Thenilgiris

News September 9, 2024

கோடநாடு: துப்பாக்கி சூடு நடத்தி, மரங்களை வெட்டிய 5 பேர் கைது

image

கோத்தகிரி அருகே உள்ள ஈளாடா பாரதிநகரைச் சேர்ந்தவர்கள் சசிகுமார்(39), அருள்செல்வன்(30), நாகராஜ்(34), கிருஷ்ணகுமார்(48) மற்றும் பிரகாஷ் குமார்(22) ஆகிய 5 பேரும் கோடநாடு அருகே உள்ள கர்சன்வேலி காப்புகாட்டில், அத்துமீறி நுழைந்து, கற்பூர மரங்களை வெட்டியதும் ,ஏர்கன் துப்பாக்கி கொண்டு துப்பாக்கி சூடு நடத்தியதாக வனதுறையினர் விசாரணையில் தெரிய வந்தது. அவர்களை வனத்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

News September 8, 2024

காளான் விலை உயர்வு: விவசாயிகள் மகிழ்ச்சி

image

நீலகிரி மாவட்டத்தில் தயாராகும் மொட்டு காளான் சுவை மிகுந்தது. அசைவ உணவிற்கு ஈடான சுவை உள்ளதால் சுப நிகழ்ச்சிகளின் போது தவிர்க்க முடியாத உணவாக உள்ளது. தற்போது முகூர்த்த நாட்களில் விசேஷ நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், நீலகிரி மொட்டுக் காளானுக்கு சந்தையில் தேவை அதிகரித்து அதன் விலையும் உயர்ந்து வருகிறது. கிலோ ரூ.250 முதல் 300 ரூபாய் வரை விற்பனையாவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்து உள்ளனர்.

News September 8, 2024

நீலகிரி: தூய்மை பணியாளரை தரக்குறைவாக பேசிய அதிகாரி

image

நீலகிரி: குன்னூர் மவுண்ட் சாலையில் உள்ள பரபல வங்கியில் பணிபுரியும் வங்கி மேலாளர் ஒருவர், சிம்ஸ்பூங்கா அருகே உள்ள அவரது வீட்டில் குப்பைகளை மக்கும், மக்காத குப்பையாக பிரித்து வழங்குமாறு கேட்ட தூய்மை பணியாளரை, அவரும் அவரது மனைவியும் தரக்குறைவாக பேசியுள்ளனர். இந்நிலையில் இச்செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது எனவும், தூய்மை பணியாளரிடம் மன்னிப்பு கேட்கவேண்டும் என்றும் பலர் கூறி வருகின்றனர்.

News September 8, 2024

நீலகிரி மாவட்டத்தில் எஸ்பி நிஷா ஆய்வு

image

நீலகிரி மாவட்டம் ஊட்டி, குன்னூர், குந்தா, பந்தலூர், கூடலூர், கோத்தகிரி ஆகிய வட்டங்களில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, கிராம கோயில்கள் மற்றும் முக்கிய சாலை ஓரங்களில் நூற்றுக் கணக்கான விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் இவற்றை மாவட்ட எஸ்பி. என்.எஸ் நிஷா நேரில் ஆய்வு செய்து பாதுகாப்பு அறிவுரைகளை வழங்கி வருகிறார்.

News September 8, 2024

நீலகிரியில் சிறப்பு மலை ரயில் சேவை

image

நீலகிரி மாவட்டம் குன்னூர், உதகை, மேட்டுப்பாளையம் இடையே இயக்கப்படும் மலை ரயிலில் பயணிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆர்வம் கட்டி வருகின்றனர். தற்போதுள்ள வழக்கமான சேவையுடன் குன்னூர்- உதகை, உதகை -குன்னூர் இடையே தலா ஒரு முறையும் உதகை- கேத்தி, கேத்தி -உதகை இடையே மூன்று முறை சிறப்பு சுற்று மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில்களில் சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் பயணித்து வருகின்றனர்.

News September 8, 2024

நீலகிரியில் மீன் லாரி கவிழ்ந்து விபத்து

image

சத்தியமங்கலத்தில் இருந்து நீலகிரி மாவட்டத்திற்கு நேற்று லாரி ஒன்று மீன் ஏற்றி வந்தது. பின்னர் குன்னூரில் கடைகளுக்கு மீன் விநியோகம் செய்து விட்டு, கோத்தகிரிக்கு சென்று கொண்டிருக்கும் போது, பெட்டட்டி அருகே டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் கவிழ்ந்து மீன்கள் சிதறின. இதில் டிரைவர் ராமன், கிளீனர் சதீஷ் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

News September 8, 2024

நீலகிரி: ஏர்கன் வெடித்ததில் தொழிலாளி காயம்

image

கோத்தகிரி: ஈளாடா கர்சன்வேலி வனப்பகுதிக்கு, சசிகுமார் என்பவர் நண்பர்களுடன் கடந்த வியாழக்கிழமை மரம் வெட்ட சென்றுள்ளார். அப்போது குரங்குகளை விரட்ட ஏர் கன் துப்பாக்கி ஒன்றை உதயன் என்பவரிடம் வாங்கிச் சென்றதாக கூறப்படுகிறது. அதில் குண்டை லோடு செய்யும்போது தவறுதலாக வெடித்ததில், அவரது நண்பர் சதாசிவத்தின் காலில் துளைத்து சென்றது. இதுகுறித்த போலீசார் தகவலின் பேரில் வனத்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

News September 7, 2024

கோத்தகிரியில் சாய் பல்லவி தங்கை திருமணம்

image

கோத்தகிரியை அடுத்த அணையட்டி கிராமத்தை சேர்ந்த பிரபல சினிமா நடிகை சாய் பல்லவியின் தங்கை பூஜா திருமணம், நெடுகுளா மணமகன் வினீத் இல்லத்தில் நேற்று முன்தினம் படுகர் இன பாரம்பரிய முறைபடி நடந்தது. மணமகன் வினீத், சுற்றுலா மந்திரி ராமசந்திரன் பேரன் ஆவார். தொடர்ந்து நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில், அய்யன் பாபு, பிரீத்தம்குமார் , போஜராஜன் உள்ளிட்ட தேயிலை தொழில் அதிபர்கள் திரளாக பங்கேற்றனர்.

News September 7, 2024

நீலகிரி: யானையிடம் உயிர் தப்பிய தாய், மகன்

image

நீலகிரி: மசினகுடி பொக்காபுரம் மேல்தக்கல் பகுதியை சேர்ந்தவர் தெய்வத்தாய் (47), இவரது மகன் கோகுல்ராஜ். இவர்கள் 2 பேரும் நேற்று பைக்கில் பொக்காபுரம் சாலை வழியாக சென்றனர். அப்போது திடீரென சாலைக்கு வந்த காட்டு யானை இவர்களை தாக்கியது. உடனே அவர்கள் பைக்கை அங்கேயே விட்டுவிட்டு ஓடிச்சென்று உயிர் தப்பினர். இதையடுத்து ஆத்திரமடைந்த யானை பைக்கை சேதப்படுத்தியது.

News September 7, 2024

பங்குச்சந்தை முதலீட்டில் நஷ்டம் – இராணுவ வீரர் தற்கொலை

image

கோத்தகிரி கொட்டகம்பையை சேர்ந்தவர் பிரபாகரன்(32). இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து வரும் இவருக்கு திருமணமாகி ஷாலினி என்கிற மனைவி, 6 வயதில் மகள் உள்ளனர். ஜம்மு காஷ்மீரில் இருந்து விடுமுறைக்காக கோத்தகிரி வந்த இவர் ஆன் லைனில் 10 லட்சம் ரூபாய் வரை கடன் பெற்று. பங்கு சந்தையில் முதலீடு செய்து நஷ்டமடைந்துள்ளார் . மனஉளைச்சலில் இருந்த அவர் நேற்று காலை தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.