India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நாளை (பிப்.11) வள்ளலார் நினைவு தினத்தை முன்னிட்டு, டாஸ்மாக் உள்ளிட்ட மது கடைகளுக்கு விடுமுறை விடப்படுவதாக நீலகிரி கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.மேலும், மதுக்கடைகள், பாா்கள் ஏதேனும் திறந்திருந்தால், கூடுதல் காவல் கண்காணிப்பாளா், மதுவிலக்கு மற்றும் அமலாக்கம், உதகை 0423-2223802, உதவி ஆணையா் 0423-2443693, மாவட்ட டாஸ்மாக் மேலாளா் எடப்பள்ளி, குன்னூா் 0423-2234211 ஆகிய எண்களில் தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம்.

தைப்பூசம் தினத்தன்று தமிழ்நாட்டிலுள்ள அனைத்து பத்திரப் பதிவு அலுவலகங்களும் வழக்கம் போல் செயல்படும் என தமிழ்நாடு அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி நீலகிரியில் உள்ள ஊட்டி கோத்தகிரி குன்னூர் கூடலூர் ஆகிய இடங்களில் உள்ள பத்திர பதிவு அலுவலகங்கள் வழக்கம் போல் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படும். விடுமுறை நாள் ஆவண பதிவிற்கான கட்டணம் சேர்த்து வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊட்டி படகு இல்லாத ஏரியில் பிணம் உள்ளதாக ஊட்டி ஜி1 காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்ததை அடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி ஊட்டி மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீஸ் விசாரணையில் இறந்தவர் ஊட்டி காந்தல் பகுதியை சேர்ந்த விஜயகுமார் (60) ஓட்டல் தொழிலாளி என்பது தெரிந்தது. போலீசார் விசாரித்தனர்.

நீலகிரி மாவட்டத்தில் இன்று (09.02.2025) இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. உதகை நகரம் ஊரக உட்கோட்டம், குன்னூர் உட்கோட்டம், கூடலூர் மற்றும் தேவாலா உட்கோட்டம் ஆகிய காவல் நிலைய அதிகாரிகளின் தொடர்பு எண்கள் நீலகிரி மாவட்ட காவல்துறையால் வெளியிடப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம் குன்னூர் – மேட்டுப்பாளையம் சாலையில் இன்று உதகை பகுதியிலிருந்து, திருப்பூர் நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்தும், மதுரையில் இருந்து உதகைக்கு வந்து கொண்டிருந்த பேருந்தும் நேருக்கு நேர் மோதி சிறு விபத்து ஏற்பட்டது. இதனால் 1 மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதில், பேருந்தில் பயணித்த யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.

வள்ளலார் நினைவு தினத்தை முன்னிட்டு, நீலகிரி மாவட்டத்தில் உள்ள மதுபான கடைகளுக்கு, வரும் 11ம் தேதி விடுமுறை அளிக்கப்படுவதாக, நீலகிரி ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு அறிவித்துள்ளார். அதன்படி மதுபான சில்லறை விற்பனை கடைகள், கிளப், பார்கள் ஹோட்டல் பார்கள் அனைத்தும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. எவரேனும் மதுபானங்களை விற்பது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.

பிரதம மந்திரியின் தேசிய தொழில் பழகுநர் திட்டத்தின் கீழ் குன்னூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில், தேசிய தொழில் பழகுநர் சேர்க்கை முகாம் நாளை நடக்கிறது. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கும், இம்முகாமில் மத்திய, மாநில அரசு நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்களும் தனியார்துறை நிறுவனங்கள் பங்கேற்று, 200க்கும் மேற்பட்ட காலியிடங்களை நிரப்பவுள்ளனர். தேர்வு பெற்றால் ஊக்க தொகையுடன் பயிற்சி வழங்கப்படும்.

கோத்தகிரியில் ரத்தக்காயங்களுடன் கிடந்த குரங்கை ஆம்புலன்சில் ஏற்றிச்சென்ற ஓட்டுனருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. நீலகிரி நகர் புறத்தில் ரத்த காயங்களுடன் கிடந்த குரங்கை மீட்ட ஆம்புலன்ஸ் ஓட்டுநர், சிகிச்சைக்காக ஆம்புலன்சில் கொண்டு சென்ற புகைப்படங்கள் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது வருகின்றன. உயிர்போகும் இறுதி நொடியில் குரங்கை காப்பாற்றியுள்ளார்.

நீலகிரி மாவட்டத்தில் பொதுமக்களின் பிரதிநிதிகள், தனியார் அமைப்புகள் மற்றும் பேருந்து உரிமையாளர்களிடமிருந்து மினி பேருந்துகள் குறித்த புதிய விரிவான திட்டம் 1924 கீழ் வழித்தட வரைபடங்களுடன் கூடிய விண்ணப்பங்கள், நிபந்தனைகளுக்கு உட்பட்டு வரவேற்கப்படுகிறது. இதற்காக ஊட்டி வட்டார போக்குவரத்து அலுவலரிடம் விண்ணப்பிக்கலாம். இதை நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பாவ்யா தண்ணீரு அறிவித்துள்ளார்.

உதகை நகரில் வீடுகளில் குப்பைகளை தரம் பிரித்து வழங்க பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என நகராட்சி அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தி உள்ளார். சேகரிக்கப்படும் குப்பைகளை சுற்றுச்சூழல் பாதிக்கப்படாத வகையில் உரக்கிடங்கில் உரமாக மாற்றவும், மக்காத நெகிழி குப்பைகளை சிமெண்ட் ஆலைகளுக்கு உடனடியாக அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கவும் நகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளார்.
Sorry, no posts matched your criteria.