India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நீலகிரி மாவட்டத்தில் புகழ்பெற்ற சுற்றுலா தலமான ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் முகப்பு பகுதியில் அமைந்திருந்த 175 ஆண்டு பழமையானஆங்கிலேயர் காலத்தை சேர்ந்த கட்டிடம் தற்போது புனரமைக்கப்பட்டு அருங்காட்சியமாக மாற்றப்பட்டுள்ளது. பல ஆண்டுகளுக்கு முன் டிக்கெட் கொடுக்கும் இடமாக அமைந்திருந்தது தற்பொழுது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நீலகிரியின் பாரம்பரியத்தை காட்டும் வகையில் கண்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது

நீலகிரி மாவட்டம், உதகை ஆவின் வளாகத்தில் ரூ.15 கோடி மதிப்பில் புதிதாக தொடங்கப்படவுள்ள பாலாடைக்கட்டி மற்றும் சாக்லேட் தொழிற்சாலை ஆகியவைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் ஆவின் உற்பத்தியை அதிகரிக்கவும் சுற்றுலா பயணிகளை கவரும் விதத்தில் சாக்லேட்டுகள் தயாரிப்பதை மேம்படுத்த ஆலோசனை வழங்கினார்

நீலகிரி மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்யவேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும் .அல்லது <

நீலகிரி மக்களே, ரயில்வே பணியில் சேர சூப்பர் வாய்ப்பு! இந்தியன் ரயில்வேயில் குரூப் D 22,000 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு 10ம் வகுப்பு முடித்திருந்தால் போதுமானது. மாத சம்பளம் ரூ. 18,000 வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள், வரும் ஜன.29ம் தேதிக்குள் இந்த <

நீலகிரியில், வாடகை வீட்டில் வசிப்பவர்கள், வாடகை உயர்வு, திடீர் வெளியேற்றம், முன்பண பிரச்சனை போன்ற பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். வாடகை வீட்டில் குடியிருப்போர் உரிமைகளை பாதுகாக்க தனி சட்டமே உள்ளது. உங்கள் வீட்டின் உரிமையாளர் அதிக கட்டணம் வசூலித்தாலோ அல்லது தொந்தரவு செய்தாலோ, 1800 599 01234 என்ற தமிழக வீட்டுவசதித் துறையின் கட்டணமில்லா எண்ணில் புகார் அளிக்கலாம். (SHARE பண்ணுங்க)

நீலகிரி மக்களே, அதிக மின் கட்டணம், மின்தடை, மீட்டர் பழுது, மின் திருட்டு போன்ற புகார்களுக்கு இனி நேரடியாக மின்வாரிய அலுவலகம் செல்லத் தேவையில்லை. நீங்கள் உங்கள் வீட்டில் இருந்தபடியே, உங்கள் செல்போனில்<

நீலகிரி மாவட்டத்தில் குடியரசு தினமான நேற்று (ஜன.26) தொழிலாளர் நலச் சட்டங்கள் முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதை உறுதி செய்ய அரசு உத்தரவிட்டிருந்தது. இதன்படி, குன்னூர் தொழிலாளர் உதவி ஆய்வாளர் முகமது யூசுப் தலைமையில் சிறப்பு ஆய்வு குழுவினர் நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது விதிகளை மீறியதாக 33 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுத்தனர்.

தமிழக அரசு சொத்து தொடர்பான சேவையை WhatsApp-ல் வழங்க திட்டமிட்டுள்ளது.
1) 8188869996 எண்ணை Save பண்ணுங்க.
2) WhatsApp-ல் வணக்கம் அனுப்புங்க
3) மாவட்டம், கிராமம் விவரங்களை குறிப்பிட்டு (சொத்து நகல், ஈசி, பட்டா, சிட்டா) தேர்தெடுஙக.
4) நீங்கள் குறிப்பிட்ட சொத்து தொடர்பான அனைத்து தகவல்களும் WhatsApp-ல் கிடைக்கும்.
இந்த எண் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது. மற்றவர்கள் தெரிஞ்சுக்க Share பண்ணுங்க

மேட்டுப்பாளையம் – ஊட்டி இடையே யுனெஸ்கோ அந்தஸ்து பெற்ற மலை ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் நேற்று மாலை குன்னூரில் இருந்து மேட்டுப்பாளையம் வந்த போது கல்லாறு – ஹில்குரோ நிலையங்களுக்கு இடையே ரயில் பாதையில் மரங்கள் முறிந்து விழுந்து தண்டவாளம் சேதமடைந்தது தெரிந்து மீண்டும் குன்னூர் சென்றது. தண்டவாள சீரமைப்பு பணிக்காக இன்று (ஜன.28) காலை மேட்டுப்பாளையம்-ஊட்டி சேவையை ரத்து செய்து ரயில்வே அறிவித்துள்ளது.

பந்தலூர் அருகே அத்திகுன்னா எஸ்டேட் தொழிலாளர் குடியிருப்பு பகுதியில் சிறுத்தை நடமாட்டம் குறித்து வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். சிறுத்தை நடமாட்டம் குறித்த வீடியோ பரவிய நிலையில் வனவர் சுரேஷ் குமார் தலைமையிலான வனக்குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர். கோடை காலம் துவங்கியுள்ள நிலையில் சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் உணவு தேடி வர வாய்ப்புள்ளது. எனவே பாதுகாப்புடன் இருக்க அறிவுரை வழங்கினர்.
Sorry, no posts matched your criteria.