Theni

News May 8, 2024

நகராட்சி வள மீட்பு மையத்தில் தீ விபத்து

image

தேனி புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள வளமீட்பு மையத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனை அறிந்த அப்பகுதி மக்கள் தேனி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த விபத்தில் வளமீட்பு மையம் அருகே நிறுத்தியிருந்த நகராட்சி ஊழியர் டூவீலர், நகராட்சி பேட்டரி வாகனம், பிளாஸ்டிக் பொருட்களை கட்டும் இயந்திரம் சேதமடைந்தன.

News May 8, 2024

தேனி வைகை அணை சிறப்பம்சங்கள் !

image

வைகை ஆற்றுக்கு குறுக்கே கட்டப்பட்டுள்ள வைகை அணை தேனி ஆண்டிப்பட்டியிலிருந்து 7 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. 1959ஆம் ஆண்டு திறந்து பயன்பாட்டுக்கு வந்த, 111 அடி உயரம் கொண்ட இந்த அணையில் 71 அடி நீா் தேக்கி வைக்கப்படுகிறது. இந்த அணையைச் சுற்றி அழகிய பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு குழந்தைகளுக்கான ரயில்கள், மற்றும் விளையாட்டு திடல்கள் உள்ளன. இந்த அணை பிரபலமாகத சுற்றுத்தலமாக இருந்து வருகிறது.

News May 8, 2024

தேனி அருகே விபத்து: இருவர் பலி 

image

கம்பத்தை சேர்ந்தவர் நல்லதம்பி. இவரது மனைவி ரம்யாவுடன் நேற்று வீரபாண்டி கௌமாரியம்மன் கோவிலுக்கு ஆட்டோவில் சென்று விட்டு இன்று அதிகாலை கம்பத்திற்கு திரும்பியுள்ளனர். கம்பம் புதுப்பட்டி அருகே வந்து கொண்டிருந்த போது எதிரே வந்த அரசு பேருந்து ஆட்டோ மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே நல்லதம்பி உயிரிழந்தார். படுகாயமடைந்த ரம்யா மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

News May 8, 2024

இன்று மழைக்கு வாய்ப்பு

image

தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில் காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதனால் தமிழகத்தில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மணிக்கு 30 முதல் 40 கிமீ வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யும். அதன்படி தேனி உட்பட 14 மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News May 8, 2024

முல்லை பெரியாறு அணை நிலவரம்

image

தேனி மாவட்டம் கம்பம் சுற்று வட்டார பகுதியில் கோடை வெயில் வாட்டி வதைத்த வேளையில் இரண்டு நாட்களாக மழை பெய்து வந்தது. முல்லைப் பெரியாறு அணையின் மொத்த உயரம் 152 அடி. தற்போது நீர்மட்டம் 115 அடியாக உள்ளது. அணைக்கு நீர் இருப்பு 1727 மில்லியன் கன அடியாக இருந்தது. குடிநீர் தேவைக்காக இரைச்சல் பாலம் வழியாக வினாடிக்கு 100 கன அடியாக திறந்து விடப்படுகிறது.

News May 7, 2024

தேனி: மனைவியுடன் செல்போனில் பேச்சு… மிரட்டல்

image

தேவாரம் ரோட்டுபட்டியைச் சேர்ந்த ஜேக்ஸ் என்பவரது மனைவியிடம் லோகன் பிரபு அலைபேசியில் தொடர்ந்து பேசி உள்ளார். இதனால், கோபமடைந்த ஜேக்ஸ், நேற்று (மே.6) தனது உறவினர்கள் அபினாஷ், சிவா ஆகியோருடன் சேர்ந்து லோகன் பிரபு வீட்டில் இருந்த வாஷிங் மெஷின், பிக்கப் வண்டி கண்ணாடியை அடித்து உடைத்ததுடன் கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர். இதுகுறித்த புகாரில் மூவர் மீது தேவாரம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். 

News May 7, 2024

 கிக் பாக்ஸிங்கில் மாணவர்கள் சாதனை

image

இந்தியன் அமைச்சூர் கிக் பாக்ஸிங் அசோசியேசன் நடத்திய மாநில அளவிலான கிக் பாக்ஸிங் போட்டி சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு விளையாட்டு பல்கலை., உள்ளரங்கத்தில் மே 3,4, 5 ஆகிய 3 நாட்கள் நடைபெற்றது. இதில், போடி, தேனி காம்பாக்ட் கிளப் மாணவ மாணவிகள் 2 தங்கம், 2 வெள்ளி, 2 வெண்கல பதக்கங்களை பெற்றன.ர் தங்கம் வென்ற வீரர்கள் ஜூன் மாதம் கல்கத்தா சிலிகுறிச்சியில் தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்கின்றனர். 

News May 7, 2024

தேனி மாவட்டத்திற்கு எச்சரிக்கை

image

தமிழகத்தில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல கீழடுக்குகளில் நிலவும் காற்றின் திசை மாறுபாடு காரணமாக தமிழகத்தில் 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று தேனி மாவட்டத்தில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News May 7, 2024

தேனி: கெளமாரியம்மனுக்கு சிறப்பு பூஜை

image

தேனி மாவட்டம் வீரபாண்டியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ கெளமாரியம்மன் கோவில் உற்சவ திருவிழாவை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு பூஜை நேற்று நடைபெற்றது. பூஜைக்கு பின்னர் சுவாமி வீதி உலா வரும் நிகழ்வு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். பின்னர் கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு அருள் பிரசாதம் வழங்கப்பட்டது.

News May 6, 2024

தங்கப்பதக்கம் வென்ற மாணவிகள்

image

இன்டர்நேஷனல் ஓபன் சிலம்பம் செம்பியன் 2024 போட்டிகளில் சின்னமனூர் வீரமங்கை வேலுநாச்சியார் சிலம்பம் கலைக்கூடம் மாணவர்கள் ஸ்ரீலங்காவில் நடைபெற்ற போட்டியில் கலந்து கொண்டு தங்கப்பதக்கம் வென்றனர். இந்நிலையில், தேனி மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த சின்னமனூர் வீராங்கனைகளுக்கு ஆசான் ஈஸ்வரன் உலக சிலம்பம் விளையாட்டு சங்கம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.