India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு பின்புறத்தில் உள்ள அரசுக்கு சொந்தமான 182 ஏக்கர் நிலத்தை பட்டா போட்டு விற்பனை செய்த வழக்கில் அரசு அதிகாரிகள் உட்பட பலர் மீது சிபி சிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கு தொடர்பாக நேற்று வடபுதுபட்டியைச் சேர்ந்த நரேஷ் குமாரை(32) போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டத்தின் கீழ் முன்னாள் படை வீரர்கள், உயிர் நீத்த படைவீரர்களின் கைம் பெண்கள் புதிதாக தொழில் துவங்க ரூ.1 கோடி வரை கடன் பெற்று பயனடையாளம் விரிவான திட்ட விவரங்களுடன் முன்னாள் படை வீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்திற்கு அக்.10க்குள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.

தேனி மாவட்டத்தில் பெரியகுளம், போடி, வருஷநாடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் எலுமிச்சை சாகுபடி செய்யப்பட்டு வருகின்றது. மே, ஜூன் மாதங்களில் எலுமிச்சை விளைச்சல் அதிகமாக காணப்பட்டதன் காரணமாக கிலோ ரூ.80 முதல் 100 வரை விற்கப்பட்டது. தற்போது எலுமிச்சையில் ஏற்பட்ட வைரஸ் நோய் தாக்குதலால் விளைச்சல் மிகவும் குறைந்துள்ளது. இதன் காரணமாக தற்போது எலுமிச்சை விலை உயர்ந்து கிலோ ரூ.200க்கு விற்கப்பட்டு வருகிறது.

தேனியை சேர்ந்த 20 வயது இளம் பெண்ணிடம் இன்ஸ்டாகிராம் செயலி மூலம் ஆகாஷ் என்பவர் பழக்கமானார். இருவரும் நட்பாக பழகிய நிலையில் ஆகாஷ் அவரிடம் திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தினார். இதற்கு அந்த பெண் மறுக்கவே இளம்பெண் தன்னிடம் பேசிய சில ஆடியோ பதிவுகளை பதிவேற்றி பொது வெளியில் ஆகாஷ் வெளியிட்டார். இதுகுறித்த புகாரில் தேனி சைபர் கிரைம் போலீசார் ஆகாஷை (செப்.19) கைது செய்தனர்.

தேனி மாவட்ட தொழில்நெறி வழிகாட்டுதல் மைய அலுவலகம் வளாகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் செப்.20ஆம் தேதி காலை 10 மணி அளவில் நடைபெற உள்ளதாக தேனி மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா தெரிவித்துள்ளார். எனவே இந்த முகாமில் 10, 12, பட்டயப்படிப்பு மற்றும் இளநிலை, முதுநிலை பட்டப்படிப்பு படித்தவர்கள் மற்றும் தையல் பயிற்சி முடித்தவர்கள் கலந்துகொண்டு பயன்பெறுமாறு தெரிவித்துள்ளார்.

தேனியில் தொழில் முனைவோர் மற்றும் புத்தாக்க பயிற்சிக்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா தெரிவித்துள்ளார். புதிதாக தொழில் தொடங்க விருப்பமுள்ள 21 முதல் 40 வயதுக்குட்பட்ட இளம் பட்டதாரிகள் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம். பயிற்சிக்கான நேர்காணல் இம்மாத இறுதியில் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 8668107552, 8668101638 எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

சுக்குவாடன்பட்டி தனியார் நிதி நிறுவன மேலாளர் மணிகண்டன், வடபுதுபட்டி பிரேமாவிடம் நிறுவனத்தில் முதலீடு செய்தால் பல லட்சம் கிடைக்கும் என ஆசை வார்த்தைகளை கூறி அவரிடம் ரூ.72 லட்சத்தை பெற்றுக் கொண்டு ஏமாற்றியதாக பிரேமா தேனி மாவட்ட குற்ற பிரிவில் புகார் அளித்தார். விசாரணையில் அவர் ரூ.99.50 லட்சம் மோசடி செய்தது தெரிய வந்ததையடுத்த மணிகண்டனை கைது செய்த போலீசார் இன்று சரவணன், பாலக்குமாரை சிறையில் அடைத்தனர்.

ஆண்டிப்பட்டி அருகே உள்ள மரிக்குண்டு ஊராட்சிக்கு உட்பட்ட எருதி மக்கள் பட்டி கிராமத்தில் கடந்த 10 தினங்களாக குடிநீர் சரியாக வழங்கப்படவில்லை எனக் கூறி அப்பகுதி கிராம மக்கள் சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் தெரிந்து வந்த ராஜதானி காவல்துறையினர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக குடிநீர் வழங்கப்படும் என உறுதி அளித்த நிலையில் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பு காரணமாக சிறுவன் உயிரிழந்ததன் எதிரொலியாக தமிழக – கேரள எல்லையான கம்பம் மெட்டு, லோயர்கேம்ப் பகுதிகளில் தேனி மாவட்ட வட்டார வளர்ச்சி அலுவலரின் தலைமையில் சுகாதாரத்துறையினர் கேரளாவில் இருந்து தமிழகம் வரும் வாகனங்களில் வருபவர்களுக்கு நிபா வைரஸ் காய்ச்சல் உள்ளதா என சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதில் தீவிர சோதனைக்கு பிறகே வாகனங்கள் அனுமதிக்கப்படுகிறது.

தேனி மாவட்டம் கம்பம் வனப்பகுதியில் உள்ள புளிய மரங்களை உரிய அனுமதியின்றி கேரள மாநிலத்திற்கு லாரியில் ஏற்றிச்செல்லும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. கம்பம் வனப்பகுதியில் வனத்துறையினரின் சோதனைச் சாவடி இருந்தும் இதுபோன்ற நிகழ்வுகள் தொடர்ச்சியாக நடப்பதாக அப்பகுதி மக்களும் சமூக ஆர்வலர்களும் குற்றம் சாட்டுகின்றனர்.
Sorry, no posts matched your criteria.