Theni

News March 26, 2024

அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

image

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அதிமுக அலுவலகத்தில் தேனி பாராளுமன்ற தொகுதி போட்டியிடும் அதிமுக வேட்பாளர் T.நாராயணசாமி வெற்றிக்காக இன்று 26.3.2024 அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தேனி மாவட்ட செயலாளர் முருக்கோடை இராமர் தேர்தலில் வெற்றி பெறுவது குறித்தும் தேர்தல் பணிகள் எவ்வாறு செய்வது குறித்தும் நிர்வாகிகள் கூட்டத்தில் உரையாற்றினர்.

News March 26, 2024

தேனியில் ரூ.3 லட்சம் பறிமுதல்

image

கம்பம் லோயர்கேம்ப் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் நேற்று (மார்.25) சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த காரை சோதனை செய்ததில் கேரளா பகுதியை சேர்ந்த நபரிடம் ரூ.2 லட்சமும், கோட்டயம் பகுதியைச் சேர்ந்த நபரிடம் ரூ.1 லட்சமும் உரிய ஆவணங்களின்றி இருப்பது தெரியவந்தது. அதனை பறிமுதல் செய்த அதிகாரிகள் பணத்தினை சார் கருவூலத்தில் ஒப்படைத்துள்ளதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News March 26, 2024

கூட்டத்துக்கு இடையே மாட்டு வண்டியை செலுத்தியவர் கைது

image

போடியில் நேற்று முன்தினம்(மார்.24) அ.ம.மு.க பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பிரச்சாரம் செய்ய வருகை புரிந்தார். அவரை வரவேற்பதற்காக போடி சாலை காளியம்மன் பகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி தொண்டர்கள் காத்திருந்தனர். அப்போது கூட்டத்துக்கு இடையே போடியை சேர்ந்த கருப்பையா என்பவர் உயிருக்கு ஆபத்து ஏற்படும் வகையில் மாட்டு வண்டியை ஓட்டி வந்துள்ளார். இது குறித்து போடி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

News March 25, 2024

தேனி: நிர்வாகிகளை சந்தித்த வேட்பாளர்

image

தேனி மக்களவை தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் நாராயணசாமி இன்று மரியாதை நிமித்தமாக அகில இந்திய ஃபார்வர்டு பிளாக் கட்சியின் தேனி மாவட்ட செயலாளர் எம்.பி.எஸ் முருகனை கட்சி அலுவலகத்தில் நேரில் சந்தித்து பேசினார்.  இந்நிகழ்வின் போது, அதிமுக (கிழக்கு) மாவட்ட கழக செயலாளர் முருக்கோடை இராமர், தேனி நகர செயலாளர் வழக்கறிஞர் கிருஷ்ணகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

News March 25, 2024

தேனி: வேட்புமனு தாக்கல் செய்த முதல் வேட்பாளர்

image

தமிழகம் முழுவதும் இன்று வேட்பு மனு தாக்கல் வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது. தேனி  தொகுதியில் பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் போட்டியிடும் நிலையில், இன்று (மார்.25) தேனி மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் ஷஜீவனாவிடம் வேட்பு மனு தாக்கல் செய்யும் முதல் நபராக சுயேச்சை வேட்பாளர் ஆதிமுத்துக்குமார் தனது ஆதரவாளர்களுடன் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

News March 25, 2024

தேனி: முதல்வர் வருகை: அதிரடி ஆய்வு

image

தேனி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வனை ஆதரித்து முதல்வர் ஸ்டாலின் தேனியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள வருகை தருவதை முன்னிட்டு, பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தினை வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன், தெற்கு மாவட்ட செயலாளர் கம்பம் ராமகிருஷ்ணன், எம்எல்ஏ மகாராஜன் சரவணக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டு ஆய்வு செய்தனர்.

News March 25, 2024

62 அடியாக குறைந்த நீர்மட்டம்

image

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே அமைந்துள்ள வைகை அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக போதிய மழை இல்லாத காரணத்தால் அணைக்கு நீர்வரத்து மிகவும் குறைந்தது இதனால் அணையின் நீர்மட்டம் படிப்படியாக குறைந்து வந்தது இந்த நிலையில் இன்று நிலவரப்படி வைகை அணையின் நீர்மட்டம் 63.19 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து 462 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.‌

News March 25, 2024

தேனி நபருக்கு ஏற்பட்ட சோகம்

image

கோவை பூண்டி வெள்ளியங்கிரி மலை தரிசனத்திற்கு பக்தர்கள் தினந்தோறும் ஆயிரக்கணக்கில் சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் பங்குனி உத்திரத்தை ஒட்டி இன்று அதிகாலை வெள்ளியங்கிரி யாத்திரை சென்ற தேனி மாவட்டத்தை சேர்ந்த பாண்டியன் (40) மயங்கி விழுந்து உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News March 25, 2024

தேர்தல் விழா: வேட்புமனு தாக்கல்

image

மக்களவைத் தேர்தலையொட்டி, வேட்புமனு தாக்கல் மார்ச் 20இல் தொடங்கிய நிலையில் மார்ச் 27ஆம் தேதி நிறைவுபெறுகிறது. இந்நிலையில், இன்று (மார்ச் 25) திமுக, அதிமுக, பாஜக, தேமுதிக, காங். உள்ளிட்ட முக்கியக் கட்சிகளின் வேட்பாளர்கள் 40 தொகுதிகளிலும் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்வர் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு தாக்கல் செய்யும்போது வேட்பாளருடன் சேர்த்து 5 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

News March 25, 2024

தேனி : இந்து முன்ணணி சார்பில் ஆலோசனை கூட்டம்

image

ஆண்டிபட்டி தாலுகா கடமலைக்குண்டு அருகே மயிலாடும்பாறையில் நேற்று ஹிந்து முன்னணி சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தேனி வடக்கு மாவட்டம் கடமலை மயிலை ஒன்றிய பொறுப்பாளர்கள பங்கேற்ற இந்த கூட்டத்தில் இந்து முன்ணனி சார்பில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை குறித்து ஆலோசனை நிகழ்த்தப்பட்டது இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய செயற்குழு பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்

error: Content is protected !!