Thenilgiris

News January 7, 2026

நீலகிரி: பேருந்தில் Luggage-ஐ தவறவிட்டீர்களா ?

image

அரசு பேருந்துகளில் பயணிக்கும் போது Luggage-ஐ பேருந்துலேயே மறந்து வைத்து இறங்கிவிட்டால் பதட்டபட வேண்டாம். நீங்கள் வாங்கிய டிக்கெட்டில் அந்த பேருந்தின் எண் இருக்கும். அந்த விவரத்தை 044-49076326 என்ற எண்ணிற்கு அழைத்து, எங்கிருந்து எங்கு பயணித்தீர்கள்?, என்ன தவறவிடீர்கள் என்பதை கூறினால் போதும். பேருந்தின் நடத்துனர் உங்களை தொடர்புகொண்டு எங்கு வந்து பொருளை வாங்க வேண்டும் என்பதை கூறுவார். ஷேர் பண்ணுங்க.

News January 7, 2026

நீலகிரி: ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு!

image

நீலகிரி மக்களே.., பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பரிசு பொருட்கள், ரூ.3,000 ரொக்கம் வழங்கப்படவுள்ள நிலையில் ரொக்கம்ரேஷன் கடையில் கைரேகை சரியாக வேலை செய்யாமல் போக வாய்ப்புண்டு. இந்த சிக்கலை தீர்க்க இப்பவே<> இங்கே க்ளிக்<<>> செய்து Grievance Redressal, நீலகிரி மாவட்டம், குடும்ப அட்டை எண் மற்றும் புகார் விவரங்களை குறிப்பிட்டு புகாரளித்தால் உங்கள் கைரேகை புதுப்பித்துவிடுவார்கள். புகாரில் தாமதமா: 1967 (அ) 1800-425-5901 அழைக்கலாம். SHARE IT

News January 7, 2026

JUST IN: ஊட்டியில் அதிகாரிகள் அதிரடி!

image

ஊட்டியில் தனியார் அறக்கட்டளை வளாகத்தில் உரிமம் பெறாமல் செயல்பட்டதாக வந்த புகாரின் பேரில் ஆய்வு நடத்தப்பட்டது. இதில், 17 அறைகளுக்கு மூன்று ஆண்டுகளாக வாடகை செலுத்தாததும், ஒன்றரை ஆண்டுகளாக உரிமம் புதுப்பிக்காமல் செயல்பட்டதும் தெரியவந்தது. இதையடுத்து கமிஷனர் கணேசன் உத்தரவின் பேரில், நகராட்சி சுகாதார அலுவலர் சிபி தலைமையில் நகராட்சி அலுவலர்கள் 17 அறைகளுக்கு சீல் வைத்தனர்.

News January 7, 2026

JUST IN: ஊட்டியில் அதிகாரிகள் அதிரடி!

image

ஊட்டியில் தனியார் அறக்கட்டளை வளாகத்தில் உரிமம் பெறாமல் செயல்பட்டதாக வந்த புகாரின் பேரில் ஆய்வு நடத்தப்பட்டது. இதில், 17 அறைகளுக்கு மூன்று ஆண்டுகளாக வாடகை செலுத்தாததும், ஒன்றரை ஆண்டுகளாக உரிமம் புதுப்பிக்காமல் செயல்பட்டதும் தெரியவந்தது. இதையடுத்து கமிஷனர் கணேசன் உத்தரவின் பேரில், நகராட்சி சுகாதார அலுவலர் சிபி தலைமையில் நகராட்சி அலுவலர்கள் 17 அறைகளுக்கு சீல் வைத்தனர்.

News January 7, 2026

நீலகிரி: 50% தள்ளுபடியில் ரூ.3 லட்சம் கடன்

image

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற <>இங்கே கிளிக் <<>>செய்யவும் அல்லது அருகிலுள்ள பொதுத்துறை அல்லது வணிக வங்கிகளை அணுகலாம். (ஷேர் பண்ணுங்க)

News January 7, 2026

நீலகிரி கலெக்டர் முக்கிய அறிவிப்பு

image

நீலகிரி மாவட்ட கால்நடை பண்ணைக்கு நல்ல தரம் உள்ள உலர் தீவனம் (வைக்கோல்) மாதம், 25 மெட்ரிக் டன் வீதம், 10 மாதங்களுக்கு தேவைப்படுகிறது. தீவனம் வழங்க விரும்புவோர் வரும் 8ம் தேதி பிற்பகல் 3 மணி அளவில் நடைபெறும் டெண்டரில் கலந்து கொள்ளலாம். விருப்பம் உள்ளவர்கள், அலுவலக நாட்களில் காலை 10:30 மணி முதல் மாலை 2:30 மணி வரை ஏல விபரங்களை பெற்று கொள்ளலாம். விவரங்களுக்கு, 80722 31345 எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

News January 7, 2026

நீலகிரி: SBI வங்கியில் ரூ.51,000 சம்பளத்தில் வேலை

image

நீலகிரி மக்களே, SBI வங்கியில் காலியாக உள்ள Customer Relationship Executive 284 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. இப்பணிக்கான விண்ணப்ப தேதி ஜன.10-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 20-35 வயதுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் <>இங்கு க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கவும். சம்பளம் ரூ.51,000 வழங்கப்படும். இதற்கு தேர்வு கிடையாது. இந்த நல்ல தகவலை SHARE செய்யுங்க

News January 7, 2026

குன்னுாரில் அபாயம்.. மக்கள் அச்சம்

image

குன்னுார்- ஊட்டி சாலை பாலவாசி அருகே வளைவில் ஏற்பட்ட மண்சரிவு மற்றும் விழுந்த மரத்தின் அடிப்பாகம் அகற்றப்படவில்லை. இதனால், குன்னுாரில் இருந்து ஊட்டி செல்லும் அரசு பஸ்கள் உட்பட பிற வாகனங்கள், இதன் மீது மோதி விபத்துக்குள்ளாகி பலருக்கும் காயம் ஏற்படும் நிலை உள்ளது. எனவே, நெடுஞ்சாலை துறையினர் இதை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

News January 7, 2026

நீலகிரிக்கு இன்று உள்ளூர் விடுமுறை

image

நீலகிரி மாவட்டத்தில் வசித்து வரும் படுக இன மக்கள் ஹெத்தையம்மனை குல தெய்வமாக வழிபட்டு வருகின்றனர். இதனையொட்டி, ஆண்டுதோறும் கோத்தகிரி அருகே பேரகணியில் உள்ள ஹெத்தை அம்மன் கோயிலில் திருவிழா நடத்தபட்டு வருவது வழக்கம். இத்திருவிழாவின்போது மாவட்டம் முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான படுகர் இன மக்கள் அங்கு சென்று ஹெத்தை அம்மனை வழிபடுவர். இத்திருவிழாவையொட்டி இன்று (ஜன.7) உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.

News January 7, 2026

நீலகிரி: இரவு ரோந்து போலீசார் விவரம்

image

நீலகிரி மாவட்டத்தில் நேற்று (ஜன.06) இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் தொடர்பு எண்கள் வெளியிடப்பட்டுள்ளன. உதகை நகரம், ஊரக உட்கோட்டம், குன்னூர், கூடலூர் மற்றும் தேவாலா உட்கோட்டம் ஆகிய காவல் நிலைய அதிகாரிகளை இந்த எண்களில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது. அவசர காலங்களில் பொதுமக்கள் இந்த உதவி எண்களை பயன்படுத்தி பயன்பெறலாம்.

error: Content is protected !!