India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் மற்றும் தமிழ்நாடு ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் இணைந்து “Coffee with Collector” என்ற தலைப்பில் தேனி மாவட்டத்தில் உள்ள ஸ்டார்ட்-அப் தொழில் நிறுவனங்களின் முன்னேற்றத்திற்கான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஷஜீவனா தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் அரசு அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.

மருது சகோதரர்களின் தினம் இன்று(அக்.27) அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில் தேனி மாவட்டம் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் தனது முகநூல் பக்கத்தில் தமிழ்நாட்டின் அடையாளமாய்! வீரத்தின் விளைநிலமாய்! ஆங்கிலேய படைகளுக்கு சிம்ம சொப்பனமாய்! திகழ்ந்த மாவீரர்கள் மருது சகோதரர்களின் 223 வது குருபூஜை நாளில் அவர்களின் வீரத்தினையும், புகழினையும் போற்றி வணங்குகிறேன் என தெரிவித்துள்ளார்.

தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், கடந்த 2 நாட்களாக பெய்த கனமழையால் 3 வீடுகள் முழுசேதம் அடைந்தது. 8 வீடுகள் பகுதி சேதம் என மொத்தம் 11 வீடுகள் சேதமடைந்துள்ளது. சேதமடைந்த வீடுகள் குறித்து வருவாய்த்துறையினர் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். மழை பாதிப்பு குறித்து 1077 அல்லது 04546 250101 எண்ணிற்கு 24 மணிநேரமும் தகவல் தெரிவிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் இன்று(அக்.27) ஞாயிற்றுக்கிழமை, தீபாவளி பண்டிகை முன்னிட்டு, ரேஷன் கடைகள் வழக்கம் போல் இயங்கும் என்று அமைச்சர் பெரிய கருப்பன் அறிவித்துள்ளார். எனவே, தேனி மாவட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் ரேஷன் கடைகள் விடுமுறை இல்லை என்பதை நினைவில் கொண்டு, நியாய விலைப் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம். பண்டிகை கால கூட்ட நெரிசலை குறைப்பதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக மேலாளராக பணியாற்றியவர் சந்திரசேகரன். இவரை தேனி மாவட்ட சிப்காட் நில எடுப்பு தாசில்தாராகவும், சிப்காட் நில எடுப்பு தாசில்தாராக பணியாற்றிய சரவணபாபு என்பவரை ஆட்சியர் அலுவலக மேலாளராகவும் நிர்வாக காரணங்களுக்காக இடமாற்றம் செய்து தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா உத்தரவிட்டுள்ளார்.

போடி அருகே உள்ள மூணாறு இங்குள்ள வட்டவடை கிராம பஞ்சாயத்துக்குட்பட்ட கொட்டாகொம்பூர் பகுதியில் ஏராளமான தமிழக விவசாயிகள் வசிக்கிறார்கள். இவர்கள் தங்களது தோட்டங்களில் கேரட், பீன்ஸ் முட்டைக்கோஸ் உள்ளிட்ட காய்கறிகள் மற்றும் பழங்கள் ஆகியவை பயிரிட்டு வந்தனர். இதில் காட்டுப்பன்றி ஒரு பக்கம் பயிர்களை நாசம் செய்தன. மறுபக்கம் குரங்குகளின் கூட்டம் கூட்டமாக 1 ஏக்கர் பரப்பளவில் உள்ள கேரட்டுகளை தின்று நாசமாக்கின.

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நாளை(அக்.27) விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வி.சாலை பகுதியில் கோலாகலமாக நடைபெற உள்ளது. இந்நிலையில் தேனி மாவட்டம் உத்தமபாளையம் ஒன்றிய தமிழக வெற்றிக் கழகத்தின் மாணவரணியின் சார்பில் சுவரொட்டிகள் ஒட்டும் பணிகள் தீவிரமாக நடைபெற்றது.

தேனி மாவட்டம் மாற்றுத்திறனாளிகளுக்கு தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை வழங்குவதற்காக சிறப்பு மருத்துவ முகாம் அக்.28ஆம் தேதி பெரியகுளம் அரசு தலைமை மருத்துவமனையில் நடைபெறவுள்ளதாக தேனி மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா தெரிவித்துள்ளார். இந்த சிறப்பு முகாம் காலை 10 மணி முதல் மதியம் ஒரு மணி வரை நடைபெற உள்ளதால் மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு பயன் பெறுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.(பகிரவும்: SHARE IT)

தேனி மாவட்டத்தில் 2024ஆம் ஆண்டு முதல் 2027ஆம் ஆண்டு வரையிலான ஆதி திராவிடர் நலக்குழு, விழிப்பு, கண்காணிப்புக் குழு நியமிக்கப்பட உள்ளது. இந்தக் குழுக்களில் உள்ள பதவிகளுக்கு தகுதியுள்ளவர்கள் வருகிற நவ.10ம் தேதி மாலை 5 மணிக்குள் தேனி மாவட்ட ஆதி திராவிடர், பழங்குடியினர் நல அலுவலகத்தில் நேரிலும், தபால் மூலமும் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.

தென்காசி, நெல்லை, குமரி, தூத்துக்குடி, மதுரை, தேனி, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம் ஆகிய 9 மாவட்டங்களில் நாளை (அக்.26) கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. தேனி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.