India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தேனி மாவட்டத்தில் இன்று (அக்.25) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளது.

கனமழை காரணமாக தேனியில் நாளை அனைத்து வகையான பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்து ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஏற்கனவே அரசுப் பள்ளிக்கு விடுமுறை விடப்பட்ட நிலையில், தனியார் பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

வருசநாடு பகுதியைச் சேர்ந்தவர் பாலமுருகன். இவர் கடந்த 2020ஆம் ஆண்டு 14 வயது சிறுமிக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு செய்துள்ளார். இது குறித்து காவல்துறையினர் பாலமுருகனை கைது செய்தனர். மேலும் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள சிறப்பு போக்சோ நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தனர். இந்த வழக்கில் இன்று (அக்.25) பாலமுருகனுக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

தேனி மாவட்டம் கால்நடை தீவனப் பயிர் வளர்ப்பு மற்றும் புல் நறுக்கும் கருவி வழங்கும் திட்டத்தின் கீழ் பயன்பெற விருப்பம் உள்ள விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் ஷஜீவனா இன்று (அக்.25) தெரிவித்துள்ளார். தங்கள் வளர்க்கும் கால்நடைகளின் விவரங்கள் அடங்கிய விண்ணப்பங்களை அந்தந்த பகுதியில் உள்ள கால்நடை மருத்துவ நிலையத்தில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓய்வூதியர்களுக்கு வீடு தேடி வந்து டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழ் வழங்கும் திட்டத்தில் பயன்பெறலாம். இச்சேவையை பெற விரும்பும் ஓய்வூதியதாரர்கள் அருகில் உள்ள தபால் நிலையங்களை தொடர்பு கொள்ளலாம். மேலும் https://ccc.cept.gov.in/servicerequest/request.aspx என்ற இணைய முகவரி மூலமும், Postinfo செயலியை பதிவிறக்கம் செய்தும் கோரிக்கையை பதிவு செய்யலாம் என தேனி கோட்ட தபால்துறை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக இம்மாத தொடக்கத்தில் இருந்து நேற்று(அக்.24) வரை மாவட்டத்தில் மொத்தம் 32 வீடுகள் சேதமடைந்துள்ளன. பகுதி சேதமடைந்த வீடுகளுக்கு அரசு பேரிடர் நிதியில் இருந்து தலா ரூ.4 ஆயிரம் வீதம் 19 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேனி, கம்பம், போடி நகராட்சிகள் உள்பட 12 நகராட்சிகள் அரசு ஹைடெக் நகராட்சிகளாக மதிப்பிடப்பட்டுள்ளன. இந்த 3 நகராட்சிகள் அம்ருத் 2.0 திட்டத்தின் கீழ் நகர அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும் வாய்ப்பு உள்ளது. இதற்காக இத்திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள ஒவ்வொரு நகராட்சிக்கும் பல நூறு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து பல்வேறு அடிப்படைக்கான வசதிகள் நடைபெறும்.

தேனியில் இருந்து பங்களா மேடு செல்லும் சாலையில் உள்ள ஒரு நகைக்கடை அருகே நிறுத்தப்பட்டு இருந்த ஸ்கூட்டர் பைக்கில் 4 அடி நீளம் உள்ள கட்டுவிரியன் பாம்பு பதுங்கி இருந்ததை , தேனி தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் 4 பேர் கொண்ட குழு பாம்பை பத்திரமாக பிடித்து, அருகே உள்ள வனப்பகுதியில் விட்டனர். பைக்கிற்குள் பாம்பு இருந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சென்னை மற்றும் பெங்களூரில் இருந்து மதுரை விமான நிலையத்தில் இன்று(அக்.24) மாலை தரையிறங்க இருந்த இரண்டு இண்டிகோ விமானங்கள் மழையின் காரணமாக நீண்ட நேரமாக வானில் வட்டமடித்து கொண்டிருக்கின்றன. குறிப்பாக மதுரை அருகே உசிலம்பட்டி, தேனி, ஆண்டிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் வட்டமடித்து கொண்டிருக்கின்றன. மழை நின்ற பிறகு விமான நிலையத்தில் விமானங்கள் தரையிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தேனி மக்களவை தொகுதியில் சிறப்பாக பணியாற்றி அதிக வாக்குகள் வித்தியாசத்தில் தேனி எம்.பி தங்கதமிழ் செல்வனை மாபெரும் வெற்றி பெற வைத்த மாண்புமிகு அமைச்சர் மூர்த்தி 5 பவுன் தங்கச் செயினையும், சோழவந்தான் MLA வெங்கடேசன் தங்க மோதிரத்தையும் பரிசாக தேனி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தங்கதமிழ் செல்வன் வழங்கினார்.
Sorry, no posts matched your criteria.