Thenilgiris

News January 15, 2026

நீலகிரியில் குடும்பத்துடன் சென்ற வாகனம் விபத்து!

image

நீலகிரி மாவட்டம் குன்னூர் மேட்டுப்பாளையம் சாலை குறும்படி அருகே பொலிரோ வேன் விபத்துக்குள்ளானது. இதில் தந்தை, தாய் மற்றும் 2 குழந்தைகள் சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். தகவலறிந்த குன்னூர் போலீசார் மற்றும் ஹைவே ரோந்து படையினர் விரைந்தனர். மேலும், இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.

News January 15, 2026

நீலகிரி மக்களே உடனே SAVE பண்ணுங்க!

image

உங்களை வேலையை விட்டு நீக்கினாலோ அல்லது சரியான சம்பளம் வழங்காவிட்டாலோ தொழிலாளர் நலவாரியத்தில் புகாரளிக்கலாம். கூடுதல் தொழிலாளர் ஆணையர் – 044-24339934, தொழிலாளர் இணை ஆணையர் – 044-24335107, தொழிலாளர் துணை ஆணையர் – 044-25340601, தொழிலாளர் துறை உதவி ஆணையர் (பெண்கள் நலம்) – 9445398775, தொழிலாளர் உதவி ஆணையர் – 04425342002 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளுங்கள். ஷேர் பண்ணுங்க!

News January 15, 2026

நீலகிரியில் கேஸ் புக் பண்ண புது வழி!

image

நீலகிரி மக்களே, நீங்கள் புக் செய்த சிலிண்டர் வர தாமதமாகுதா? இனி டென்ஷன் வேண்டாம். Indane: 7588888824, Bharat Gas: 1800224344, HP Gas: 9222201122 இந்த எண்களை போனில் சேமித்து வாட்ஸ்அப்பில் ‘HI’ என ஒரே ஒரு மெசேஜ் அனுப்புங்க. REFILL GAS BOOKING OPTION -ஐ தேர்ந்தெடுங்க. அவ்வளவுதான் உங்க வீட்டுக்கே கேஸ் வந்துடும். இந்த தகவலை மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க.

News January 15, 2026

நீலகிரியில் நாளை செயல்படாது!

image

நீலகிரி கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரூ செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில் வரும் திருவள்ளுவர் தினம் (ஜன.16), குடியரசு தினம் (ஜன.26) ஆகிய 2 நாட்களிலும் மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து மதுபானக் கடைகள் (ம) பார்கள் மூடப்பட வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். மேலும், விதியை மீறி செயல்படுபவர்கள் குறித்து 0423-2222802, 0423-2443693, 0423-2234211 என்ற எண்ணிற்கு புகார் அளிக்கலாம். (SHARE)

News January 15, 2026

நீலகிரி மக்களே முக்கிய அறிவிப்பு

image

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மலை ரயிலில் குறைந்த தூரம் பயணிப்பவர்களுக்கு ஊட்டியில் இருந்து கேத்தி வரை 16 ,17, 18, 24, 25, 26 ஆகிய நாட்களில் சிறப்பு மலை ரயில் இயக்கப்படும். இதில், 80 முதல் வகுப்பு மற்றும் 130 இரண்டாம் வகுப்பு இருக்கைகள் இருக்கும். காலை 9.45, 11.30 மற்றும் 3 மணிக்கு ஊட்டியில் இருந்து ரயில் புறப்பட்டு கேத்தி சென்றடையும் என ரெயில்வே நிர்வாகம் தகவல் தெரிவிப்பு.

News January 15, 2026

நீலகிரி: 10th போதும் போஸ்ட் ஆபீஸில் வேலை! NO EXAM

image

நீலகிரி மக்களே, இந்திய அஞ்சல் துறையில் போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர், தபால் சேவகர் உள்ளிட்ட 30,000 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தேர்வு இல்லை. 10ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். உள்ளூர் மொழி மற்றும் சைக்கிள் ஓட்டத் தெரிந்திருப்பது கட்டாயமாகும். விருப்பமுள்ளவர்கள் இங்கு <>கிளிக் <<>>செய்து, விண்ணப்பிக்கலாம். SHARE பண்ணுங்க!

News January 15, 2026

நீலகிரி: கேஸ் மானியம் ரூ.300 பெறுவது எப்படி?

image

கேஸ் மானியம் ₹300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர, எல்பிஜி இணைப்பை ஆதார் அட்டையுடன் இணைக்க வேண்டும். உங்கள் கேஸ் வழங்குநரின் (Indane, HP, Bharat) இணையதளத்திற்குச் சென்று, ‘Link Aadhaar’ விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். நுகர்வோர் எண், மொபைல் எண், ஆதார் ஆகிய விவரங்களை உள்ளிட்டு, OTP மூலம் இணைப்பை உறுதி செய்யலாம். இதன் மூலம் வீட்டில் இருந்தபடியே மானியத்தைப் பெறலாம். இதை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க.

News January 15, 2026

உதகை அருகே விபத்து

image

உதகையிலிருந்து மைசூர் நோக்கி நேற்ற பிக்கப் வேன் ஒன்று கல்லட்டி மலைப்பாதையில் விபத்தில் சிக்கியது. வாகனத்தின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாத நிலையில், ஓட்டுநர் சாலையோர தடுப்பு சுவரில் மோதி வாகனத்தை நிறுத்தினார். இவ்விபத்தில் ஓட்டுநர் குமாருக்கு லேசான காயம் ஏற்பட்டது. மேலும், இவ்விபத்து குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

News January 15, 2026

உதகையில் அதிரடி காட்டிய அதிகாரிகள்

image

உதகை படகு இல்லம் பகுதியில் சுற்றுலா பேருந்தில் தண்ணீா் பாட்டில்கள் எடுத்து வரப்பட்டுள்ளதாக நகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அங்கு நகராட்சி ஊழியா்கள் சோதனை செய்த போது, மகாராஷ்டிரா மாநிலத்தை சோ்ந்த சுற்றுலா பேருந்தில் 400-க்கும் மேற்பட்ட அரை லிட்டா் தண்ணீா் பாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அதை பறிமுதல் செய்ததுடன், ரூ.45,000 அபராதம் விதித்தனா்.

News January 15, 2026

உதகை தாவரவியல் பூங்காவில் பொங்கல் விழா

image

உதகை அரசினர் தாவரவியல் பூங்காவில் சுற்றுலாத்துறை சார்பில் நடைபெற்ற 2026-ஆம் ஆண்டு பொங்கல் விழாவினை, மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மண்டல மேலாளர் யுவராஜ், தோட்டக்கலைத்துறை இணை இயக்குநர் ஷிபிலா மேரி, மாவட்ட சுற்றுலா அலுவலர் சங்கர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

error: Content is protected !!