India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நீலகிரி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள தகவலில், முன்னாள் படைவீரர் நலனுக்கான முதல்வரின் காக்கும் கரங்கள் என்ற புதிய திட்டத்தின் கீழ் முன்னாள் படைவீரர்கள் தொழில் தொடங்க ரூ.1 கோடி வரை வங்கிகள் மூலம் கடன் பெறுவதற்கு வழிவகை செய்யப்படும் என்ற அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி நீலகிரியில் வாழும் ராணுவ வீரர்கள், ராணுவ வீரர்களை சார்ந்தோர் திட்டத்தின் மூலம் பயன் பெறலாம் என்று தெரிவித்துள்ளார்.

மலைவேடன் மக்களின் ஜாதி சான்றிதழ் பிரச்சனை தொடர்பாக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. ஆர்டிஓ சதீஷ்குமார் கூறுகையில், நீலகிரியில் 6 பழங்குடியினர் மட்டுமே அரசாணையில் உள்ளது. மலைவேடன் பழங்குடியினர் நீலகிரிக்கு இடபெயர்ந்து வந்ததால் அரசிதழில் இடம்பெறவில்லை. 1995முதல் சாதி சான்றிதழ் இவர்களுக்கு வழங்கப்படவில்லை. கோரிக்கையை அரசிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது, விரைவில் கமிட்டி மக்களை சந்திக்க வருகிறது.

ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர் தொட்டிகளை கொண்டு அமைக்கப்பட்டுள்ள செல்பி ஸ்பாட் சுற்றுலா பயணிகளை கவர்ந்துள்ளது. பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகள் மலர்கள் இல்லாத நிலையில், இந்த செல்பி ஸ்பாட் அருகே நின்று புகைப்படம் எடுத்துச் செல்கின்றனர். குறிப்பாக, இத்தாலியன் பூங்கா அருகே உள்ள ‘செல்பி ஸ்பாட்’ மேரி கோல்டு மலர்களைக் கொண்டு அலங்கரிக்கப்பட்டுள்ளது. இதன் அருகே நின்ற பயணிகள் செல்பி எடுக்கின்றனர்.

பிளாஸ்டிக் தொடர்பாக கடந்த விசாரணையின்போது மாவட்ட கலெக்டர் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதைப் படித்து சிறப்பு அமர்வு நீதிபதிகள் தவறான தகவலுடன் அறிக்கை தாக்கல் செய்துள்ளார் எனக்கூறி அறிக்கைக்கு கடுமையான கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் நேற்று நடந்த காணொலி மூலமாக நடந்த விசாரணையில் உண்மைகளை சரி பார்க்காமல் தவறான தகவலுடன் அறிக்கை செய்ததற்காக நீலகிரி மாவட்ட ஆட்சியர் மன்னிப்பு கோரினார்.

பிளாஸ்டிக் தொடர்பாக நேற்று வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக நடந்த விசாரணையில் ஆட்சியர் கூறுகையில், மாவட்டத்திற்குள் நுழையும் அனைத்து வாகனங்களையும் சோதனை செய்வது சாத்தியமற்றது. அவ்வாறு செய்தால் அது பெரும் போக்குவரத்து நெரிசலையும் குழப்பத்தையும் ஏற்படுத்தும். எனவே பஸ்களில் யாரேனும் பிளாஸ்டிக் வைத்திருப்பதை கண்டறிந்தால் பஸ் உரிமையாளருக்கு ரூ.10,000 அபராதம் இருக்கும் திட்டத்தை செயல்படுத்த உள்ளோம் என்றார்.

சுற்றுலா தலங்களான நீலகிரியில் பிளாஸ்டிக் தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டது குறித்த விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரதசக்ரவர்த்தி அடங்கிய சிறப்பு அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா காணொலியில் ஆஜராகி விளக்கமளித்தார். இதையடுத்து நீதிபதி நீலகிரியில் சுற்றுலாவில் இ-பாஸ் முறை தொடர வேண்டும் என உத்தரவிட்டார்.

தேயிலை, காபி, ரப்பர், வாசனை திரவியங்கள் உட்பட தோட்ட பயிர்களுக்கு, மத்திய பட்ஜெட்டில் அதிக ஒதுக்கீடு செய்துள்ளதற்கு வரவேற்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. 2025-26ம் ஆண்டிற்கான, வாசனை திரவிய வாரியத்தின் பட்ஜெட் ஒதுக்கீடு, 153.81 கோடி ரூபாய். இது முந்தைய ஆண்டு ஒதுக்கப்பட்ட, 130 கோடி ரூபாயை விட, 18 சதவீதம் அதிகமாகும். இதனால், நீலகிரி விவசாயிகள் மற்றும் வர்த்தகர்களுக்கு பயன் ஏற்பட வாய்ப்புள்ளது.

நீலகிரி ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு விடுத்துள்ள செய்தியில், ‘இந்திய அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் ஊட்டி இளைஞர் விடுதிக்கு ஒரு வருடம் உணவகம் செயல்பட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஒரு வருடத்திற்கான உணவு பட்டியல், விலை விவரம் ஆட்சியருக்கு 10.2.25-க்குள் அனுப்பி வைக்கவும் என கூறியுள்ளார்.

நீலகிரி மாவட்டத்தில் இன்று (04.02.2025) இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் உதகை நகரம் ஊரக உட்கோட்டம், குன்னூர் உட்கோட்டம், கூடலூர் மற்றும் தேவாலா உட்கோட்டம் ஆகிய காவல் நிலைய அதிகாரிகளின் தொடர்பு எண்கள் நீலகிரி மாவட்ட காவல்துறையால் வெளியிடப்பட்டுள்ளது.

ஊட்டியில் உள்ள இளைஞர் விடுதியில் ஒப்பந்த அடிப்படையில் ஒரு வருடத்திற்கு உணவகம் அமைக்க விருப்பம் உள்ளோர் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவித்துள்ளார். உணவு பட்டியலையும் அதற்கான விலைப்பட்டியலையும் பதிவு தபாலில் மாவட்ட கலெக்டர் மற்றும் தலைவர் இளைஞர் விடுதி, ஸ்டோன் ஹவுஸ் ஹில்அஞ்சல் , அரசு கலை கல்லூரி அருகில், ஊட்டி என்ற முகவரிக்கு வரும் பத்தாம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என கூறியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.