Thenilgiris

News July 30, 2024

மருத்துவ பரிசோதனைக்கு பின் மீண்டும் சவுக்கு சங்கர் ஆஜர்

image

பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் நேற்று ஊட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி தமிழினியன் யூடியூபர் சவுக்கு சங்கரை 24 மணி நேரம் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி அளித்தார். மேலும், இன்று (30.7.24) மாலை 5 மணிக்கு சவுக்கு சங்கரை மருத்து பரிசோதனை செய்தபின் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டார்.

News July 30, 2024

நீலகிரியில் மிகமிக பலத்த மழை பதிவு

image

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 5 இடங்களில் மிகமிக பலத்த மழை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, நீலகிரியில் உள்ள மின்ட்வொர்த் எஸ்டேட் பகுதியில் 24 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால், கடந்த சில நாட்களாக பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. இதனால், இன்று நீலகிரியில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

News July 30, 2024

நீலகிரியில் இன்று விடுமுறை

image

தொடர் கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்திற்கு இன்று அனைத்துப் பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்து ஆட்சியர் லட்சுமி பாவ்யா தன்னீரு அறிவித்துள்ளார். தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் நீலகிரி மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை நேற்றே விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இரவிலிருந்து மழை கொட்டித் தீர்த்து வருகிறது.பொதுமக்கள் வெளியே செல்லும்போது எச்சரிக்கையுடன் இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

News July 30, 2024

தேசிய கால்பந்து: குன்னூர் சிறுவன் தேர்வு

image

நீலகிரி மக்கள் கிரிக்கெட் போன்ற விளையாட்டை விட கால்பந்து விளையாட்டில் மிகுந்த ஆர்வம் காட்டி விளையாடி வருகிறார்கள். இந்த நிலையில் தும்மனட்டி அருகே டி.மணியட்டியை சேர்ந்த குமார் என்பவரது மகன் தீக்சித் (15) தற்போது சத்தீஷ்கரில் நடந்து வரும் தேசிய ஜூனியர் கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் விளையாட தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

News July 29, 2024

பள்ளி மேலாண்மைக்குழு மறுகட்டமைப்பு ஆயத்த கூட்டம்

image

உதகையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக அரங்கில் மாவட்ட பள்ளி கல்வி துறையின் சார்பில் பள்ளி மேலாண்மைக்குழு மறுகட்டமைப்பு ஆயத்த கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டம் மாவட்ட ஆட்சி தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு தலைமையில் நடைபெற்றது. இதில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள், உதவி கல்வி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

News July 29, 2024

கூடலூர் – உதகை சாலையில் மண் சரிவு

image

கூடலூர் – உதகை தேசிய நெடுஞ்சாலை தவளை மலை பகுதியில் சற்று முன் (ஜூலை 29) மண் சரிவு ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சாலை சீரமைக்க பல மணி நேரம் ஆக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதனால், உதகை – கூடலூர் சாலையில் இரவு நேரத்தில் பேருந்து மற்றும் வாகனங்கள் செல்ல முடியாத சூழ்நிலை நிலவி வருகிறது.

News July 29, 2024

பணியாளர்களுக்கு நலவாரிய அட்டை வழங்கிய கலெக்டர்

image

நீலகிரி மாவட்டத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை அன்று பொது மக்களிடம் குறை கேட்கும் நிகழ்வு நடைபெறுவது வழக்கமான ஒன்றாகும். அந்தவகையில் இன்று மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். பின்னர், கிருஸ்துவ தேவாலயங்களில் பணியாற்றும் 21 பணியாளர்களுக்கு நலவாரிய அட்டைகளை வழங்கினார். அப்போது துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

News July 29, 2024

முன்னாள் எம்.பி மறைவு: பொன். ராதாகிருஷ்ணன் நேரில் ஆறுதல்

image

மறைந்த நீலகிரி மக்களவை தொகுதி முன்னாள் பாஜக உறுப்பினர் மாஸ்டர் மதன் குடும்பத்தினரை இன்று (29.07.24) பாஜக முன்னாள் அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் அவரது திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதையடுத்து மாஸ்டர் மதனின் மனைவி மற்றும் மகன்களிடம் கலந்துரையாடினர்.

News July 29, 2024

சவுக்கு சங்கருக்கு 24 மணி நேர போலீஸ் காவல்

image

நீலகிரி மாவட்டம் ஊட்டி புதுமந்து இன்ஸ்பெக்டர் அல்லிராணி கொடுத்த புகாரின் பேரில் ஊட்டி கோர்ட்டில் பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் இன்று ஆஜர் படுத்தப்பட்டார். அவரை 5 நாள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கேட்ட நிலையில், நீதிபதி தமிழினியன் 24 மணி நேரம் மட்டும் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்தார். மேலும், 4 மணி நேரத்திற்கு ஒரு முறை அவரது வக்கீலை சந்திக்கவும் அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.

News July 29, 2024

முன்னாள் எம்.பி. மறைவு: பாஜக நிர்வாகி நேரில் ஆறுதல்

image

பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினரும், ஹட்கோ (HUDDCO) இயக்குனருமான சபிதா போஜன், மறைந்த நீலகிரி முன்னாள் மக்களவை தொகுதி உறுப்பினர் மாஸ்டர் மதன் இல்லத்திற்கு இன்று (29.7.24) நேரில் சென்று அவரது திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவரது மனைவி மற்றும் மகன்களிடம் துக்கம் விசாரித்து ஆறுதல் கூறினார்.

error: Content is protected !!