Thenilgiris

News January 10, 2026

நீலகிரி: B.E, B.tech போதும்.. ரூ.65,500 சம்பளத்தில் வேலை

image

நீலகிரி மக்களே, தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வு வாரியத்தில் காலியாக உள்ள உதவி மேலாளர், கணக்கு அலுவலர் போன்ற காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு B.E/B.tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ₹20,600 – ₹65,500 வரை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் ஜன.20ம் தேதிக்குள் இங்கே கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். (SHARE பண்ணுங்க)

News January 10, 2026

நீலகிரி: பெண் குழந்தை இருக்கா? APPLY NOW

image

பெண் குழந்தைகளுக்கு முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000-ம், அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு<> இங்கே கிளிக் <<>>(அ) மாவட்ட சமூக நல அலுவலத்தை அணுகவும். (SHARE)

News January 10, 2026

BREAKING: ஊட்டி பேருந்து விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

image

ஊட்டியில் இருந்து தங்காடு கிராமத்திற்கு கடந்த 7-ம் தேதி 36 பயணிகளுடன் சென்ற மினிபேருந்து மணவாடா பகுதியில் கட்டுப்பாட்டு இழந்த விபத்திற்கு உள்ளாது. இதில், பேருந்தில் பயணித்தவர்களுக்கு காயம் ஏற்பட்டது. இதில் பலத்த காயம் அடைந்த பவளம் என்ற பெண்மணி கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தவர் உயிரிழந்தார்.

News January 10, 2026

நீலகிரியில் 2 நாள்கள் மதுக்கடை மூடல்! அதிரடி உத்தரவு

image

நீலகிரியில் ஹெத்தையம்மன் திருவிழா நடந்து வருகிறது. இவ்விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்க உள்ளனர். இந்நிலையில் கட்டபெட்டு ஒன்னதலை இடையே, பங்களோரை சின்னிஸ் கட்டடம் அருகே சாலை ஓரத்தில் டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. தற்போது, இத்திருவிழாவில் திரளானோர் பங்கேற்கவுள்ளதால் இன்று (ஜன.10), நாளை (ஜன.11) மதுக்கடை மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

News January 10, 2026

நீலகிரி: இரவு ரோந்து போலீஸ் விவரம்

image

நீலகிரி மாவட்டத்தில் இன்று இரவு முதல் நாளை காலை வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் வழங்கப்பட்டுள்ளது. உதகை நகரம், ஊரக உட்கோட்டம், குன்னூர் உட்கோட்டம், கூடலூர் மற்றும் தேவாலா உட்கோட்டம் ஆகிய காவல் நிலைய அதிகாரிகளின் தொடர்பு எண்கள், நீலகிரி மாவட்ட காவல்துறையால் வெளியிடப்பட்டுள்ளது.

News January 9, 2026

நீலகிரி: இழந்த பணத்தை திரும்ப பெற வேண்டுமா?

image

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பத 2. Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!

News January 9, 2026

நீலகிரி வாக்காளர்களே உடனே செக் பண்ணுங்க!

image

நீலகிரி மக்களே, உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதசா மாத்த இதை பண்ணுங்க..
1. <>’இங்கு க்ளிக்’ <<>>செய்து உங்க மொபைல் எண் பதிவு பண்ணுங்க. OTP வரும்
2. உங்க VOTER ID (EPIC) எண் மற்றும் மாநிலத்தை பதிவிடுங்க
உங்க போனுக்கே VOTER ID வந்துடும். இனிமே நீங்க VOTE போட கார்டு கைல கொண்டு போக வேண்டிய அவசியமில்லை. மற்றவர்களுக்கு தெரிய SHARE பண்ணுங்க.

News January 9, 2026

நீலகிரி: பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் இனி What’s App-ல்

image

நீலகிரி மக்களே பிறப்பு/இறப்பு சான்றிதழ், வருமான சான்று, பட்டா, சொத்துவரி, வேளான் திட்டங்கள்,மாணவர்களுக்கு உதவித்தொகை மற்றும் மின்சாரக் கட்டணம் செலுத்துதல் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட அரசு சேவைகளை இனி வாட்ஸ்அப் மூலமாகவே பொதுமக்கள் எளிதாகப் பெறலாம். இதற்காகத் தமிழக அரசு 7845252525 என்ற பிரத்யேக வாட்ஸ்அப் எண்ணிற்கு ‘Hi’ என மெசேஜ் அனுப்பினால் போதும். (ஷேர் பண்ணுங்க).

News January 9, 2026

அச்சத்தில் கோத்தகிரி மக்கள்!

image

கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் மலைப்பாதை வனப்பகுதிகள் நிறைந்த சாலையாகும். தற்போது சமவெளி பகுதிகளில் வறட்சி நிலவுவதால் காட்டு யானைகள் உணவு தேடி நீலகிரிக்கு வரத் தொடங்கியுள்ளன. இந்நிலையில் கடந்த சில நாட்களாக கோத்தகிரி மலைப்பாதையில் ஒற்றை காட்டு ஆண் யானை உலா வந்த வண்ணம் உள்ளது. இதனால், அப்பகுதியில் உள்ள மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

News January 9, 2026

நீலகிரி: இழந்த பணத்தை திரும்ப பெற வேண்டுமா?

image

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!

error: Content is protected !!