Thenilgiris

News January 11, 2026

நீலகிரி: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

image

1.முதலில் http://cmcell.tn.gov.in என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்.
2.பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்பதை க்ளிக் செய்து, உங்களுக்கான ID-ஐ உருவாக்க வேண்டும்.
3. இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4. பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க

News January 11, 2026

நீலகிரி: 12th, டிப்ளமோ போதும்.. ரயில்வேயில் வேலை

image

இந்தியன் ரயில்வேயில் உள்ள 312 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்கு 12th, டிப்ளமோ, டிகிரி முடித்த 18-35 வயது உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.44,000 வரை வழங்கப்படுகிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க <>இங்கு கிளிக்<<>> செய்யவும். விண்ணப்பிக்க ஜன.29-ம் தேதி கடைசி ஆகும். (வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க)

News January 11, 2026

நீலகிரி மாவட்டத்திற்கு மழை எச்சரிக்கை

image

தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் இன்று பல்வேறு மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக IMD கணித்துள்ளது. அதன்படி, நீலகிரி மாவட்டத்தில் இன்று(ஜன.11) காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. (நீலகிரி மக்களே உங்க ஏரியால் மழை பெய்தால் கமெண்ட் பண்ணுங்க)

News January 11, 2026

உதகை அருகே காட்டெருமை தாக்கி பெண் பலி

image

உதகை அருகே கொதுமுடி கிராமத்தில் காட்டெருமை தாக்கி மலர்க்கொடி (45) என்பவர் உயிரிழந்தார். வேலைக்கு செல்லும்போது தேயிலை தோட்டத்தில் இருந்த காட்டெருமை தாக்கியதில் மலர்கொடி சம்பவ இடத்திலேயே பலியாகினார். தொடர்ந்து இப்பகுதியில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால், இதுகுறித்து வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.

News January 11, 2026

நீலகிரி: இரவு ரோந்து போலீசார் விபரம்

image

நீலகிரி மாவட்டத்தில் இன்று (10.01.2026) இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள் மற்றும் அவர்களின் தொடர்பு எண்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. இதில் உதகை நகரம், ஊரகம், குன்னூர், கூடலூர் மற்றும் தேவாலா உட்கோட்ட காவல் நிலைய அதிகாரிகள் குறித்த விவரங்கள் இடம் பெற்றுள்ளன.

News January 10, 2026

நீலகிரி: ரூ.5000 + ரூ.6000 நிதியுதவி! APPLY NOW

image

நீலகிரி மக்களே, பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா திட்டம் மூலம் கர்ப்பிணிகளுக்கு ரூ.11,000 (5000+6000) வழங்குகிறது. இதன்படி கருவுற்ற பெண்கள், பாலூட்டும் தாய்மார்களுக்கு 3 தவணைகளில் ரூ.5,000 வழங்கப்படுகிறது.பின்னர் இரண்டாவது குழந்தை பெண் குழந்தையாக இருந்தால் மட்டும், அதற்கு ரூ.6000 வழங்கப்பட்டு வருகிறது. விண்ணபிக்க உங்கள் அருகே உள்ள சுகாதார மையத்திலோ அல்லது <>இங்கே கிளிக்<<>> செய்து விண்ணபிக்கலாம். இதனை ஷேர் பண்ணுங்க!

News January 10, 2026

நீலகிரி: ஆதார் அட்டையில் திருத்தம் இனி ஈஸி!

image

நீலகிரி மக்களே, “ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி எந்த ஒரு என்ரோல்மெண்ட் மையத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. நேற்று (நவ.1) முதல் எந்த அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே <>இங்கே கிளிக்<<>> செய்து மாற்றம் செய்து கொள்ளலாம். மேலும் ஆதார்-பான் இணைப்பு, KYC செயல்முறையும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. (SHARE பண்ணுங்க)

News January 10, 2026

நீலகிரி: ரேஷன் ஊழியர்கள் மீது புகார் செய்வது எப்படி?

image

ரேஷன் கடைகளில் பொருட்களை சரியாக வழங்காமல் இருப்பது, தேவையான பொருட்களுக்கு பதிலாக மற்ற பொருட்களை கட்டாயப்படுத்தி வாங்க சொல்வது போன்ற செயல்களில் ரேஷன் கடை ஊழியர்கள் ஈடுபட்டால் 1800 425 5901 என்ற TOLL FREE எண் (அ) நீலகிரி மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவகத்தில் புகார் செய்யலாம். உங்க நண்பர்களுக்கும் ஷேர் பண்ணி அவங்களுக்கும் தெரியப்படுத்துங்க

News January 10, 2026

நீலகிரியில் சுற்றுலாப் பேருந்துக்கு அபராதம்

image

நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்கள், பிளாஸ்டிக் பைகள் போன்ற பிளாஸ்டிக் பொருள்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஊட்டிக்கு, ஆந்திராவில் இருந்து சுற்றுலா வந்த பேருந்தில் நேற்று நகராட்சி அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது, பேருந்தில் 819 லிட்டர் குடிநீர் பாட்டில்கள் பேருந்தில் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதனையடுத்து பேருந்துக்கு ரூ.40,000 அபராதம் விதித்தனர்.

News January 10, 2026

நீலகிரி: மின்தடையா? உடனே CALL

image

நீலகிரி மக்களே, மழை நேரத்தில் மின்தடை தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டால் லைன்மேனைத் தேடி அலைய வேண்டாம். உடனே TNEB Customer Care எண்ணான 94987-94987-ஐ தொடர்புகொண்டு, மின் இணைப்பு எண் மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், லைன்மேன் வந்து சரிசெய்வார். மேலும், வாட்ஸ்அப் எண் ஆனா 94458-50811 என்ற எண்ணில் புகார் செய்யலாம். (SHARE)

error: Content is protected !!