Thenilgiris

News July 31, 2024

நிலச்சரிவில் மரணம்: அமைச்சர் நேரில் நிதியுதவி 

image

கேரள மாநிலம் வயநாடு நிலச்சரிவில் சிக்கி நீலகிரி மாவட்டம் கூடலூர் வட்டம் மரப்பாலம் பகுதியை சேர்ந்த காளிதாஸ் என்பவர் நேற்று உயிரிழந்தார். அவரது குடும்பத்தினரை சுற்றுலாத் துறை அமைச்சர் ராமச்சந்திரன் இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.3 லட்சத்திற்கான காசோலையை வழங்கினர். அப்போது நீலகிரி கலெக்டர், திமுக மாவட்ட செயலாளர் முபாரக் உடனிருந்தனர்.

News July 31, 2024

நிலச்சரிவு மரணம்: அமைச்சர் நேரில் நிதியுதவி

image

கேரள மாநிலம் வயநாடு நிலச்சரிவில் சிக்கி நீலகிரி மாவட்டம் பந்தலூர் வட்டம் அம்பேத்கர் நகரை சேர்ந்த கல்யாணகுமார் என்பவர் உயிரிழந்தார். இவரது குடும்பத்தினரை சுற்றுலாத் துறை அமைச்சர் ராமசந்திரன் இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.3 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார். அப்போது நீலகிரி ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு உடனிருந்தார்.

News July 31, 2024

நிலச்சரிவில் மாயமான நீலகிரி மாணவி

image

கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் 160-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதில் நீலகிரி மாவட்டம் பந்தலூரை சேர்ந்த சாமிதாஸ் என்பவரின் 9 வயது மகள் மாயமாகியுள்ளார். இந்த சிறுமி அங்குள்ள தனது பாட்டி வீட்டில் தங்கி பள்ளியில் படித்து வந்த நிலையில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வயநாடு விரைந்துள்ள சாமிதாஸ் தனது மகளுக்காக கண்ணீருடன் காத்திருக்கிறார்.

News July 31, 2024

நீலகிரிக்கு உதவியை கோரியுள்ளது தமிழக அரசு

image

நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ள நிலையில் தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும், இந்த மாவட்டங்களில் மழையால் பாதிப்புக்குள்ளாகும் பகுதிகள் ஏற்கனவே கண்டறியப்பட்டுள்ளன. இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்புக்குழுவின் உதவியை தமிழக அரசு கோரியுள்ளது.

News July 31, 2024

வயநாடு நிலச்சரிவு: முதலமைச்சர் நிதியுதவி அறிவிப்பு

image

கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில்  சிக்கி நீலகிரி மாவட்டம் பந்தலூர் வட்டம் அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்த கல்யாணகுமார் (52) மற்றும் கூடலூர் வட்டம் மரப்பாலம் பகுதியை சேர்ந்த காளிதாஸ் (34) ஆகியோர் நேற்று உயிரிழந்தனர். இந்நிலையில் இவர்களது  குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கி  தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

News July 31, 2024

நிலச்சரிவில் மாயமான நீலகிரி மாணவி

image

கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் 160-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதில் நீலகிரி மாவட்டம் பந்தலூரை சேர்ந்த சாமிதாஸ் என்பவரின் 9 வயது மகள் மாயமாகியுள்ளார். இந்த சிறுமி அங்குள்ள தனது பாட்டி வீட்டில் தங்கி பள்ளியில் படித்து வந்த நிலையில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வயநாடு விரைந்துள்ள சாமிதாஸ் தனது மகளுக்காக கண்ணீருடன் காத்திருக்கிறார்.

News July 31, 2024

வயநாடு நிலச்சரிவு: பள்ளி குழந்தைகள் செய்த உதவி 

image

கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் இதுவரை 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், நிலச்சரிவில் பாதிக்கப்பட்டோருக்கு, குன்னூர் ஸ்டேன்ஸ் பள்ளி மாணவர்கள் ரோகன், அபிநயா ஆகியோர் தங்கள் உண்டியலில் சேமித்து வைத்த ரூ.10,500 பணம் மற்றும் ஆடைகளை சமூக ஆர்வலர்களிடம் வழங்கினர். சமூக ஆர்வலர்களிடம் மூலம் சேகரிக்கப்படும் பொருட்கள் அனைத்தும் இன்று வயநாட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

News July 31, 2024

நீலகிரி: அமைச்சர் குறித்து சவுக்கு சங்கரிடம் விசாரணை

image

யூடியூபர் சவுக்கு சங்கரிடம் 24 மணி நேர விசாரணை நடத்த காவல் துறைக்கு ஊட்டி நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதை தொடர்ந்து, சவுக்கு சங்கரிடம், தமிழக அமைச்சர் ஒருவருக்கும், அவருக்கும் உள்ள தொடர்பு குறித்து விடிய விடிய போலீசார் விசாரித்ததாக அவரது வழக்கறிஞர் பாலநந்த குமார் தெரிவித்தார். மேலும், அவரது ஜாமீன் மனு மீதான விசாரணை நாளை (ஆக 1) நடைபெறும் என்றும் கூறினார்.

News July 31, 2024

உதகை அருகே கார் விபத்து: வியாபாரி பலி

image

ஈரோடு சித்தோடு பகுதியைச் சேர்ந்தவர் பூபதி (45), வியாபாரி. இவர் தன்னுடைய காரில் 7 நண்பர்களுடன் நேற்று உதகைக்கு வந்தார்; தொடர்ந்து  கூடலூர் சென்றார். அப்போது காமராஜர் அணை பகுதியில் உள்ள பாலத்தின் மீது சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தின் சுவரின் மீது மோதியது. அதில் பூபதி அதே இடத்தில் உயிரிழந்தார். மற்ற 7 பேர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து உதகை போலீசார் விசாரிக்கின்றனர்.

News July 31, 2024

வயநாடு சென்ற 10 மருத்துவர்கள் கொண்ட குழு

image

வயநாடு நிலச்சரிவு நிவாரணப் பணிகளுக்காக நீலகிரியில் இருந்து 10 மருத்துவர்கள் கொண்ட குழு வயநாட்டிற்கு சென்றுள்ளது என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தேவைகளைக் கண்டறிந்து மனிதாபிமான முறையில் தமிழ்நாடு முதலமைச்சரின் வழிகாட்டுதலோடு மக்கள் நல்வாழ்வுத் துறை செயல்படும் என்றும் கூறியுள்ளார்.

error: Content is protected !!