Theni

News September 23, 2025

தேனி: அரசு மருத்துவமனை-ல பிரச்சனையா..!

image

தேனி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் சுகாதார நிலையங்களில் பெட் இல்லை, சிகிச்சைகள் சரியா தரத்தில் இல்லை என புகார் எழுதா?? இனிமே நீங்க செல்லும் போது இது நடந்தா?? தயங்கமா தேனி மாவட்ட சுகாதார அதிகாரிக்கு 04546-250387 – 2614034 அழைத்து தெரியப்படுத்துங்க.. உங்க புகார்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்கபடும்.இதை மற்றவர்களுக்கு தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க, மறக்காம நீங்க SAVE பண்ணுங்க..

News September 23, 2025

தேனி: இலவச வீட்டு மனை வேண்டுமா?

image

தேனி மக்களே; தமிழக அரசால் இலவச வீட்டு மனை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 10 ஆண்டுகளாக ஒரே ஊரில் வசிக்கும் நிலம் இல்லாதவர்களுக்கு இலவச வீட்டு மனை வழங்கப்படுகிறது. இதுபற்றி உங்கள் பகுதி VAO விடம் கேட்டறிந்து, கலெக்டர் அலுவலகம் அல்லது வட்டாசியர் அலுவலகத்தில் சென்று விண்ணப்பிக்கலாம். இந்த நல்ல தகவலை நண்பர்களுக்கு SHARE பண்ணி உதவுங்க.

News September 23, 2025

தேனி: அரசு டாக்டரை பணி செய்ய விடாமல் தடுத்தவருக்கு சிறை

image

பெரியகுளம் மாவட்ட அரசு மருத்துவமனையில் டாக்டர்களை ஆபாசமாக பேசி, பணி செய்யவிடாமல் தடுத்ததாக கூறி பெரியகுளம் தி.மு.க., நகர துணை செயலாளர் சேதுராமன் மீது தென்கரை போலீசார் 2022.ல் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை தேனி மாவட்ட உதவி அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் வழக்கின் தீர்ப்பாக நேற்று (செப்.22) சேதுராமனுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி சந்திரசேகர் தீர்ப்பளித்தார்.

News September 23, 2025

தேனி மாவட்ட இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

image

தேனி மாவட்டத்தில் இன்று 22.09.2025 இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை போடி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சுனில் தலைமையில் இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.

News September 22, 2025

தேனி: கழிவறையில் மயங்கி விழுந்து முதியவர் உயிரிழப்பு

image

கம்பம் பகுதியை சேர்ந்தவர் கண்ணப்பன் (77). இவருக்கும் இவரது மகனுக்கும் நேற்று முன் தினம் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக சண்டை வந்துள்ளது. இதனால் கோபித்துக் கொண்ட கண்ணப்பன் சாப்பிடாமலும் உடல் நல குறைபாட்டுக்கான மாத்திரைகள் உண்ணாமலும் இருந்துள்ளார். இதனால் நேற்று (செப்.21) வீட்டு கழிவறையில் மயக்கம் அடைந்த அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் உயிரிழந்தார். கம்பம் போலீசார் விசாரணை.

News September 22, 2025

தேனி: வீட்டு, குடிநீர் வரி கட்டுபவர்கள் கவனத்திற்கு!

image

தேனி மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகை மற்றும் வரி செலுத்த, செலுத்திய வரி விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். வீட்டிலிருந்தே <>இங்கே க்ளிக் செய்து<<>> அனைத்து சேவையையும் பெறலாம். மேலும் விவரங்களுக்கு 98849 24299 என்ற எண்ணை அழைக்கலாம். இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News September 22, 2025

தேனியில் 100 லிட்டர் மதுபானம் பறிமுதல்

image

தேவிகுளம் கலால்துறை இன்ஸ்பெக்டர் விஷ்ணு தலைமையிலான போலீசார் பாலசுப்பிரமணியன், சிஜூடேனியல் கொண்ட குழு நேற்று முன்தினம் இரவு சைலன்ட்வாலி ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியில் வந்த ஆட்டோவை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் சட்டவிரோதமாக விற்பனை செய்ய 100 லிட்டர் மதுபானங்கள் கொண்டு சென்றது தெரியவந்தது.அவர்களிடமிருந்து , ஆட்டோ, 2 அலைபேசிகள், ரூ.1200 ஆகியவை கைப்பற்றப்பட்டன.

News September 22, 2025

தேனியில் தந்தையை தாக்கிய மகன், மருமகள் மீது வழக்கு

image

தேனியை சேர்ந்தவர் செல்வம். சொத்து தகராறு காரணமாக இவரது மகன் முத்துராஜா, அவரது மனைவி ஹேமலதா இணைந்து சில நாட்களுக்கு முன் செல்வத்தை தாக்கினர். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நேரத்தில் வீட்டின் பூட்டை உடைத்து பணம் ரூ.22,500, ரூ.40,000 மதிப்பிலான பொருட்களை முத்துராஜா, ஹேமலதா எடுத்துச் சென்றனர். இது குறித்த புகாரில் தம்பதியர் மீது தேனி போலீசார் நேற்று (செப்.21) வழக்கு பதிவு.

News September 22, 2025

தேனி: மழை நெருங்குது! – மக்களுக்கு அறிவுரை

image

தேனியில் மழைக்கால மின்விபத்துகளை தடுக்க பாதுகாப்பு அறிவுரை:
1.அறுந்த கம்பிகள், கம்பங்கள் அருகில் செல்வதை தவிர்க்கவும்.
2.இடி, மின்னலின்போது வெட்டவெளி, மரத்தடி, செல்போன் பயன்படுத்த வேண்டாம்.
3.சுவர்களில் தண்ணீர் கசிவு இருந்தால் மின்சாதனங்களை தவிர்க்கவும்.
அவசர உதவிக்கு 9445859032, 9445859033, 9445859034 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க.

News September 22, 2025

தேனியில் மாரடைப்பு ஏற்பட்டு ஏட்டு பலி

image

கண்டமனுாரை சேர்ந்தவர் விஜயராகவன் 38.ஆண்டிபட்டி போலீஸ் ஸ்டேஷனில் டூவீலர் ரோந்து பிரிவில் ஏட்டாக பணியாற்றினார். நேற்று காலை 6:30 மணிக்கு வீட்டில் துாங்கி எழுந்தவர், உடல் நலம் பாதித்து சோர்வாக இருந்த சில நிமிடங்களில் மயக்கம் அடைந்து, இறந்தார். போலீஸ் பணியில் 2009 மார்ச் 1ல் சேர்ந்த விஜயராகவனுக்கு லிங்கம்மாள் என்ற மனைவி, ஹரிஷ் ராகவன் 8, லோஹித் ராகவன் 6, இரு மகன்கள் உள்ளனர்.

error: Content is protected !!