் செய்ய ஆசையா..? தமிழக அரசின் பல்வேறு மானியம் திட்டங்கள் உள்ளன.
1)ஆவின் பால் கடை வைக்க மானியம்: https://tahdco.com/
2)இளைஞர்கள் தொழில் தொடங்க மானியம்: https://msmeonline.tn.gov.in/uyegp
3)முதல்வர் மருந்தகம் வைக்க மானியம்: https://mudhalvarmarundhagam.tn.gov.in/
4)கோழிப் பண்ணை மானியம்(அருகே உள்ள கால்நடை மருத்துவமனையை அணுகவும்)
உடனே SHARE!
Sorry, no posts matched your criteria.