Thenilgiris

News January 24, 2026

நீலகிரி மக்களே: இனி அலைச்சல் வேண்டாம்!

image

நீலகிரி மக்களே பல்வேறு அரசுச் சேவைகளைப் பெறவதற்காக இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டாம்.
1) ஆதார் : https://uidai.gov.in/
2) வாக்காளர் அடையாள அட்டை: eci.gov.in
3) பான் கார்டு : incometax.gov.in
4) தனியார் வேலைவாய்ப்பு : tnprivatejobs.tn.gov.in
5) நீலகிரி மாவட்ட அறிவிப்புகளை அறிய: https://nilgiris.nic.in/
இதனை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News January 24, 2026

நீலகிரி: PHONE தொலைந்தால் இத பண்ணுங்க!

image

நீலகிரி மக்களே உங்கள் செல்போன் காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். <>Sanchar Saathi <<>>என்ற செயலி அல்லது இங்கே கிளிக் செய்து செல்போன் நம்பர், IMEI நம்பர், தொலைந்த நேரம், இடம் மற்றும் உங்களின் தகவல்களை பதிவிட்டு புகார் அளிக்கலாம். உடனே போன் Switch Off ஆகிவிடும். பின்பு உங்களது செல்போனை டிரேஸ் செய்து கண்டுபிடிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News January 24, 2026

நீலகிரி: இ-ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம்!

image

1) இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 2) விண்ணபிக்க<> tnuwwb.tn.gov.in<<>> என்ற இந்த இணையதளத்திற்கு செல்ல வேண்டும். 3) அதில் Subsidy for eScooter ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். 4) பின்னர் ஆதார், ரேஷன் அட்டை, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்ற வேண்டும். இ-ஸ்கூட்டர் வாங்க அருமையான வாய்ப்பு. அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News January 24, 2026

நீலகிரி மீண்டும் வந்தது.. சோதனை வெற்றி!

image

குன்னூர் மேட்டுப்பாளையம் இடையே இயங்கும் நீராவி இன்ஜின்கள் சில ஆண்டுகளுக்கு முன்பு பர்னஸ் ஆயிலிலிருந்து டீசல் இன்ஜின்களாக மாற்றப்பட்டன. இந்நிலையில் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை பராமரிப்புக்காக திருச்சி பொன்மலை பணிமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அனைத்து பழுதுகளும் நீக்கப்பட்டு புதுப்பிக்கப்பட்டன. இதனை தொடர்ந்து, நேற்று மேட்டுப்பாளையத்திலிருந்து குன்னூர் வரை ஒரு பெட்டி இணைக்கப்பட்டு சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.

News January 24, 2026

அறிவித்தார் நீலகிரி மாவட்ட ஆட்சியர்!

image

நீலகிரி கலெக்டர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், குடியரசு தினத்தை முன்னிட்டு, வரும் 26-ஆம் தேதி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெறும், பொதுமக்கள் இதில் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும், இக்கூட்டங்களை எந்தவொரு மத சார்புள்ள வளாகத்திலும் நடத்த கூடாது, கூட்டம் நடைபெறும் இடம் மற்றும் நேரத்தை மக்களுக்கு முன்கூட்டியே அறிவிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

News January 23, 2026

நீலகிரியில் நாளை விடுமுறை இல்லை!

image

நீலகிரி மாவட்டத்தில் கடந்த 7-ஆம் தேதி எத்தையம்மன் பண்டிகையை முன்னிட்டு மாவட்ட ஆட்சியரால் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. அந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில், நாளை (ஜனவரி 24) மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களும் மற்றும் கல்வி நிறுவனங்களும் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கம்போல அனைத்து அரசுப் பணிகளும், பள்ளிகளும் செயல்படும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News January 23, 2026

உங்கள் பெயர் உள்ளதா? தெரிந்து கொள்ள QR Code வெளியீடு!

image

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ‘நீலகிரி பூச்சிப்பிடிப்பான்’ (Nilgiri Flycatcher) பறவை, வாக்காளர் விழிப்புணர்வுக்கான அதிகாரப்பூர்வ சின்னமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இப்பறவை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. மேலும், வாக்காளர்கள் தங்களது பெயர் பட்டியலில் உள்ளதா என்பதை எளிதாக சரிபார்க்கும் வகையில் QR Code ஸ்கேன் வசதியும் வெளியிடப்பட்டுள்ளது.

News January 23, 2026

நீலகிரி: ஆண் குழந்தை வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

நீலகிரி மக்களே, பொன்மகன் சேமிப்பு திட்டம்’ ஆண் குழந்தைகளின் நலனுக்காக அஞ்சல் துறையால் செயல்படுத்தப்படுகிறது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் & பாதுகாவலர் மூலமாகவும், 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் தாங்களாகவே கணக்கை துவக்க முடியும். (எ.கா) மாதம் 1000 என ஆண்டுக்கு ரூ.12,000 முதலீடு செய்தால் 15 ஆண்டு முடிவில் ரூ.1,80,000 (ம) ரூ.1,35,572 வட்டியுடன் மொத்தமாக ரூ.3,14,572 கிடைக்கும். SHARE IT

News January 23, 2026

நீலகிரி மாவட்டத்திற்கு எச்சரிக்கை!

image

தமிழகத்தில் வரும் 25-ம் தேதி ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், நீலகிரி மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் இரவு, அதிகாலை நேரங்களில் உறைபனி ஏற்படவும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக ஒருசில இடங்களில் மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

News January 23, 2026

நீலகிரி: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

image

1.முதலில் <>cmcell.tn.gov.in <<>>என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள். 2) பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும். 3) இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள். 4) பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். SHARE செய்யுங்க

error: Content is protected !!