Thenilgiris

News December 18, 2024

நீலகிரி: கட்டிலுக்கு அடியில் பதுங்கி உயிர் தப்பிய சம்பவம்

image

நேற்று முன்தினம் இரவு பந்தலூரில் உள்ள படைச்சேரி என்ற இடத்தில் ஜானகி (84), என்பவரது வீட்டு கதவை உடைத்து உள்ளே சென்ற யானை, அரிசி உட்பட உணவு பொருட்களை எடுத்து ருசித்துள்ளது. ஒரு மணி நேரம் வீட்டிற்குள் யானை நின்றிருந்த நிலையில், அருகில் இருந்த அறையில் ஜானகியும், அவரது பேத்தி ரேஷ்மாவும் பீதியுடன் கட்டிலுக்கு அடியில் பதுங்கி இருந்தனர். வனத்துறையினர் வந்து யானையை விரட்டினர்.

News December 17, 2024

நீலகிரி தலைப்புச் செய்திகள்

image

1.ஊட்டி தாவரவியல் பூங்காவில் ‘சீனா ராணி’
2.டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்க கோரிக்கை
3.கருமாரியம்மன் கோயில் புனர் பூஜை விழா
4.தடுப்பூசி போடும் பணி: கலெக்டர் தொடங்கி வைப்பு
5.நீலகிரியில் ரூ.6000 உதவித் தொகை

News December 17, 2024

ஊட்டி தாவரவியல் பூங்காவில் ‘சீனா ராணி’

image

ஊட்டி தாவரவியல் பூங்காவில் பலதரப்பட்ட நூற்றுக் கணக்கான வகை மலர்கள் பூத்து குலுங்கி வரும் நிலையில், டிசம்பர் மாதம் முதல் பிப்ரவரி வரை மலரும் ‘சீனா ராணி’ (குயின் ஆப் சைனா) மலர்களின் சீசன் தற்போது துவங்கி பூத்து உள்ளன. இதை காண சுற்றுலா பயணிகள் மற்றும் மலர் விரும்பிகள் அதிக அளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

News December 17, 2024

டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்க கோரிக்கை

image

நீலகிரி மாவட்ட டாஸ்மாக் ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ஜே ஆல்துரை நீலகிரி மாவட்ட ஆட்சியருக்கு அளித்த மனுவில், நீலகிரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற ஹெத்தையம்மன் பண்டிகையின்போது அன்றைய தினம் பெரும்பாலான மக்கள் மதுவை தவிர்த்து விரதம் மேற்கொள்வர். அன்றைய தினம் மாவட்ட நிர்வாகம் உள்ளூர் விடுமுறை விடும். அப்போது டாஸ்மாக் கடைகளுக்கும், ஊழியர்களுக்கும் விடுமுறை அளிக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.

News December 17, 2024

தடுப்பூசி போடும் பணி: கலெக்டர் தொடங்கி வைப்பு

image

நீலகிரி, உதகை ஊராட்சி இத்தலார் ஊராட்சிக்குட்பட்ட அப்புக்கேடு பகுதியில் கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் தேசிய கால்நடை நோய் தடுப்புத்திட்டத்தின்கீழ், கால்நடைகளுக்கு ஆறாம் சுற்று கோமாரி நோய் தடுப்பூசி போடும் பணிகளை மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு தொடங்கி வைத்து, பார்வையிட்டார்.

News December 17, 2024

மக்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டம்: ஆட்சியர் உத்தரவு

image

நீலகிரி மாவட்டத்தில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறுகிறது. நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு நாளில் 150 மனுக்கள் பெறப்பட்டன. பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பெறப்பட்ட மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

News December 17, 2024

நீலகிரியில் ரூ.6000 உதவித் தொகை

image

சமூக சேவகர் முல்ஜி நிதியில் இருந்து, 10ம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்பு படித்து உயர் கல்வி படிக்கும் நீலகிரி பழங்குடியின மாணவ, மாணவிகளுக்கு நாவா சார்பில், ஆசிரியர் பயிற்சி, பாலிடெக்னிக் உள்ளிட்ட அனைத்து உயர் கல்வி பட்ட படிப்பிற்கு ரூ.3,000 முதல் ரூ.6,000 வரை ஊக்க தொகை வழங்கப்படுகிறது. விண்ணப்பிக்க: செயலர், நீலகிரி ஆதிவாசி நல சங்கம், கோட்ட ஹால் ரோடு, கோத்தகிரி. 643217 அணுகவும்.

News December 17, 2024

நீலகிரியில் எக்ஸ்பிரஸ் கட்டணம்: நீதிமன்ற அவமதிப்பு வழக்கு

image

நீலகிரி அரசு பஸ்களில் எக்ஸ்பிரஸ் கட்டணம் வசூலிப்பதை ரத்து செய்ய,கோடேரி கிராமத்தை சேர்ந்த மனோகரன்,சென்னை ஐகோர்ட்டில்,2019ம் ஆண்டில் வழக்கு தொடுத்தார். இதில், கூடுதல் கட்டணம் வசூலிக்கும் பஸ்களின் உரிமத்தை ரத்து செய்ய,வட்டார போக்குவரத்து துறைக்கு, கடந்த பிப்.23ம் தேதி நீதிபதி உத்தரவிட்டார்.ஆனால் போக்குவரத்து கழகம் தொடர்ந்து எக்ஸ்பிரஸ் கட்டணம் வசூலித்து வருகிறது. எனவே நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு.

News December 17, 2024

நீலகிரியில் கரடிகள் நடமாட்டம் அதிகரிப்பு: மக்கள் அச்சம்

image

நீலகிரி மாவட்டம் குன்னுார் பகுதிகளில் கரடிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. குன்னூர் அரசு மேல் நிலைப்பள்ளி துவக்கப் பள்ளிக்கு அடிக்கடி கரடிகள் வருகின்றன. அங்கு புதிய சத்துணவு மையத்தின் கதவை உடைத்து உணவு பொருட்களை சேதப்படுத்துகின்றன. இதேபோல் கோத்தகிரி அருகே உள்ள கூக்கல் தொரை பகுதியில் உள்ள குடியிருப்பு நடைபாதைகளில் கரடி நடமாட்டம் இருப்பதால் அப்பகுதி மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். 

News December 16, 2024

நீலகிரியில் இன்றைய இரவு ரோந்து அதிகாரிகள் விவரம் 

image

நீலகிரி மாவட்டத்தில் இன்று (16.12.2024) இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, உதகை நகரம் ஊரக உட்கோட்டம், குன்னூர் உட்கோட்டம், கூடலூர் மற்றும் தேவாலா உட்கோட்டம் ஆகிய காவல் நிலைய அதிகாரிகளின் தொடர்பு எண்கள், நீலகிரி மாவட்ட காவல்துறையால் வெளியிடப்பட்டுள்ளது

error: Content is protected !!