India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நீலகிரி மாவட்டம் உதகை எச்பிஎஃப் பகுதியில் புலியின் நடமாட்டம் தென்படுவதை அவ்வழியாக சென்ற வாகன ஓட்டுநர் ஒருவர் தனது செல்போனில் படம் எடுத்துள்ளார். எனவே அப்பகுதி மக்கள் கவனமாகவும் பாதுகாப்பாகவும் இருக்குமாறும் வாகனத்தில் செல்பவர்களும் நிறுத்தி இறங்குபவர்களும் மிகவும் பாதுகாப்பாக பயணிக்குமாறு வனத்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

நீலகிரி மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறை சார்பில், பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு 2024-2025 மாவட்ட அளவிலான கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் 2 நாட்கள் நடைபெற உள்ளன. இதில் வரும் 21ஆம் தேதி 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஊட்டி அரசு மேல்நிலைப் பள்ளியிலும், 22ஆம் தேதி கல்லூரி மாணவர்களுக்கான போட்டி ஊட்டி அரசு கல்லூரியிலும் நடைபெற உள்ளது.

குன்னூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் சமீப காலமாக கரடியின் தொல்லை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் குன்னூர் அருகே உபாசி செல்லும் வழியில் உள்ள பார்லோஸ் சாலையில் அமைந்துள்ள ரத்தன்லால் என்பவருடைய வீட்டில் ஸ்டோர் ரூம் கதவை உடைத்து உணவுப் பொருட்களை கரடி எடுத்துச் சென்றுள்ளதால் அப்பகுதிவாசிகள் அச்சத்தில் உள்ளனர். எனவே வனத்துறையினர் கூண்டு வைத்து பிடிக்க கோரிக்கை வைத்தனர்.

நீலகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 24ஆம் தேதி ஊட்டியில் உள்ள வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற உள்ளது. முகாமில் முன்னணி தனியார் நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளன. இதில் 8ம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் பட்டதாரிகள் பட்டய படிப்பு படித்தவர்கள், ஐடிஐ, கணினி இயக்குபவர்கள் ஓட்டுநர்கள் கலந்து கொள்ளலாம்.

உதகையில் கடந்த சில நாட்களாகவே பயங்கரமான குளிர் நீடித்து வருகிறது. தற்போது ஊட்டியில் -1 டிகிரி குளிர் பதிவான நிலையில் ஊட்டியே பனி மண்டலமாக காட்சி அளிக்கிறது. அதிகாலையில் உறைந்த பனி நிலமெங்கும் வெண்படலமாக படர்ந்து காணப்படுகிறது. இதனால மக்கள் வீட்டிலே முடங்கி இருக்கின்றனர்.

HMPV வைரஸ் வைரஸ் நீலகிரி மாவட்டத்தின் அண்டை மாநிலமான கர்நாடகாவில் உறுதியானது. இதையடுத்து மாவட்ட ஆட்சியர் கூறுகையில், HMPV வைரஸ் தொற்று மட்டும் இன்றி, காய்ச்சல் காலங்களிலும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் முகக்கவசம் அணிவது நல்லது. தற்போதைக்கு நீலகிரிக்கு வர சுற்றுலா பயணிகளுக்கு எவ்வித கட்டுப்பாடும் இல்லை. தொற்று அதிகரிக்கும் பட்சத்தில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்றார்.

HMPV வைரஸ் தொடர்பான உதவி எண்களை நீலகிரி மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இதற்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உதவி மைய எண் 93423 30053இல் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 104 என்ற கட்டணமில்லா எண்ணையும் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு தெரிவித்துள்ளார். மேலும் துண்டு, சோப்பு, கைக்குட்டை போன்றவற்றை மற்றவர்களுக்கு பகிர்வதை தவிர்க்க வேண்டும். SHARE IT!

HMPV தொற்று பரவல் மற்றம் பாதிப்பு எதிரொலியாக நீலகிரி மாவட்டத்தில் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என நீலகிரி கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு அறிவித்துள்ளார். நீலகிரியில் பொது இடங்கள்வரும் மக்கள், சுற்றுலாப் பயணிகள் கட்டயாம் முகக்கவசம் அணிய வேண்டும்.

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டத்தில் சாலை வசதி, வீட்டுமனை பட்டா குடிநீர் மருத்துவ உதவி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொது மக்களிடம் இருந்து சுமார் 143 மனுக்கள் குவிந்தன. பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் அரசு அலுவலர்களிடம் வலியுறுத்தி உள்ளார்.

உறைபனிப் பொழிவு காரணமாக உதகையில் கடும் குளிர் நிலவுகிறது. நவம்பரில் தொடங்கி பிப்ரவரி இறுதி வரை உறைபனி நிலவும். வெப்பநிலை மிகவும் குறைந்து, மைனஸ் டிகிரி செல்சியஸை எட்டி குளிரான காலநிலை நிலவுகிறது. அவலாஞ்சி உட்பட்ட சில பகுதிகளில், கடந்த சில நாட்களாக வெப்பநிலை மைனஸ் டிகிரி செல்சியஸுக்கும் கீழ் சரிந்திருக்கிறது. அவலாஞ்சியில் நேற்று அதிகாலை மைனஸ் ஒரு டிகிரி செல்சியஸும், உதகையில் 2.3 டிகிரி பதிவானது.
Sorry, no posts matched your criteria.