Theni

News January 20, 2026

தேனி: NO EXAM.. ரூ.58,000 சம்பளத்தில் அரசு வேலை ரெடி!

image

தமிழ்நாடு சுகாதார துறையில் (TN MRB) காலியாக உள்ள 999 Nursing Assistant பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. சம்பளம் ரூ.15,700 – ரூ.58,100 வரை வழங்கப்படும். இதற்கு 10th, Nursing Assistants course முடித்தவர்கள் பிப்.8க்குள் இங்கு <>க்ளிக் செய்து<<>> விண்ணப்பிக்கலாம். தேர்வு கிடையாது. மார்க் அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். இந்த தகவலை வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க

News January 20, 2026

தேனி: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

image

1.முதலில் <>http://cmcell.tn.gov.in<<>> என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்
2. பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்பதை க்ளிக் செய்து, உங்களுக்கான ID-ஐ உருவாக்க வேண்டும்.
3. இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4. பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க

News January 20, 2026

தேனியில் இளம் பெண் தற்கொலை..!

image

தேனி பகுதியை சேர்ந்தவர் கார்த்திகா (27). இவருக்கு அவ்வப்போது தீராத வயிற்று வலி ஏற்பட்டு அதற்கு சிகிச்சை எடுத்தும் பலனளிக்காத காரணத்தினால் வலியின் வேதனையில் இருந்து வந்த கார்த்திகா சில தினங்களுக்கு முன்பு விஷ விதைகளை சாப்பிட்டுள்ளார். அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் நேற்று முன்தினம் (ஜன.18) அவர் உயிரிழந்தார். இது குறித்து அல்லிநகரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

News January 19, 2026

தேனி மாவட்ட இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

image

தேனி மாவட்டத்தில் இன்று 19.01.2026 இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.

News January 19, 2026

தேனி: இனி தாலுகா ஆபிஸ் அலையாதீங்க!

image

ரேஷன் கார்டில் உங்க புது உறுப்பினர்களை சேர்க்கனுமா? இதற்கு தாலுகா அலுவலகங்கள் அலைய வேண்டியதில்லை. உங்க போனிலே புது உறுப்பினர்களை சேர்க்கலாம்.
1.இங்கு <>க்ளிக்<<>> பயணர் உள்நுழைவில்’ ரேஷனில் இணைக்கபட்ட மொபைல் எண் பதிவு.
2. அட்டை பிறழ்வுகள் -ஆ தேர்ந்தெடுங்க
3. உறுப்பினர் சேர்க்கை தேர்வு செய்து உறுப்பினர்களின் விவரங்கள் பதிவு செய்யுங்க..
7 நாட்களில் உறுப்பினர் சேர்க்கை பணி முடிந்துவிடும். SHARE பண்ணுங்க.

News January 19, 2026

தேனி: உங்க பெயரை மாற்றனுமா? SUPER CHANCE

image

தேனி மக்களே, உங்க பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு, பிறப்பு சான்று, பள்ளி கல்லூரி இறுதி சான்றிதழ் நகல், ஆதார் அட்டை நகல், வாக்காளர் அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை ஆகியவற்றுடன் விண்ணப்பிக்கலாம். இங்கே <>கிளிக்<<>> செய்து தமிழில் பெயர் மாற்ற ரூ.150, ஆங்கில பெயர் மாற்ற ரூ.750 கட்டணம் செலுத்தி விருப்பமான பெயரை மாற்றிகொள்ளலாம். நல்ல தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க

News January 19, 2026

தேனி : ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு பெறுவது எப்படி?

image

தேனி மக்களே மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ. 5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம்
1. <>pmjay.gov.in<<>> இணையதளத்தில் ரேஷன்&ஆதார் கார்டு
உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்
2.விண்ணப்பித்த 10 – 15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும்.
உங்கள் அருகில் உள்ள இ சேவை மையங்களிலும் விண்ணப்பிக்கலாம். அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க

News January 19, 2026

தேனியில் FREE வக்கீல் சேவை..! தெரிஞ்சிக்கோங்க…

image

தேனி மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது. இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம்
1.தேனி மாவட்ட இலவச சட்ட உதவி மையம்: 04546-291566
2.தமிழ்நாடு அவசர உதவி: 04563-260310
3.Toll Free 1800 4252 441
4.சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126
இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News January 19, 2026

தேனி: 2 வயது குழந்தை மற்றும் பெண் சென்ற பைக் விபத்து

image

ஒடிசா மாநிலத்தை சேர்ந்த அபினாஷ் என்பவர் ஓடைப்பட்டி பகுதியில் அவரது மனைவி மற்றும் 2 வயது குழந்தையுடன் தங்கி வேலை செய்து வருகின்றார். தம்பதியர் நேற்று (ஜன.18) பைக்கில் குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்து சென்று விட்டு திரும்பிய பொழுது அடையாளம் தெரியாத பைக் இவர்களது பைக் மீது மோதியது. இந்த விபத்தில் குழந்தை மற்றும் தாயார் படுகாயம் அடைந்தனர். விபத்துக்குறித்து ஓடைப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு.

News January 19, 2026

தேனி மன உளைச்சலால் இளைஞர் தற்கொலை

image

கண்டமனூர் பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ் (23). இவர் அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவரை காதலித்த நிலையில் அவர் 3 மாதங்களுக்கு முன்பு உயிரிழந்தார். இறப்பிற்கு விக்னேஷ் தான் காரணம் எனக்கூறி போலீசார் அவரை கைது செய்து சிறை சென்று வெளியே வந்துள்ளார். இதனால் ஏற்பட்ட மன உளைச்சலால் விக்னேஷ் நேற்று (ஜன.18) அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து கண்டமனூர் போலீசார் வழக்கு பதிவு.

error: Content is protected !!