India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நீலகிரி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளரின் செலவை குறைத்து காட்ட வேண்டும், செலவின பதிவுகளால் வேட்பாளருக்கு பாதகம் நேர்ந்தால் கொலை செய்துவிடுவேன் என நீலகிரி தேர்தல் அதிகாரியான மாவட்ட கலெக்டர் மிரட்டியதாக தேர்தல் செலவின பார்வையாளர் பகிரங்க குற்றச்சாட்டை வைத்துள்ளார். தாக்கல் செய்த செலவு கணக்கு ரூ.13 லட்சம், அதிகாரிகள் கணக்கீட்டின்படி ரூ.54 லட்சம் வருகிறது, வேறுபாடு ரூ.41 லட்சம் எனக் கூறப்படுகிறது.
நீலகிரி தொகுதி பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து நடன இயக்குனர் கலா மாஸ்டர் பிரச்சாரம் மேற்கொண்டு வாக்கு சேகரித்தார். அப்போது கடைக்காரர் ஒருவருக்கு கலா மாஸ்டர் அல்வா கொடுத்தார். இந்த செயல் தொண்டர்களை மகிழ்ச்சி அடைய செய்தது.
திருச்சி பொன்மலை ரயில்வே பணி மனையில், குன்னூர் மலை ரயிலின் ‘டீசல் எஞ்ஜின்’ புதுப்பிக்கப்பட்டது. நேற்று (ஏப்.10) அது மலை ரயிலில் பொருத்தப்பட்டு, மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூருக்கு வெள்ளோட்டம் விடப்பட்டது. இன்னும் ஒரு வார காலத்தில், பயணிகளுக்காக மேட்டுப்பாளையம்-குன்னூர் இடையே இயக்கப்படும் என ரயில்வே அறிவித்துள்ளது.
ஊட்டி மார்க்கெட்டில் ‘ஜாவா’ குருவிகள் விற்கப்படுவதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் அங்கு சென்ற வனத்துறையினர் குருவிகளை மீட்டனர். வனத்துறை அலுவலர் இன்று ( ஏப்.11) கூறுகையில், “ஜாவா குருவி தடை செய்யப்பட்ட பட்டியலில் இருப்பது கடைக்காரருக்கு தெரியாது. முதல்முறை என்பதால் அவருக்கு அறிவுரை மட்டும் வழங்கப்பட்டது” என்றார்.
திருச்சி பொன்மலை ரயில்வே பணி மனையில், குன்னூர் மலை ரயிலின் ‘டீசல் எஞ்ஜின்’ புதுப்பிக்கப்பட்டது. நேற்று (ஏப்.10) அது மலை ரயிலில் பொருத்தப்பட்டு, மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூருக்கு வெள்ளோட்டம் விடப்பட்டது. இன்னும் ஒரு வார காலத்தில், பயணிகளுக்காக மேட்டுப்பாளையம்-குன்னூர் இடையே இயக்கப்படும் என ரயில்வே அறிவித்துள்ளது.
உதகையில் மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகம் பகுதியில் பாராளுமன்ற தேர்தலில் 100% வாக்களிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் மு.அருணா தலைமை தாங்கினார். பழங்குடியின தோடர், கோத்தர்களின் கலாச்சார நடனங்கள் மற்றும் பேரணி நடைபெற்றது. நீலகிரி SP சுந்தரவடிவேல், கூடுதல் ஆட்சியர் கெளசிக் மற்றும் பலர் பங்கேற்றனர். பேரணி கார்டன் சாலை வழியாக சென்று பழங்குடியினர் மையத்தை அடைந்தது.
குந்தா தாலுகாவில் பாலகொலா, நுந்தளா, மீக்கேரி, பி.மணியட்டி, சி.மணியட்டி, தங்காடு, ஓரநள்ளி, கன்னேரி மந்தனை, கல்லக்கொரை, குருத்துக்குளி, மேல் கௌஹெட்டி உள்பட 14 கிராமங்களுக்கு சுற்றுலாத்துறை அமைச்சர் கே.ராமச்சந்தின் சென்றார். அந்த கிராமங்களில் நீலகிரி தொகுதி திமுக வேட்பாளர் ஆ.ராசாவுக்கு உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
கூடலூர் தாலுகா தேவர்சோலை பேரூராட்சி 1வது வார்டுக்குட்பட்ட தேவன் 1 கிராமத்தில் வாக்குச்சாவடி எண் 90, 91 இதுவரை அதே பகுதியில் செயல்பட்டுவந்தது. சில நிர்வாக காரணங்களால் 90ஆம் வாக்குச்சாவடி மேஃபீல்டுக்கும், 91ஆம் சாவடி கொட்டமெடு பள்ளிகளுக்கும் மாற்றப்பட்டது. இதனால் 600 வாக்காளர்கள் உள்ள இப்பகுதி மக்கள் 6 கிமீ தூரம் சென்று வாக்களிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதால் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
உதகையில் மே மாதம் சீசனை முன்னிட்டு அரசு தாவரவியல் பூங்காவில் பராமரிப்பு பணிகள் முழு வீச்சில் நடைபெறுகின்றன. பூங்காவில் 14 ஏக்கர் அழகிய பசுமையான புல் வெளிகளில் மண் கொட்டும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. தற்போது சிடிசி குளத்தை சுற்றிலும் பணிகள் நடைபெறுகின்றன. ஒரு வாரத்தில் பணிகள் முடிவடையும் . தினமும் ஸ்பிரிங்லர் மூலம் தண்ணீர் பாய்ச்சப்படுகிறது .
சமூக வலைதளங்களில் தேர்தல் குறித்து தேவையற்ற தகவல்கள், அவதூறுகள் மற்றும் வதந்திகளை பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவடிவேல் எச்சரித்துள்ளார். அது தொடர்பான தகவல்களை 7598803030 என்ற எண்ணில் தொடர்புகொண்டு தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.