Thenilgiris

News December 24, 2024

ஊட்டியில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

image

நெல்லை நீதிமன்ற வளாகத்தில் வாலிபர் படுகொலை செய்யப்பட்டது பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து டிஜிபி உத்தரவின் பெயரில் ஊட்டி ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் எஸ்ஐ தலைமையில் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதேபோல் மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்றம், குன்னூர், கோத்தகிரி, கூடலூர், பந்தலூர் போன்ற பகுதிகளில் உள்ள நீதிமன்றங்களிலும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

News December 24, 2024

நீலகிரி: பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை

image

நீலகிரி வனத்துறையில் பணியாற்றும் வனச்சரகர் ஒருவர் தனக்கு கீழ் பணியாற்றும் பெண் ஊழியர் ஒருவரிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியதாக குற்றச்சாட்டு எழுந்தது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு விவகாரம் வெளியான நிலையில் இத்தொடர்பாக வனத்துறை அதிகாரிகள் மற்றும் அரசு சாரா அமைப்பின் உறுப்பினர்கள் அடங்கிய தனிக்குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணை முடிந்த பின்பு நடவடிக்கை எடுக்கப்படும் என தகவல்.

News December 24, 2024

கோத்தகிரியில் இன்று எம்ஜிஆர் நினைவு நாள் நிகழ்ச்சி

image

தமிழக முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 37ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு மாவட்ட கழக சார்பாக கோத்தகிரி டானிங்டன் பகுதியில் இன்று காலை 10.30 மணியளவில் எம்ஜிஆரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தப்படுகிறது. இந்த தகவலை நீலகிரி மாவட்ட அதிமுக செயலாளர் கப்பச்சி வினோத் தெரிவித்துள்ளார்.

News December 24, 2024

நீலகிரியில் பஸ்ஸும் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து

image

நீலகிரி மாவட்டம் தேவர் சோலை சுல்தான் பத்தேரி தேசிய நெடுஞ்சாலையில் இன்றைய தினம் காலை எட்டாவது மைல் பகுதியில் அரசு பேருந்தும் எதிரே வந்த லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த வித பாதிப்பும் இல்லை. இந்த விபத்து குறித்து தேவர் சோலை காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News December 23, 2024

நீலகிரி காவல் அதிகாரிகளின் இரவு ரோந்து பணி விவரம்

image

நீலகிரி மாவட்டத்தில் இன்று (23.12.2024) இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் உதகை நகரம் ஊரக உட்கோட்டம், குன்னூர் உட்கோட்டம், கூடலூர் மற்றும் தேவாலா உட்கோட்டம் ஆகிய காவல் நிலைய அதிகாரிகளின் தொடர்பு எண்கள் நீலகிரி மாவட்ட காவல்துறையால் வெளியிடப்பட்டுள்ளது.

News December 23, 2024

நீலகிரி தலைப்புச் செய்திகள்

image

1.தெங்குமரஹாடா யானை தாக்கி பெண் பலி
2.உபதலை ஊராட்சி மன்றத்தில் உள்ளிருப்பு போராட்டம்
3.விவசாய தோட்டத்துக்குள் புகுந்த காட்டு யானை
4.கூடலூர்: சேவல் சண்டையில் ஈடுபட்ட 8 பேர் கைது
5.திருவள்ளுவர் புகைப்பட கண்காட்சி ஆட்சியர் பங்கேற்பு

News December 23, 2024

திருவள்ளுவர் புகைப்பட கண்காட்சி ஆட்சியர் பங்கேற்பு

image

கன்னியாகுமரி அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையின் வெள்ளி விழா ஆண்டு முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இன்று நீலகிரி மாவட்ட மைய நூலகத்தில் நடைபெற்ற புகைப்பட கண்காட்சியினை நீலகிரி மாவட்ட ஆட்சியர் திறந்து வைத்து குத்து விளக்கு ஏற்றி , வைக்கப்பட்டிருந்த கண்காட்சி பார்வையிட்டார். மாவட்ட நூலக அலுவலர் வசந்த மல்லிகா, நூலகர் ரவி , வாசகர் வட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

News December 23, 2024

இலங்கை முன்னாள் அதிபர் ரனில் நீலகிரி வருகை

image

இலங்கை முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கே நான்கு நாட்கள் சுற்றுப்பயணமாக நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு வருகை தந்துள்ளார். இலங்கையில் இருந்து விமான மூலம் கோவை வந்து அங்கிருந்து கார் மூலம் சாலை மறியமாக கோத்தகிரி வழியாக நேற்று மாலை5:30 மணியளவில் ஊட்டி பிங்கர் போஸ்ட் பகுதியில் உள்ள தனியார் பங்களாவிற்கு வந்தார். இலங்கையின் முன்னாள் அதிபர் என்பதால் சுற்றுவட்டார பகுதிகள் காவல்துறை பாதுகாப்பில் வந்துள்ளது.

News December 23, 2024

தமிழ் புதல்வன் திட்டத்தில் ரூ.15.56 லட்சம் உதவித்தொகை 

image

நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு விடுத்துள்ளசெய்திக்குறிப்பில், உயர் கல்வியில் சேரும் மாணவர்களுக்கு தமிழ் புதல்வன் திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1000 உதவித்தொகை  வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் 15 கல்லூரிகளைச் சேர்ந்த 1,556 மாணவர்களுக்கு மாதம் ரூ.1,000 வீதம் ரூ.15.56 லட்சம் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்துள்ளார். 

News December 23, 2024

ஊட்டிக்கு மாற்று பாதை ஜனவரியில் தொடக்கம்

image

சுற்றுலா பயணிகள் ஊட்டி வருவதற்கு ஏதுவாக கெத்தை-மஞ்சூர் வழியாக 3ஆவது மாற்று பாதை உருவாக்கப்பட்டது. எனினும் காப்பு காடு வழியாக இரவில் செல்ல அனுமதி இல்லை. இதனால் காட்டேரி வந்தபின் கேத்தி, பாலாடா, காந்தி நகர், லவ்டேல் வழியாக ஊட்டி செல்ல 4ஆவது மாற்று பாதை அமைக்கப்பட்டது. இது ரூ.81 கோடி செலவில் போடப்பட்டு வருகிறது.

error: Content is protected !!