Theni

News September 13, 2025

தேனியில் 17 வயது இளம் பெண் தற்கொலை

image

உத்தமபாளையம் க.புதுப்பட்டி பகுதியை சேர்ந்தவர் சரவணமுருகன் இவரது மகள் சாருமதி (17). இவர் கல்லூரியில் பயின்று வந்த நிலையில் படிப்பு பிடிக்காமல் பாதியிலேயே நின்றுள்ளார். இதனால் பெற்றோர்களுக்கு பாரமாக இருப்பதாக மனவேதனை அடைந்து வந்த சாருமதி நேற்று (செப்.12) வீட்டில் யாரும் இல்லாத பொழுது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து உத்தமபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை.

News September 13, 2025

தேனி:ரிசர்வ் வங்கி வேலை விண்ணப்பிப்பது எப்படி?

image

▶️தேனி மக்களே இந்திய ரிசர்வ் வங்கியில் 120 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன
▶️இதற்கு ஏதேனும் டிகிரி முடித்திருந்தால் போதுமானது
▶️இப்பணிக்கு ஆன்லைன் தேர்வு,நேர்காணல் முறையில் தேர்ந்தெடுக்கப்படுவர்
▶️ https://ibpsreg.ibps.in/rbioaug25/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்
▶️ செப்.30ஆம் தேதியே கடைசி நாளாகும்
▶️வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க!

News September 13, 2025

தேனி: 28 கிலோ கஞ்சா பறிமுதல்

image

தேனி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் நேற்று (செப்.12) தேனி-திண்டுக்கல் பைபாஸ் சாலையில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந்த சோமுமுத்தையா, கார்த்திக், லட்சுமி ஆகியோரிடம் சோதனை மேற்கொண்டனர். அதில் அவர்கள் ஒடிசாவில் இருந்து பஸ்சில் கடத்தி வந்த 28 கிலோ 820 கிராம் கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது. மூவரையும் கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

News September 12, 2025

தேனி: இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

image

தேனி மாவட்டத்தில் இன்று (செப்12) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை உத்தமபாளையம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் வெங்கடேசன் தலைமையில் இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.

News September 12, 2025

தேனியில் அதிகரிக்கும் வழிப்பறி மக்களே உஷார்

image

பெரியகுளம் பகுதியை சேர்ந்த ராஜா முகமது (49) நேற்று (செப்.11) நள்ளிரவு வேலை முடிந்து வீடு திரும்பி உள்ளார். அப்போது வசந்த், பியோ பேபியஸ், ராமர் ஆகியோர் ராஜா முகமதுவை வழிமறித்து குடிப்பதற்கு பணம் கேட்டு அவரிடம் வழிப்பறி செய்துள்ளனர். இதனை தட்டிக் கேட்ட ராஜலிங்கம் என்பவரை அரிவாள் கொண்டு தாக்கியுள்ளனர். இது குறித்த புகாரில் தென்கரை போலீசார் வழிப்பறியில் ஈடுபட்ட மூவரையும் கைது செய்தனர்.

News September 12, 2025

போடி: கழுத்தை நெறித்த கடன்! வீபரித முடிவு

image

போடி மீனாட்சிபுரம் காந்தி மெயின் ரோட்டில் வசிப்பவர் தயாளன் 50. திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர் அதிக அளவில் கடன் வாங்கியதால் கடனை செலுத்த முடியாமல் மது குடித்து வந்துள்ளார்.மனம் உடைந்த தயாளன் நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மனைவி மஞ்சுளா புகாரில் போலீசார் விசாரிக்கின்றனர்.

News September 12, 2025

தேனி: 50% மானியத்தில் கிரைண்டர்!

image

தேனி மக்களே கிரைண்டர் வாங்க போறீங்களா?? அப்போ தமிழக அரசு 5000 மானியம் புடிங்க. தமிழக அரசு வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள பெண்கள், ஆதரவற்றோர், கைம்பெண்கள் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் உங்க வயது 25க்கு மேல் இருக்க APPLY பண்ணலாம். வேண்டும். தென்காசி மாவட்ட சமூக நல அலுவரிடம் உங்கள் ஆவணங்களை சமர்பித்து விண்ணப்பியுங்க.. பெண்களுக்கு SHARE பண்ணி APPLY பண்ண சொல்லுங்க.

News September 12, 2025

காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை: கலெக்டர் அறிவுறுத்தல்

image

தேனி: அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளுக்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டால் சுகாதாரத்துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அரசு மருத்துவமனைகள் மட்டுமின்றி, தனியார் மருத்துவமனைகளில் பதிவாகும் காய்ச்சல் நோயாளிகளின் பதிவுகளை சரிபார்க்க வேண்டும். காய்ச்சல் பாதிப்பு ஏற்படும் பகுதியில் சிறப்பு முகாம்கள் நடத்த வேண்டும் என சுகாதாரத்துறைக்கு அம்மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத்சிங் அறிவுறுத்தியுள்ளார்.

News September 12, 2025

சின்னமனூர் அருகே புதுப்பெண் ஓட்டம்

image

சின்னமனூர் அருகே உள்ள காமாட்சிபுரம் அழகாபுரியை சேர்ந்தவர் அஜித் குமார் (25). இவருக்கும் சுக்காங்கல்பட்டியை சேர்ந்த நிவேதா (22),என்பவருக்கும் செப்.7 ல் திருமணம் நடைபெற்றது. கடந்த செப்.10 நள்ளிரவில் பாத்ரூம் செல்வதாக படுக்கையில் இருந்து எழுந்து சென்ற மனைவியை காணவில்லை. பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இது குறித்து ஓடைப்பட்டி போலீசார் வழக்கு (செப்.11) பதிவு செய்து விசாரணை.

News September 12, 2025

தேனி: பெற்ற தாயை கொடூரமாக தாக்கிய மகள்

image

கம்பம் பகுதியை சேர்ந்தவர் ராணி (63). இவருக்கும் இவரது மகளான அனுபல்லவிக்கும் சொத்து பிரச்சனை சம்பந்தமாக முன்விரோதம் ஏற்பட்டுள்ளது. இந்த முன் விரோதம் காரணமாக அனுபல்லவி மற்றும் அவரது கணவர் ராமன் ஆகியோர் ராணியுடன் தகராறில் ஈடுபட்ட அவரைத் தாக்கியுள்ளனர். இது குறித்த புகாரில் கூடலூர் வடக்கு போலீசார் தாக்குதல் நடத்திய தம்பதியர் மீது வழக்கு (செப்.11) பதிவு செய்து விசாரணை.

error: Content is protected !!