Thenilgiris

News August 10, 2024

நீலகிரி: காட்டு யானை பலி – ஒருவர் கைது!

image

நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகே ஸ்ரீமதுரை வடவயல் பகுதியில் உள்ள வாழை தோட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த மின் வேலியில் சிக்கிய காட்டு யானை, மின்சாரம் தாக்கி உயிரிழந்தது. இதுதொடர்பாக வனத்துறையினர் வழக்கு பதிந்து, தலைமறைவான தோட்டக்காரரை தேடிவந்தனர். இந்நிலையில் நேற்று தோட்டக்காரர் பாலகிருஷ்ணன் கைது செய்யப்பட்டார்.

News August 10, 2024

கேரள முதலமைச்சரை சந்தித்த நீலகிரி வணிகர் சங்க தலைவர்

image

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவர் விக்கிரமராஜா நேற்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அவர்களை நேரில் சந்தித்தார். பின்னர், வயநாட்டில் ஏற்பட்ட பேரிடரில் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்து தவிக்கும் மக்களுக்கு, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் 100 வீடுகள் கட்டித் தருவதாக உத்தரவாதம் அளிக்கப்பட்டது. அப்போது நீலகிரி மாவட்ட வணிகர் சங்க தலைவர் முகமது பாரூக் உடன் இருந்தார்.

News August 9, 2024

உதகையில் சர்வதேச பழங்குடி தின கொண்டாட்டம்

image

கூடலூர், தேவர்சோலை , மச்சி கொல்லி பகுதியில் பேபி நகர் பழங்குடி கிராமத்தில் சர்வதேச பழங்குடி தினம் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது . தமிழ்நாடு பழங்குடி சங்க புதிய கிளை துவக்கப்பட்டது . பழங்குடி பெண் கர்க்கி   வில் , அம்பு கொடி ஏற்றினார் . அனைவரும் உறுதி மொழி ஏற்றனர்.  நிகழ்வில் நீலகிரி  மாவட்ட AITUC செயலாளர் முகமது கனி , வழக்கறிஞர் செவ்விளம்பரிதி , மகேந்திரன் மற்றும் பழங்குடியினர் பங்கேற்றனர் .

News August 9, 2024

உதகையில் தமிழ் புதல்வன் திட்டத்தின் கீழ் பற்று அட்டைகள்

image

நீலகிரி மாவட்டம், உதகை அரசு கலைக்கல்லூரியில் சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் இன்று கல்லூரி மாணவர்களுக்கு “தமிழ் புதல்வன்” திட்டத்தின்கீழ் கையேடுகள் மற்றும் வங்கி பற்று அட்டைகளை
வழங்கினார். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) கௌசிக் உட்பட அரசு அலுவலர்கள், கல்லூரி முதன்மை ஆசிரியர் மற்றும் ஆசிரியர் கலந்து கொண்டனர்.

News August 9, 2024

குன்னூர் நாய்களை வேட்டையாடிய சிறுத்தை

image

நீலகிரி மாவட்டம், குன்னூர் வண்ணாரப்பேட்டை பகுதியில் ஒரு வீட்டில் புகுந்த சிறுத்தை அங்கிருந்த ஒரு நாய் மற்றும் அதன் ஐந்து குட்டிகளை வேட்டையாடி சென்றதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.அதை தொடர்ந்து குன்னூர் நகரம் முழுவதும் உள்ள குடியிருப்புகள் வரும் சிறுத்தைகளை கண்காணிக்க வனத்துறைக்கு பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

News August 9, 2024

நீலகிரியில் மேலும் 2 யானைகள் உயிரிழப்பு

image

நீலகிரி மாவட்டம் தொரப்பள்ளி தேன்வயல், தேவர்சோலை வடவயல் பகுதிகளில் கடந்த 2 மாதங்களில் 3 யானைகள் பலியான நிலையில், வனத்துறை ரோந்து பணியின் போது, மசினகுடியில் மரம் விழுந்ததில் ஒரு யானையும், சீகூரில் அழுகிய நிலையில் குட்டியும் இறந்ததை கண்டனர். உடனே, துணை இயக்குநர் அருண் தலைமையில் பிரேத பரிசோதனை நடந்தது.

News August 9, 2024

நீலகிரிக்கு வந்த அமைச்சர்

image

நீலகிரி மாவட்டத்திற்கு இன்றைய தினம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணி பல்வேறு அரசு விழாவில் கலந்து கொள்வதற்காக வருகைபுரிந்தார் . முன்னதாக உதகை தமிழகம் விருந்தினர் மாளிகையில் நீலகிரி மாவட்டம் திமுக கட்சியின் மாவட்ட செயலாளர் முபாரக் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் ஏராளமானோர் அமைச்சரை வரவேற்றனர்.

News August 9, 2024

உதகை மலை ரயில் 7 நாள்களுக்கு ரத்து

image

நீலகிரி மாவட்டம் உதகை முதல் மேட்டுப்பாளையம் வரை மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கல்லாறு முதல் ஹில்குரோவ் வரை பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் உதகை-மேட்டுப்பாளையம் ரயில் இன்று (ஆகஸ்ட் 9) முதல் ஏழு நாள்களுக்கு ரத்து செய்யப்படுவதாக சேலம் கோட்டம் ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க!

News August 8, 2024

நீலகிரி: 2 மாதத்தில் 3 யானைகள் பலி

image

கூடலூர்: தொரப்பள்ளி தேன்வயல் பகுதியில் கடந்த ஜூலை 7ஆம் தேதி யானை ஒன்று சேற்றில் சிக்கி உயிரிழந்தது. பின்னர், 30ஆம் தேதி மச்சிகொல்லி பகுதியில் மரம் சரிந்து மின் கம்பியில் சிக்கி இன்னொரு யானை இறந்தது. தற்போது ஸ்ரீமதுரை வடவயல் பகுதியில் மின் கம்பியால், மற்றொரு யானை பலியானது. இப்படி கடந்த 2 மாதத்தில் 3 யானைகள் பலியான சம்பவம் விலங்கு ஆர்வலர்களை வருத்தமடைய செய்துள்ளது.

News August 8, 2024

நீலகிரி காங்கிரஸ் சார்பில் நிவாரண பொருட்கள்

image

கேரள மாநிலம் வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீலகிரி காங்கிரஸ் கமிட்டி சார்பாக ரூ.10 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருள்களை ஆர். கணேஷ் எம்.எல்.ஏ இன்று வாகனத்தில் அனுப்பி வைத்தார். இதில், இளைஞர் காங்கிரஸ் தலைவர் ராஜேஷ், சமூக ஊடக பிரிவு தலைவர் மானேஷ் சந்திரன், சேவாதள் தலைவர் மொராஜி, ரகு சுப்பன், செயலாளர்கள் உதகை ரவிக்குமார், ரவிக்குமார், எஸ்.எம்.ரபீக் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

error: Content is protected !!