India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஊட்டி ஏக்குன்னியை சேர்ந்தவர் மாணிக்கம் (60). தைலம் காய்ச்சும் இடத்தில் வேலை செய்து வருகிறார். இவருக்கும் மனைவி பங்கஜத்துக்கும் இடையே குடும்ப தகராறு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் இன்று காலை நடந்த தகராறில் மனைவியின் கழுத்தை துணியால் இறுக்கியதில் அதே இடத்தில் மனைவி உயிரிழந்தார். தைலம் ஷெட்டில் ஒளிந்திருந்த மாணிக்கத்தை, இன்ஸ்பெக்டர் அல்லி ராணி பிடித்து கைது செய்தார்.
நீலகிரி மாவட்டத்தில் ஒரு லிட்டர் மற்றும் அதற்கு குறைவாக உள்ள பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக் கவர்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை கட்டுப்படுத்த தமிழக-கேரளா எல்லையான பாட்டவயல் சோதனை சாவடியில்,
நுழையும் அனைத்து வாகனங்களையும் தினந்தோறும் ஆய்வு செய்துவருகின்றனர். வாகனத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் கவர்களை இருந்தால் பறிமுதல் செய்கின்றனர்.
நீலகிரி மாவட்டத்திற்கு வருகின்ற சுற்றுலா வாகனங்கள் இ-பாஸ் பெற்று வரும் நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் வருகை குறைந்துள்ளது. இதனால் காட்டேஜ்கள் 80 சதவீதம் காலியாக கிடக்கின்றன. எனவே இ-பாஸ் முறையை ரத்து செய்ய வேண்டும், தவறினால் அனைத்து காட்டேஜ்கள் மூடப்படும். இந்த தகவலை நீலகிரி மாவட்ட காட்டேஜ் உரிமையாளர்கள் சங்க தலைவர் மகேந்திரன் தெரிவித்தார்.
குன்னுார் அருகே பிரசாந்த் (47) என்பவர் தனியார் மியூசிக் சென்டர் வைத்துள்ளார். இவர், 14 வயது பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதை தொடர்ந்து மாணவியின் பெற்றோர் போலீசில் புகார் கொடுத்தனர். குன்னூர் மகளிர் போலீசார் விசாரணை நடத்தி, போக்சோ சட்டத்தின் கீழ் நேற்று (மே 8) பிரசாந்தை கைது செய்து, குன்னுார் கிளை சிறையில் அடைத்தனர்.
உதகை அரசு பூங்காவில் மலர் கண்காட்சி மற்றும் ரோஜா பூங்காவில் ரோஜா மலர் கண்காட்சி ஆகியவை நாளை தொடங்கி 19ஆம் தேதிவரை நடைபெறும். இதை முன்னிட்டு நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களை சேர்ந்த 600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். உதகை மற்றும் சோதனைச்சாவடிகளில் 1300 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த தகவலை நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவடிவேல் தெரிவித்தார்.
நீலகிரி, உள்ளூர் பொதுமக்கள் சுற்று சூழலை பாது காத்து வருகின்றனர். உள்ளூர் பொதுமக்களின் ஆதார் அடையாளத்தை வைத்து உள்ளூர் மக்கள் ஊட்டி மலர்காட்சி, ரோஜா மலர்காட்சி, குன்னூர் காய்கறி கண் காட்சி போன்ற கண் காட்சிகளை இலவசமாக காண வழி செய்யும் வகையில் இலவச நுழைவு கூப்பன் வழங்க வேண்டும் என்று படுக தேச பார்ட்டி நிறுவன தலைவர் மஞ்சை மோகன் கலெக்டருக்கு இன்று (மே8) மனு கொடுத்து உள்ளார்.
நீலகிரி மாவட்டத்தில் 126வது மலர் கண்காட்சி நடைபெறவுள்ளதால் வரும் 10ம் தேதியன்று மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் அருணா இன்று உத்தரவிட்டுள்ளார். இதனை ஈடு செய்ய வரும் 18ஆம் தேதி வேலைநாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஊட்டி அரசு கலைக் கல்லூரியில் 2024-2025ம் கல்வியாண்டில், இளநிலை பட்ட படிப்புகளுக்கு, +2 தேர்ச்சி பெற்ற மாணவர்கள் www.tngasa.in என்ற இணையதள முகவரியில், இம்மாதம் 6ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கல்லூரியில், ‘மாணவர் சேர்க்கை உதவி மையம்’ அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தை அணுகியும் பயன்பெறலாம் என்று கல்லூரி முதல்வர் ராமலட்சுமி அறிவித்துள்ளார்.
கூடலூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நீலகிரி மாவட்ட பாஜக பொதுச்செயலாளர் நளினி, ஶ்ரீமதுரை ஊராட்சி மன்ற தலைவர் கே.ஆர்.சுனில், மாவட்ட செயலாளர் அருண் ஆகியோர் கோட்டாட்சியரை நேற்று சந்தித்தனர். கூடலூர் பகுதியில் மக்களை பாதிக்கும் வகையில் வனத்துறை வெளியிட்டுள்ள யானைகள் வழித்தடம் அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து மனு கொடுத்தார்கள்.
நீலகிரிக்கு கோடை சீசன் ஏப்ரல், மே மாதங்களில் 10 லட்சம் பேர் என ஆண்டு முழுவதும் 30 லட்சம் பேர் வந்து செல்கின்றனர். அதில் 70 சதவீத சுற்றுலா பயணிகள் பொது போக்குவரத்தை பயன்படுத்தாமல் சொந்த வாகனங்களில் வருகின்றனர்.
நீலகிரி மாவட்ட போலீசார் சாலையோரங்களின் முக்கிய சந்திப்புகள் உட்பட பல்வேறு இடங்களில் சுற்றுலா தலங்களின் பெயர்கள் அடங்கிய வழிகாட்டி பலகைகளை அமைக்கும் பணிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
Sorry, no posts matched your criteria.