Thenilgiris

News February 8, 2025

+2 செயல்முறை தேர்வு: நீலகிரி மாணவர்கள் ஆர்வம்

image

தமிழ்நாட்டில் பிளஸ் டூ பொதுத்தேர்வுகள் மார்ச் 3ஆம் தேதி முதல் மார்ச் 25ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதையொட்டி பொது தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கான செயல்முறை தேர்வு பிப்ரவரி 7 முதல் 14 தேதிக்குள் நடத்தி முடிக்க பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தி. அதன்படி நீலகிரி மாவட்டத்தில் உள்ள 80 பள்ளிகளில் பிளஸ் டூ பயின்று வரும் 8,075 மாணவ மாணவிகள் செயல்முறை தேர்வில் கலந்து கொண்டனர்.

News February 8, 2025

நீலகிரியில் விபத்து: 2 வாலிபர்கள் மரணம்!

image

கூடலூர் பகுதியை சேர்ந்த அருள், ராஜேஷ்குமார் என்று இரண்டு இளைஞர்கள் கர்நாடக மாநிலத்திலிருந்து டேங்கர் லாரியில் பால் ஏற்றிக்கொண்டு கேரள மாநிலத்துக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது ஓசூர் பகுதியில் டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்திலேயே இருவரும் உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News February 8, 2025

நீலகிரியில் யானை தாக்கிய 2 பேருக்கு தீவிர சிகிச்சை

image

பந்தலூர் இண்கோ சர்வ் பகுதியை சேர்ந்த கணேசன் (65), காந்திமதி (60) ஆகியோர் நேற்று காலை வனத்தை ஒட்டி தோட்டத்தில் விறகு சேகரித்தனர். அப்போது புதரில் இருந்து வெளி வந்த யானை இவர்களை தாக்கி உள்ளது. தகவல் அறிந்த பந்தலூர் வருவாய் ஆய்வாளர் வாசுதேவன், வனச்சரகர் சஞ்சீவி ஆகியோர் காயமடைந்த அவர்கள் 2 பேரையும் மீட்டு ஊட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

News February 7, 2025

மான் வேட்டையாடிய 3 பேர் கைது

image

நீலகிரி: கோத்தகிரி அருகே உள்ள கூக்கல்தொரை கிராம வனப்பகுதியில் ஒரு சிலர் மானை வேட்டையாடியதாக, கட்டப்பட்டு வனச்சரக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் வனச்சரகர் செல்வகுமார் தலைமையில், வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அந்த பகுதியை சேர்ந்த 3 பேர், சுருக்கு கம்பி வைத்து மானை வேட்டையாடியது கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

News February 7, 2025

கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதி மொழி

image

நீலகிரி மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலகத்தில், “கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்பு” உறுதி மொழி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு தலைமையில், அனைத்துத்துறை அரசு அலுவலர்களால் இன்று ஏற்றுக்கொள்ளப்பட்டது. உடன் உதவி ஆணையர் (கலால்) தனப்பிரியா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சதீஷ்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்

News February 7, 2025

அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலை வேலை வாய்ப்பு!

image

நீலகிரி: அருவங்காட்டில் வெடிமருந்து தொழிற்சாலையில் 40 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 10-ம் வகுப்பு படித்திருக்க வேண்டும், NAC / NTC in Machinist Trade முடித்திருக்க வேண்டும். https://munitionsindia.in/-ல் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, ஆவணங்களுடன் The Chief General Manager, Cordite Factory Aruvankadu, The Nilgiris District. Tamilnadu 643 202 முகவரிக்கு அனுப்ப வேண்டும். கடைசி தேதி: 21.02.2025.

News February 7, 2025

நீலகிரியில் பால் தட்டுப்பாடு

image

நீலகிரி மாவட்டத்தில் பனிப்பொழிவு அதிகரித்துள்ளதால் நீலகிரி மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் புல்வெளிகள் காய்ந்து கால் நடைகளுக்கு தீவனம் கிடைக்காமல் போனதால் பால் உற்பத்தி குறைந்தது. இதனால் ஊட்டியில் பால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனை சமாளிக்க நாள்தோறும் திருப்பூரில் இருந்து 17,000 லிட்டர் பால் வாங்கி பதப்படுத்தப்படுகிறது பின் 16 ஆயிரம் லிட்டர் பால் பாக்கெட் தயார்செய்து விற்பனை செய்யப்படுகிறது.

News February 7, 2025

நீலகிரி நகரங்களுக்கு ‘மாஸ்டர் பிளான்’

image

தமிழ்நாட்டில் உள்ள சிறு நகரங்களுக்கு முழுமைத் திட்டம் என்னும் ‘மாஸ்டர் திட்டம்’ தயாரிக்கும் பணிகள் நடை பெற்று வருகிறது. இது அடுத்த 20 ஆண்டுகளில் ஏற்படும் வளர்ச்சிக்கு ஏற்ற வகையில் அடிப்படை வசதி மேம்பாட்டை திட்டமிடுவதாகும். இதன்படி ஊட்டி, கூடலூர், நெல்லியாளம், கோத்தகிரி ஆகிய நகரங்களுக்கு முழுமைத் திட்டங்கள் தயாரிக்கும் பணிகளை டி.டி.சி.பி. துவங்கி உள்ளது.

News February 7, 2025

ஒரே நாளில் 200 வாகனங்களுக்கு எப்.சி.

image

ஊட்டி-மஞ்சூர் பிரதான சாலையில் ஒரே நேரத்தில் பல வாகனங்கள் நிறுத்தப்பட்டு எப்.சி. பணி நடந்து வருவதால் வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுகின்றனர். நேற்று மட்டும் 200-க்கும் மேற்பட்ட வாகனங்கள் வந்ததால் காலையிலிருந்து மாலை வரை இப்பணி நடந்தது. ஒரு வழி பாதையில் மட்டும் வாகனங்கள் செல்ல முடிந்தது. பிரதான சாலை என்பதால் எப்.சி. சரிபார்க்கும் பணியால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

News February 7, 2025

கூடலூரில் சிறுத்தை சாவு: வனத்துறை தகவல்

image

கூடலூர் அருகே ஆணை செத்தகொல்லி அருகே தேயிலை தோட்டத்தில் சிறுத்தை நேற்று இருந்து கிடந்தது தகவல் அறிந்த வனத்துறையினர் ஆய்வு நடத்தியதில் இறந்த சிறுத்தையின் உடலில் கீறல்கள், காயங்கள் இருப்பதால் இரண்டு சிறுத்தைகள் இடையே ஏற்பட்ட மோதலில் இறந்திருக்க வாய்ப்புள்ளது. உடற்கூறாய்வு பரிசோதனை முடிவு வெளிவந்த பிறகு காரணம் தெரிய வரும் என்று தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!