India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அணைக்கரை பட்டியைச் சேர்ந்தவர் சின்னசாமி ராஜா. இவர் தோட்டத்திற்கு செல்வதற்காக தனது டூவீலரில் தேனி போடி மெயின் ரோட்டில் வந்து கொண்டிருந்தார். பங்காரு சாமிகுளம் தரைப்பாலம் அருகே வந்தபோது பின்னால் வேகமாக வந்த ஜீப் இவரின் டூவீலர் மீது மோதியது. இதில் கீழே விழுந்த சின்னசாமி ராஜாவின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இதுகுறித்து போடி தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியான கண்ணியப்பிள்ளைபட்டி, பிச்சம்பட்டி,கதிர் நரசிங்கபுரம் போன்ற பகுதிகளில் மல்லிகை பூ சாகுபடி செய்து வருகின்றனர். இந்த நிலையில் மல்லிகைப் பூக்களில் கருகல் நோய் ஏற்பட்டு பூக்கள் பாதிக்கப்படுவதால் மல்லிகை பூக்களின் வரத்து குறைந்து வருவதால் பூ விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
தேனி மாவட்டத்தில் பழங்குடியின மக்கள் வசிக்கும் கிராமத்தில் 2024 மக்களவை தேர்தலை முன்னிட்டு 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து மின்னணு திரை வாகனத்தின் மூலம் விழிப்புணர்வு குறும்பு படம் திரையிடப்பட்டது. அதனை, மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் ஆட்சியர் சஜீவனா பழங்குடியினர் மக்களுடன் அமர்ந்து குறும்படத்தை பார்வையிட்டார்.
ஆண்டிபட்டி 6வது வார்டு அதிமுக ஒன்றிய கவுன்சிலர் தர்மராஜ் இன்று மாலை 5.30மணி அளவில் அதிமுகவிலிருந்து விலகி அமமுக தேனி வடக்கு மாவட்ட செயலாளர் காசிமாயன் முன்னிலையில் தேனியில் உள்ள அவரது வீட்டிற்கு நேரில் சென்று அமமுகவில் இணைத்துக் கொண்டார். இந்நிகழ்ச்சியில் உடன் மாவட்டத் துணைச் செயலாளர் ரவிக்குமார், உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மக்களவை தேர்தல் தொடர்பாக, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் பொறுப்பு அலுவலர்களுடனான ஆலோசனைக்
கூட்டம் இன்று ஆட்சியர் ஷஜீவனா
தலைமையில் நடைபெற்றது. உடன், தேர்தல் பொது பார்வையாளர் கௌரங் பாய் மக்வானா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவ பிரசாத், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் இருந்தனர்.
ஆண்டிப்பட்டி அருகே கொண்டம்ம நாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்த மச்சக்காளை – சத்தியா தம்பதி. இந்நிலையில், மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்ட மச்சக்காளை நேற்று மாலை வீட்டில் இருந்த அருவாமனையால் மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்ய முயற்சித்துள்ளார். அப்போது சத்யாவின் அலறல் சத்தத்தை கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு தேனி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
தேனி மாவட்டம் சீலையம்பட்டியை மையமாகக் கொண்டு முல்லைப் பெரியாறு ஆறு உள்ளது. அருகிலுள்ள கிராமங்களில் இருந்து இளைஞர்கள் கோடைகால விடுமுறையை ஆனந்த குளியல் இட்டு கழிக்கின்றனர். பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என்பதால், அனைத்து இளைஞர்களும் இங்கு வந்து ஆனந்த குளியல் இடுகின்றனர். வீரபாண்டி ஸ்ரீ கௌமாரியம்மன் கோயில் திருவிழா சித்திரைத் தொடங்கப்பட இருப்பதால் தண்ணீர் வரத்து சற்று மிக குறைவாக உள்ளது.
சின்னமனூர் நகராட்சியில் சொக்கநாதபுரம் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை, மகன் என மூவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மூன்று பேரின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக சின்னமனூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
போடியை சேர்ந்த கிருஷ்ணன் என்பவர் சிறுமியை திருமணம் செய்த வழக்கில் கடந்த 2020 ஆம் ஆண்டு போலீசார் கைது செய்தனா். வழக்கு விசாரணை தேனி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி குற்றஞ்சாட்டப்பட்ட கிருஷ்ணனுக்கு குழந்தை திருமண தடை சட்டம், குழந்தைகளை பாலியல் குற்றங்களிலிருந்து பாதுகாக்கும் சட்டத்தின் கீழ் 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.
தேவாரம் தே. மேட்டுப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன், (47). இவர் கேரளா பகுதியில் ஏலத் தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து நடத்தி வந்தார். தொழிலில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அதே வேளையில் அவரது மனைவி முருகேஸ்வரி கோபித்து சென்று விட்டதாக கூறப்படுகிறது.. இதனால் மனம் உடைந்த கண்ணன் நேற்று முன்தினம் பூச்சி மருந்து குடித்துள்ளார். உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் நேற்று உயிரிழந்தார்.
Sorry, no posts matched your criteria.