Theni

News February 26, 2025

தேனி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்

image

தேனி மாவட்ட அணைகளின் (பிப்.26) நீர்மட்டம்: வைகை அணை: 61.88 (71) அடி, வரத்து: இல்லை, திறப்பு: 69 க.அடி, பெரியாறு அணை: 115.95 (142) அடி, வரத்து: 106 க.அடி, திறப்பு: 400 க.அடி, மஞ்சளார் அணை: 36.95 (57) அடி, வரத்து: 7 க.அடி, திறப்பு: 55 க.அடி, சோத்துப்பாறை அணை: 77.40 (126.28) அடி, வரத்து: இல்லை, திறப்பு: 25 க.அடி, சண்முகா நதி அணை: 26.25 (52.55) அடி, வரத்து: இல்லை, திறப்பு: இல்லை

News February 26, 2025

வனத்துறையினரால் மாடுகளை விற்பனை செய்யும்  மக்கள்

image

சின்னமனூா் ஹைவேவிஸ் பேரூராட்சியில் மேகமலை உள்ளிட்ட 7 மலைக் கிராமங்கள் உள்ளன. இங்குள்ள தோட்டத் தொழிலாளர்கள் வீடுகளில் ஆடு, மாடுகளை வளா்த்து வருகின்றனா். தற்போது வனப்பகுதியில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு செல்லக்கூடாது என வனத்துறையினர் மலைக்கிராமத்தினருக்கு தடை விதித்துள்ளனர். இதனால் கால்நடைகளுக்கு தேவையான தீவனம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டதால் கால்நடைகளை குறைந்த விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர்.

News February 26, 2025

தேனி மாவட்ட இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

image

தேனி மாவட்டத்தில் இன்று 25.02.2025 இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.

News February 25, 2025

மகா சிவராத்திரியில் இங்கு வழிபட்டால் தொழில் தடை நீங்கும்

image

தேனி மாவட்டம் சின்னமனூர் பகுதியில் அமைந்துள்ளது பூலாநந்தீஸ்வரர் சிவகாமி அம்மன் கோவில். 1000 ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த இந்த சிவாலயம் பற்றி கந்தபுராணத்தில் குறிப்பு உள்ளது. மகா சிவராத்திரி தினத்தன்று அதாவது நாளை இக்கோவிலில் உள்ள பூலாநந்தீஸ்வரரை வணங்கினால் தொழிலில் தடை நீங்கி, லாபம் அடைவர் என்பது ஐதீகமாக உள்ளது. தடை நீங்க உங்க நண்பர்களுக்கும் ஷேர் பண்ணுங்க..

News February 25, 2025

தேனி மாவட்டதில் 5 ஆண்டுகளில் 330 பேர் பலி

image

தேனி மாவட்டத்தில் 33 இடங்கள் விபத்து பகுதியாக கண்டறியப்பட்டுள்ளன. இப்பகுதிகளில் 2019 முதல் 2024 வரை 950 விபத்துகள் நடந்துள்ளன. இந்த விபத்துகளில் 330 பேர் இறந்துள்ளனர். இது தவிர பிற பகுதிகளில் நடக்கும் விபத்துகளில் ஆண்டுதோறும் 100 பேர் வரை உயிரிழக்கின்றனர். விபத்து பகுதிகளில் விபத்துகளை குறைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News February 25, 2025

தேனி மாவட்டத்தில் 18 இடங்களில் முதல்வர் மருந்தகம் திறப்பு

image

தேனி மாவட்டத்தில் 18 இடங்களில் முதல்வர் மருந்தகம் திறப்பு. பிடி. ராஜன் தெரு, அல்லிநகரம் சமதா்மபுரம், கொடுவிலாா்பட்டி, பழனிசெட்டிபட்டி, போடியில் பெரியகுளம் வட்டாரத்தில் ஜெயமங்கலம், வடுகபட்டி, தேவதானப்பட்டி, ஆண்டிபட்டி வட்டாரத்தில் ஜக்கம்பட்டி, கண்டமனூர், கோவில்பட்டி, உத்தமபாளையம் வட்டாரத்தில் கம்பம், கம்பம்மெட்டு சாலை, கூடலூா், மேலக்கூடலூா் உள்ளிட்ட இடங்களில் முதல்வர் மருந்தகம் திறக்கப்பட்டுள்ளது. 

News February 24, 2025

தேனியில்  தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்

image

தேனி மாவட்ட நிர்வாகம், தேனி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்தும்  தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் பெரியகுளம் மேரிமாதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வரும் 01.03.2025 சனிக்கிழமை அன்று நடைபெற உள்ளது என  மாவட்ட ஆட்சி தலைவர் ரஞ்ஜீத் சிங் தெரிவித்து உள்ளார். 

News February 24, 2025

தேனி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்

image

தேனி மாவட்ட அணைகளின் (பிப்.24) நீர்மட்டம்: வைகை அணை: 62.01 (71) அடி, வரத்து: 79 க.அடி, திறப்பு: 69 க.அடி, பெரியாறு அணை: 116.20 (142) அடி, வரத்து: 61 க.அடி, திறப்பு: 356 க.அடி, மஞ்சளார் அணை: 37.65 (57) அடி, வரத்து: 6 க.அடி, திறப்பு: 65 க.அடி, சோத்துப்பாறை அணை: 79.70 (126.28) அடி, வரத்து: இல்லை, திறப்பு: 25 க.அடி, சண்முகா நதி அணை: 26.25 (52.55) அடி, வரத்து: இல்லை, திறப்பு: இல்லை.

News February 24, 2025

தபால் ஆபிசில் வேலை: உடனே அப்ளை பண்ணுங்க

image

அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இப்பணியிடங்களுக்குத் தேர்வு கிடையாது. 10ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலேயே பணி நியமனம் வழங்கப்படும். தேனியில் மட்டும் 25 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ரூ.10,000 – ரூ.30,000 வரை சம்பளம் வழங்கப்படும். 18 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் மார்ச் 3ஆம் தேதிக்குள் <>இங்கு <<>>கிளிக் செய்து விண்ணப்பிக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க

News February 24, 2025

தேனி மாவட்ட இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

image

தேனி மாவட்டத்தில் இன்று 23.02.2025 இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் தேவையுள்ளவர்கள் அந்த அந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!