Theni

News April 24, 2024

7 ஆண்டுகள் சிறை தண்டனை

image

குள்ளப்புரம் பகுதியை சேர்ந்த சித்திரன் என்பவரை முன்விரோதம் காரணமாக 2022-ம் ஆண்டு கொலை செய்ய முயன்ற வழக்கில் துரைப்பாண்டி, பரமன், பெரியபாண்டி ஆகியோர் ஜெயமங்கலம் போலீசாரால் கைது செய்யபட்டு வழக்கு விசாரணை பெரியகுளம் உதவி அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கின் தீர்ப்பாக நேற்று (ஏப்.22) துரைப்பாண்டி, பெரியபாண்டி , பரமன் ஆகியோருக்கு தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்

News April 24, 2024

கோரிக்கையை நிறைவேற்றிய தேனி கலெக்டர்

image

பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கம் தலைமையில் பல அமைப்புகள் இணைந்து மாவட்ட நிர்வாகத்திற்கு வைத்த கோரிக்கையை ஏற்று கண்ணகி கோவில் திருவிழாவை மாவட்ட நிர்வாகம் நடத்துவது என முடிவெடுத்தது. அதற்காக அந்த அமைப்பினர் இன்று மாவட்ட ஆட்சியருக்கு பாராட்டுகளும், வாழ்த்துகளும் கூறினர். லோயர் கேம்பில் இருந்து கண்ணகி கோவில் வரை பாதை அமைத்து கொடுக்க கோரிக்கை வைத்தனர்.

News April 24, 2024

கண்ணகி கோயிலுக்கு செல்ல பாதை அமைக்க கோரிக்கை

image

தமிழ்நாடு கேரள எல்லையில் அமைந்துள்ள கண்ணகி கோயிலுக்கு செல்வதற்கு பாதை அமைத்து தர வேண்டுமென கோரிக்கை மனு அளித்தனர். பெரியார் வைகை பாசன விவசாயிகள் சங்கம் மற்றும் விசிக சார்பில் மனு அளிக்கப்பட்டது. விவசாய சங்க தலைமை பொறுப்பாளர் சலேத், பொன்காட்சி கண்ணன் மற்றும் ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

News April 24, 2024

தேனியில் அடுத்த 3 மணி நேரத்திற்கு

image

தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தேனி, மாவட்டத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. எனவே, தேனி, உத்தமபாளையம், ஆண்டிபட்டி, போடி உள்ளிட்ட பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 24, 2024

உத்தமபாளையம்: செயல் விளக்கம் அளித்த மாணவி

image

தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவி‌, வாழை நுண்ணுயிர் ஊட்டச்சத்து கலவை குறித்து அப்பகுதி விவசாயிகளுக்கு செயல் விளக்கம் அளித்தார். அதனைத் தொடர்ந்து நுண்ணுயிர் ஊட்டச்சத்து கலவையின் முக்கியத்துவத்தையும் அதனால் ஏற்படும் நன்மைகளையும் பற்றி விளக்கமளித்தார். இதனால் ஏராளமான விவசாயிகள் பயனடைந்தனர்

News April 22, 2024

தேனி: காவல் நிலையத்தை அணுகவும்

image

படத்தில் காணப்படும் இந்த சிறுவன் கம்பத்திலிருந்து வெட்டுக்காடு சென்ற பேருந்தில், கம்பத்தில் இருந்து ஏறி காஞ்சி மரத் துறையில் இறங்கி உள்ளார். இவனால் வாய் பேச முடியவில்லை, பெயர் விலாசம் கூற இயலவில்லை. தகவல் தெரிந்தவர்கள் குமுளிகாவல் நிலையத்தை அணுகவும் 9498101596,
9444915191 என்ற அலைபேசி எண்களை தொடர்பு கொள்ள வேண்டுமென குமுளி காவல் நிலையம் சார்பாக வேண்டுகோள் விடப்பட்டுள்ளது.

News April 22, 2024

மங்கலதேவி கண்ணகி கோயிலில் ஆட்சியா் ஆய்வு

image

தமிழக கேரள எல்லையில் உள்ள மங்கலதேவி கண்ணகி கோயிலில் வரும் 23-ம் தேதி சித்திரை முழு நிலவு விழா நடைபெறுகிறது. அதற்கான முன்னேற்பாடுகள் செய்வதற்காக தேனி ஆட்சியா் ஷஜீவனா நேற்று (ஏப்.21) கண்ணகி கோயிலுக்குச் சென்றாா். அங்கு கோயிலை சுற்றி பாா்த்து ஆய்வு செய்தாா். பின்னா், இந்து அறநிலையத் துறை மூலம் செய்ய வேண்டிய ஏற்பாடுகள் குறித்தும், கூடலூா் சாா்பில் செய்யபட வேண்டிய பணிகள் குறித்தும் அறிவுறுத்தினார்.

News April 21, 2024

தினகரனை சந்தித்த பேரூராட்சி தலைவர்

image

தேனியில் அமமுக பொதுச்செயலாளர் TTV தினகரன் தேனி அருகே அல்லிநகரம் காவல் நிலையம் அருகில் தங்கி உள்ளார். இந்நிலையில் போடி அருகே மீனாட்சிபுரம் சேர்மன் S. திருப்பதி அவரது இல்லத்திற்கு சென்று நேரில் சந்தித்தார். பின்பு நடந்து முடிந்த மக்களவைத் தேர்தல் வெற்றி வாய்ப்பு குறித்து ஆலோசித்தார். சேர்மன் திருப்பதி ஓபிஎஸ் அணியினை சேர்ந்தவர் ஆவார்.

News April 21, 2024

தேனி: ஓட்டு போட சென்ற பெண் பலி

image

தேனி மாவட்டம் சில்வார்பட்டியைச் சேர்ந்தவர் தமிழ்ச்செல்வி. இதய நோயால் பாதிக்கப்பட்டு தினமும் தவறாமல் மருந்து சாப்பிட்டு வந்தார். கடந்த 19ஆம் தேதி ஓட்டு போடுவதற்காக சென்றபோது இதய நோய்க்கான மாத்திரை சாப்பிடாமல் சென்றுள்ளார். இந்நிலையில், உடல்நலம் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று அவர் உயிரிழந்தார்.

News April 21, 2024

நோயாளிகளுக்கு, உணவு வழங்கல்

image

பெரியகுளம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் இயங்கி வரும் மனநல சிகிச்சை பிரிவு நோயாளிகளுக்கு, இன்று காலை உணவினை தன்னார்வலர் இன்சூரன்ஸ் பால்ராஜ் குடும்பத்தின் சார்பில் பரிமாறினர். இந்நிகழ்வின் போது, நூலக ஆர்வலர் அன்புக்கரசன் உள்ளிட்ட தன்னார்வலர்கள் பலர் கலந்து கொண்டு, உணவினை பரிமாறினர். இதற்கு அரசு மருத்துவமனை நிர்வாகத்தின் சார்பில் நன்றி தெரிவித்தனர்.

error: Content is protected !!