Thenilgiris

News March 16, 2025

கூடலூரில் ஜிப்லைன் சாகசம்

image

நீலகிரி மாவட்டம், கூடலுார் பகுதியில் சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில், நாடுகாணி ஜீன்பூல் சூழல் சுற்றுலா தாவர மையத்தில், தமிழ்நாடு பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் பருவநிலை மாற்றத்திற்கான பசுமை திட்டத்தின் கீழ், 1.7 கோடி ரூபாய் செலவில், சுற்றுலா சார்ந்த உட்கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அங்குள்ள ஜிப்லைனில் தொங்கியபடி சாகசம் செய்வதில் சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

News March 16, 2025

கூடலூர்: யானைகள் ஊருக்குள் நுழைவதை தடுக்க நடவடிக்கை!

image

கூடலுார் பகுதியில், காட்டு யானைகள் ஊருக்குள் நுழைவதைத் தடுக்க, 6 கோடி ரூபாய் மதிப்பில், செயற்கை நுண்ணறிவு கருவிகள் பொருத்தும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். ஊசிமலை பகுதியில் ‘ஒயர்லெஸ் ரிப்பீட்டர்ஸ் சென்டர், கட்டுப்பாட்டு அறை, 35 முன்னெச்சரிக்கை கோபுரங்கள்’ அமைத்து, செயற்கை நுண்ணறிவு கேமராக்கள் பொருத்துவதற்கான பணி நடந்து வருகிறது. பணி முடிந்து, வரும் 25ம் தேதி செயல்பாட்டுக்கு வரும்.

News March 15, 2025

காணிக்கை தொகையில் ரிசார்ட் கட்டும் அரசாணை வாபஸ்

image

பொள்ளாச்சி ஆனைமலை மாசாணி அம்மன் கோயில் காணிக்கை தொகை ரூ.100 கோடி வங்கியில் வைப்புத் தொகையாக உள்ளது. ரூ.1.4 கோடி ரூபாய் எடுத்து ஊட்டியில் ரிசார்ட் கட்ட அரசு முடிவு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் மாசாணி அம்மன் கோயில் நிதியிலிருந்து உதகையில் ரிசார்ட் கட்டப்படும் என்ற அறிவிப்பை வாபஸ் பெறுவதாக அரசு அறிவித்துள்ளது.

News March 15, 2025

தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிப்பு!

image

தமிழக அரசின் நிதி நிலை அறிக்கையில், குன்னூரில் புதிதாக அரசு கலை கல்லூரி மற்றும் ஊட்டியின் மையப் பகுதியில் 52 ஏக்கரில் அமைந்துள்ள குதிரை பந்தைய மைதானத்தை ரூ.70 கோடி செலவில் பூங்கா அமைக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதற்கு நீலகிரி எம்பி, ஆ.ராசா மற்றும் தமிழக அரசு தலைமை கொறடா ராமசந்திரன் ஆகியோர் நேற்று முதல்வரை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

News March 15, 2025

மாலை 6 மணிக்கு மேல் வெளியே வராதீர்: வனத்துறை 

image

ஊட்டி அருகே மைனலை, அரக்காடு தேயிலை தோட்டத்தில் வனவிலங்கு தாக்கி அஞ்சலை என்ற பெண் தொழிலாளி பலியானார். எனவே அந்த பகுதியில் உள்ளவர்கள் தாக்கிய விலங்கு பிடி படும் வரை மாலை 6 மணிக்கு மேல் வெளியே செல்ல வேண்டாம் என்றும், தங்கள் கால் நடைகளை மேய்ச்சலுக்கு அனுப்ப வேண்டாம் என்றும் ஊட்டி வனச்சரகர் சசிகுமார் எச்சரித்து உள்ளார்.

News March 14, 2025

நம்ம ஊர்! நம்ம கோயில்!

image

நீலகிரி: குன்னூர் மேல் கடைவீதியில், தந்தி மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இங்கு அம்மன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். அம்பாள் ஊஞ்சலாடியதாக கூறப்படும் மரம் இப்போதும் இருக்கிறது. திருமணத்தடை, புத்திரதோஷம் நீங்கவும், தொழில் விருத்தியடையவும், ஐஸ்வர்யம் பெருகவும், கல்வி மேன்மைக்கும், பதவி உயர்வு கிட்டவும் இங்கு பிரார்த்தனை செய்கின்றனர். உங்கள் ஊர் கோயில் சிறப்புகளை கமெண்டில் தெரிவிக்கவும்!

News March 14, 2025

நீலகிரியில் பட்ஜெட் அறிவிப்புகள்

image

2025-26ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார்.

▶நீலகிரியில் புதிய கலை அறிவியல் கல்லூரிகள்

▶நீலகிரியில் வேட்டை தடுப்பு ஆராய்ச்சி மையம்

News March 14, 2025

மர்ம விலங்கு தாக்கிப் பெண் மரணம்: வனத்துறை அறிவுரை

image

உதகை வன விலங்கு தாக்கிய சம்பவத்தை வனத்துறையினர் கூறும்போது,“அஞ்சலையை தாக்கி கொன்று இழுந்து சென்று சாப்பிட்டது சிறுத்தையா அல்லது புலியா என்பதை கண்டறிய அப்பகுதியில் சோதனை செய்து வருகின்றனர். மேலும் அப்பகுதியில் நவீன தானியங்கி கேமராக்கள் பொறுத்தி வன விலங்கை கண்டறியவும்,ஞாயிற்றுகிழமை வரை அந்த பகுதியில் யாரும் பசுந்தேயிலையை பறிக்க செல்ல கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது” என்று அவர்கள் கூறினர்.

News March 14, 2025

ஊட்டிக்கு செல்லும் மின்சார வாகனங்களுக்கு இ-பாஸ்

image

கோடை கால நெரிசலைத் தவிர்க்கும் வகையில் ஊட்டிக்கு செல்லும் சுற்றுலா வாகனங்களின் எண்ணிக்கையில் புதிதாக கட்டுப்பாடுகள் விதித்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம். ஊட்டிக்கு செல்லும் மின்சார வாகனங்களுக்கு இ-பாஸ் வழங்கும் நடைமுறையில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை வரும் ஏப்.25-க்கு தள்ளி வைத்துள்ளது.

News March 13, 2025

உதகை அருகே வனவிலங்கு தாக்கி பெண் பலி

image

உதகை பேரார் பகுதியில் அருகே தேயிலை பறிக்கச் சென்ற இடத்தில் வனவிலங்கு தாக்கி அஞ்சலை என்பவர் உயிரிழந்துள்ளார். அஞ்சலையின் உடலை மீட்டு உதகை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில், அஞ்சலையை கொன்ற புலியை பிடிக்க அப்பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது.

error: Content is protected !!