Theni

News March 2, 2025

தேனியில் நாளை தொடங்கும் பொதுத்தேர்வு

image

தமிழகம் முழுவதும் நாளை முதல் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெற உள்ளது. தேனி மாவட்டத்தில் மட்டும் 13,365 மாணவர்கள் தேர்வு எழுத உள்ளனர். 141 பள்ளிகளைச் சேர்ந்த 6271 மாணவர்கள், 6791 மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர். தனித்தேர்வர்கள் 303 பேரும் தேர்வு எழுது கின்றனர். தேர்வு நேரங்களில் திடீர் சோதனை மேற்கொள்ள 7 பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. 140 ஆசிரியர்கள் சோதனை பணியில் ஈடுபட உள்ளனர்.

News March 2, 2025

திருக்காளாத்தீஸ்வரர் ஞானாம்பிகை கோவிலில் கொடியேற்றம்

image

தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் பழைமையான திருக்காளாத்தீஸ்வரர் ஞானாம்பிகை கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் மாசித் திருவிழாவை முன்னிட்டு, நேற்று (மார்.1) கோவில் கொடிமரத்துக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து வேதமந்திரங்கள் முழங்க சிவாசாரியர்கள் கொடியேற்றி விழாவை தொடங்கி வைத்தனர். கோவில் விழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் வருகிற 11-ம் தேதியும் , தேரோட்டம் 12-ம் தேதியும்‌ நடைபெறவுள்ளது.

News March 2, 2025

தேனி மாவட்ட இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

image

தேனி மாவட்டத்தில் இன்று 01.03.2025 இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.

News March 1, 2025

ஒரு நாள் சுற்றுலா செல்ல சிறந்த இடம் குரங்கனி

image

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே மேற்கு தொடா்ச்சி மலையில் அமைந்துள்ள ரம்மியமான இடம் தான் குரங்கனி. கொட்டக்குடி மலை வாழ்குடிகள், கொட்டக்குடி ஆறுகள், மலைப் பண்ணைத் தோட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு காட்சிகளை இங்கு காணலாம். ஒரு நாள் விடுமுறையை கொண்டாட உகந்த இடம் குரங்கனி

News March 1, 2025

நில அளவைக்கு இ-சேவை மையம் மூலம் விண்ணப்பிக்கலாம்

image

தேனி மாவட்டத்தை சேர்ந்த நில உரிமையாளர்கள் தங்களது நிலத்தை அளவை செய்ய சம்மந்தப்பட்ட வட்டாட்சியர் அலுவலகத்துக்கு நேரில் சென்று விண்ணப்பிக்காமல், இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பித்த பிறகு நில அளவை செய்யப்படும் தேதி மனுதாரருக்கு கைப்பேசியில் குறுஞ்செய்தி மூலம் தெரிவிக்கப்படும். இந்த சேவையை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிப்பு.

News March 1, 2025

திருமணத்தடையை நீக்கும் வழி விடும் முருகன் கோவில்

image

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே தென்பழனி பகுதியில் வழி விடும் முருகன் கோவில் அமைந்துள்ளது. மேகமலைக்கு செல்லும் வழியில் அமைந்துள்ள இந்த கோவிலுக்கு வரும் பக்தர்கள், முருகனுக்கு அபிஷேகம் செய்து , சிறப்பு பரிகாரங்கள் செய்வதன் மூலம் திருமணத்தடை உள்ளவர்களுக்கு தோஷம் நீங்கி விரைவில் திருமணம் நடக்கும் என்பது அப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது.

News March 1, 2025

நில அளவைக்கு இ-சேவை மையம் மூலம் விண்ணப்பிக்கலாம்

image

தேனி மாவட்டத்தை சேர்ந்த நில உரிமையாளர்கள் தங்களது நிலத்தை அளவை செய்ய சம்மந்தப்பட்ட வட்டாட்சியர் அலுவலகத்துக்கு நேரில் சென்று விண்ணப்பிக்காமல், இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பித்த பிறகு நில அளவை செய்யப்படும் தேதி மனுதாரருக்கு கைப்பேசியில் குறுஞ்செய்தி மூலம் தெரிவிக்கப்படும். இந்த சேவையை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிப்பு.

News March 1, 2025

அனுமந்தன்பட்டி கோவிலுக்கு இவ்வளவு சக்தியா?

image

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள அனுமந்தன்பட்டியில் அனுமந்தராய பெருமாள் கோயில்அமைந்துள்ளது. சுயம்பாக தோன்றியுள்ள அனுமந்தராயருக்கு ஒவ்வொரு சனிக்கிழமை
அன்றும் ,சிறப்பு பூஜைகள் செய்யப்படுவது வழக்கம். இந்த பூஜைகளில் கலந்து கொண்டால், காரியத்தடை நீங்கும் என்பது ஐதீகமாக உள்ளது.

News March 1, 2025

கொலை முயற்சி குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் சிறை

image

தேனி அல்லிநகரம் பகுதியை சேர்ந்தவர் தினேஷ்குமாா். இவரை முன்விரோதம் காரணமாக 2024-ம் ஆண்டு தீபக் என்பவர் கத்தியால் குத்தி உள்ளார். அவரை போலீசார் கைது செய்த நிலையில் இந்த வழக்கு விசாரணை தேனி கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் வழக்கின் தீர்ப்பாக நேற்று (பிப்.28) தீபக்குக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி கோபிநாதன் தீா்ப்பளித்தார்.

News February 28, 2025

தேனி மாவட்ட இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

image

தேனி மாவட்டத்தில் இன்று (பிப்.28) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!